Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நீ இங்கு நலம் - நான் அங்கு நலமா?
 
பக்தி கதைகள்
நீ இங்கு நலம் - நான் அங்கு நலமா?

இந்திரன் பாயாசம் அளித்தது கண்டு மனம் நெகிழ்ந்தாள் சீதை. இருந்தாலும்  ராவணனால் தான் கடத்தப்பட்டு, அசோகவனத்தில் சிறையிருப்பதும் ராமனுக்குத்  தெரியுமா? தன்னை பார்த்த சாட்சிகள் ஜடாயுவும், மலை முகட்டில் நின்ற சில  வானரங்களும் தானே! அவர்களில் யாரும் ராமனைச் சந்திக்காவிட்டால்? மீண்டும் மனம் சோர்ந்தாள் சீதை. தன் நிலையை எப்படி அவருக்கு  உணர்த்துவது?

எந்நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் ராமனைத் தன் இதயத்தில்  சிந்திப்பவள் என்பதால் அவன் நாமத்தையே ஜபிப்பது என தீர்மானித்தாள்.  ராம  நாமத்தை உதடுகள் உச்சரித்தன. அதுவே மூச்சுக் காற்றாக இழையோடுவதை  உணர்ந்தாள். தன்னைச் சுற்றிலும் ராம நாம அலைகள் சூழ்ந்திருப்பதையும், அதில் இலகுவாக தான் மிதப்பதையும் அனுபவித்தாள்.

இதற்கிடையில்  சீதையைக் கவரும்  முயற்சி எல்லாம் வீணாவதை எண்ணிய  ராவணன் சிந்திக்க தொடங்கினான். இறுதியாக தன் எதிர்பார்ப்பை யார் மூலம்  செயல்படுத்தலாம் என யோசித்தான்.  தன் தம்பி விபீஷணனின் மகளான  திரிசடையிடம் ஒப்படைக்கலாம் என முடிவு கட்டினான். சீதையை சிறைப்  பிடித்தது தவறு என்றும், அவளைத் திரும்பவும் ராமனிடம் ஒப்படைக்க வேண்டும்  என வாதிட்ட விபீஷணனின் மகள் எப்படி  உதவுவாள் என்ற சந்தேகம் ஒருபுறம்  இருந்தாலும், ஆட்சி அதிகார மமதையால் திரிசடையைப் பணிய வைத்தான்.

"சீதையின் மனதை மாற்றுவது உன் பொறுப்பு என ராவணன் இட்ட கட்டளையை  தந்தை விபீஷணன் மூலம் அறிந்தாள் அவள். மனஉறுதி கொண்டவள் சீதை  என்பதை உணர ஏன் மறுக்கிறான் ராவணன் என எண்ணி இளக்காரமாகச்  சிரித்தாள்.  

ஆனாலும் ராவணனுக்காக அசோகவனத்திற்குச் சென்றாலும் சீதை மீண்டும்  ராமனுடன் சேர துணை நிற்பது எனத் தீர்மானித்தாள். பின்னாளில் விபீஷணன்,  ராமனிடம் சரணாகதி அடைய இந்த சம்பவம் பிள்ளையார்சுழி போட்டது என்றே  சொல்லலாம்.

திரிசடையைக் கண்டதும் இதுவும் ராவணனின் தந்திரமோ என சந்தேகப்பட்டாள்  சீதை. ஆனால் அவளது பேச்சு, செயலில் சிறிதும் களங்கம் இல்லாதிருப்பதைக்  கண்டாள். அரக்கிகள் எல்லோரும் திரிசடையிடம் மரியாதையுடன் பழகியதையும்  கவனித்தாள். அவளது கனிவான பேச்சு ஆறுதல் அளித்தது. அரக்கியர் கூட்டத்தில் இவள் மட்டும் மாறுபட்டு இருக்கிறாளே என்பதை எண்ணி மகிழ்ந்தாள்.  

அசோக வனத்தில் திரிசடையே உற்ற தோழி என்பதை உறுதியாகும் விதமாக  ஒருமுறை சீதையின் கைகளை மென்மையாக பற்றினாள் திரிசடை. நெகிழ்ந்த  சீதைக்கு கண்ணீர் பெருகியது. அதைப் பார்த்த அரக்கியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.  தாம் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தராததால், திரிசடை மூலம் ராவணன்  புதிய உத்தியை கையாள்வதாக அவர்கள் நினைத்தனர்.  

 "" என் பெரியப்பா ராவணனின் இழிசெயலில், என் தந்தையார் விபீஷணனுக்கு  சம்மதம் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் தந்தையார்  அண்ணாவுக்கு அறிவுரை கூறி வருகிறார். ஆனால் அவரோ, "அரக்கர் குலத்தில்  பிறந்தும் இப்படி தர்மம் பேசுகிறாயே! என் சகோதரனாக இருப்பதால்  தண்டிக்காமல் விடுகிறேன்  என எச்சரித்து வருகிறார். ஆனால் என் தந்தையும்,  நானும் அவரது பேச்சில் நியாயம் இல்லை என்பதை பூரணமாக  புரிந்திருக்கிறோம்....” என விளக்கினாள்.

""திரிசடை... உனக்கு மிக்க நன்றி. ராவணன் கேட்டது போல அரக்கர் குலத்தில்  பிறந்தும் எப்படி இத்தகைய உயர்ந்த குணம் கொண்டிருக்கிறீர்கள்?” எனக்  கேட்டாள் சீதை.

""அது தான் ராம மகிமை. ராமன் என்ற குணக்குன்றுக்கு துன்பம் செய்ய  யாருக்கும் மனம் வராது என்பதே உண்மை. அவரைப் பற்றி நாங்கள் நிறைய  கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் அரக்கர் குலமானலும் சரி, அண்ணனே  ஆனாலும் சரி, ராவணனை கண்டிக்க எங்களால் முடிந்தது. எங்கள் குடும்பத்தில்  அனைவரும் ராவணனை ஆதரித்தாலும்  நாங்கள் எங்களுடைய தர்மத்தில்  இருந்து விலக மாட்டோம்”

உணர்ச்சிப் பெருக்குடன் அவளைத் தழுவினாள் சீதை.

""நானும் வந்ததிலிருந்து கவனிக்கிறேன், எதையோ முணுமுணுக்கிறாயே, என்ன  அது?” எனக் கேட்டாள்.

சீதை நாணம் கொண்டாள்.

""அது என் நாயகனின் நாமம். விரக்தியுடன் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கும்  எனக்கு அந்த நாமம் தான் நாடித் துடிப்பாக உயிரூட்டுகிறது”  

வியப்புடன் பார்த்தாள் திரிசடை. கூடவே  தோழி போல கேலி செய்ய  முற்பட்டாள். ""சீதை..இப்படி ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு  கட்டத்தில் உன் உருவமும் ராமனாக மாறி விடுமே?”

அதைக் கேட்டு திடுக்கிட்டு, "" அப்படியானால் ராமன் என்னை மீட்க இங்கே வரும் போது நான் ராமனாகத் தான் இருப்பேனா? சீதையாக அவருடன் வாழ்வு நடத்த  இயலாதா?” என பதறினாள்.

கலகல என  சிரித்த திரிசடை. ""கவலைப்படாதே, அப்படியே ஆனாலும் பாதிப்பும் ஏற்படாது!”

""ஏன் ஏற்படாது!”

"ஆமாம், நீ எப்படி ராம நாமத்தை ஜபிக்கிறாயோ, அதே போல  ராமனும் சீதை  நாமத்தை தானே ஜபிப்பார்? அவர் மனதில், ஏன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் உன் நினைவு தானே படர்ந்திருக்கும்? அதனால் அவரும் சீதையாக மாற நேரும் தானே? இரண்டுக்கும் சரியாயிற்று. இங்கே நீ ராமன், அங்கே அவர் சீதை! "நீ  இங்கு நலமே, நான் அங்கு நலமா? என்ற போக்கில் தானே  இருவர் சிந்தையும்  இருக்கின்றன?” என வாய் விட்டுச் சிரித்தாள்.

அந்த கலகலப்பு சீதையை தொற்றியது. மனம் விட்டு சிரித்தாள் அவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar