Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காளி கேட்ட காணிக்கை
 
பக்தி கதைகள்
காளி கேட்ட காணிக்கை

காளியப்பன் என்றொரு விவசாயி இருந்தார். காளி பக்தரான அவர், மந்திரம்  ஜபித்து திருநீறு கொடுப்பது வழக்கம்.

அந்த ஊரில் கோடீஸ்வரன் என்றொரு கருமி இருந்தான். அவனது குழந்தை  இரவில் தூங்காமல் அழுதது. தன் குழந்தைக்காக திருநீறு பெற பக்தரிடம்  வந்தான்.

காணிக்கை அளிக்கும் போது, “விரும்பியதை கொடுத்தால் போதும்” என்றார்  பக்தர்.

அவன் சில்லரைக் காசை அளித்து விட்டு கிளம்பினான். அன்றிரவு குழந்தை  நன்றாக உறங்கியது.

“இந்த ஆளை விவசாயின்னு சொன்னாங்களே! குழந்தை நிம்மதியா
தூங்குறதைப் பாத்தா மந்திரவாதியா இருப்பாரோ....” என எண்ணினான்  கோடீஸ்வரன்.

மறுநாள் இரவு பக்தரின் வீட்டுக்குச் சென்றான். வயலுக்குச் சென்ற களைப்பில்  அமர்ந்திருந்தார் பக்தர்.

”சாமி... ரொம்ப நாளா ஒரு ஆசை. பெயருக்கேத்த மாதிரி கோடீஸ்வரனா வாழ  ஆசைப்படறேன். நீங்க தான் வழி காட்டணும்” என்றான்.

பக்தரும், “அதுக்கென்ன.... ஆக்கிட்டா போச்சு” என்றார்.

கோடீஸ்வரன்,“ இப்பவே ஏதும் செய்யப் போறீங்களா.....” எனச் சிரித்தான்.
“செய்திட்டா போச்சு. தினமும் பத்தாயிரம் ரூபா வாங்கிக்கோ. ஆனா... ஒரு  நிபந்தனை” என இழுத்தார் பக்தர்.

“நிபந்தனையா.....” எனத் தயங்கினான்.

“காளிக்கு காணிக்கை கொடுக்கணுமே..... முதல் நாளான இன்று ஒரு ரூபா  கொடுக்கணும். அது அப்படியே தினமும் இரட்டிப்பாகிட்டே போகும்” என்றார்  பக்தர்.

கோடீஸ்வரன், ”சரிங்க சாமி... காளி மேல சத்தியமா காணிக்கை தர்றேன்”  என்றான்.

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் பக்தர். பதிலுக்கு காணிக்கையாக ஒரு ரூபாய்  பெற்றார்.

வீட்டிற்குப் போன கோடீஸ்வரனுக்கு சந்தேகம் எழுந்தது. பணம் எல்லாம் கள்ள  நோட்டாக இருக்குமோ என சந்தேகித்தான். ஆனால் சரியாக இருந்தது.

“ ஒரு ரூபாய்க்கு பதிலா பத்தாயிரம் கொடுக்கிற இந்த ஆளு மடையனாத் தான்  இருக்கணும்” எனச் சிரித்தான்.

இரண்டாம் நாளும் பத்தாயிரம் பெற்றுக் கொண்டு இரட்டிப்பாக இரண்டு ரூபாய்  காணிக்கை கொடுத்தான்.

கொடுக்கல், வாங்கல் தொடர்ந்தது.

பத்தாம் நாள் பத்தாயிரத்திற்கு பதிலாக 512 ரூபாயைக் காணிக்கையாக  அளித்தான்.

15ம் நாள் வந்தது. பத்தாயிரத்தை விட காணிக்கை தொகை அதிகமானது.  பக்தரிடம் 16,576 ரூபாய் கொடுக்க நேர்ந்தது.

இரவெல்லாம் தூக்கம் வராமல் கோடீஸ்வரன் தவித்தான். விடிந்ததும் பக்தரின்  வீட்டுக்கு ஓடினான்.

“சாமி.... என்னை மன்னிச்சிடுங்க! விபரம் தெரியாம காளிக்கு காணிக்கை தர்றதா  சத்தியம் பண்ணிட்டேன்” என அழுதான்.

”பக்தி இருந்தா பணம் கொட்டுமா என்ன? உழைக்காம வாழ்வில் உயர முடியாது.  இனியாச்சும் உழைச்சு வாழப் பழகு. காளியாத்தா உன்னை தண்டிக்க மாட்டா  பயப்படாதே” என்றார் பக்தர்.  

வாங்கிய பணத்தை எல்லாம் திரும்பக் கொடுத்த கோடீஸ்வரன் உழைத்து வாழ  முடிவு செய்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar