Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராவணனுக்கு அயோத்தி
 
பக்தி கதைகள்
ராவணனுக்கு அயோத்தி

‘கண்டேன் சீதையை’ என அனுமன் சொன்னதைக் கேட்டதும் புத்துணர்வு பெற்றான் ராமன். உடலால் வாடியிருந்தாலும், உள்ளத்தில் அவள் நம்பிக்கையுடன் இருக்கிறாள் என்றதும் புதுபலம் அவனுக்குள் எழுந்தது. ‘ராவணன் மோகத்திலிருந்து மீளாதவனாக இருப்பதால், போர் ஏற்பட்டு அதில் ராவணனை வதம் செய்தால் மட்டுமே சீதையை மீட்க முடியும்’ என்பதும் புரிந்தது. லட்சுமணன், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் ஆகியோரை வரவழைத்தான்.
ராமனைப் போல அவர்களும் உற்சாகத்துடன் பலவித வியூகம், உத்திகள், போர் தந்திரங்கள் என  அலசி ஆராய்ந்தனர்.
 ராமன் வித்தியாசமான மன்னன்! ஆமாம்... அயோத்தியில் இருந்தவரை எந்தப் போரிலும் அவன் ஈடுபடவில்லை.  தந்தை தசரதர் அரசாட்சியை கவனித்தார் என்றாலும், அவர் காலத்திலும் போர்  ஏற்பட்டதேயில்லை. இதில் வேடிக்கை என்ன என்றால், ராமன் நாட்டை விட்டு வந்த பிறகு தான் அரக்கர்களுடன் போரிட நேரிட்டது! அதுவும் தனி மனிதனாக! அவனைச் சுற்றிக் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஏதுமில்லை. தனி ஒருவனாக எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி கண்டான்.  
ஆனால் ராவணன் அப்படிப்பட்ட எதிரி இல்லை. தாடகை, சுபாகு, மாரீசன், விராதன், கரன், வாலி போல அவன் தனியாள் இல்லை. படைகளுடன் இருப்பவன். அவன் இலங்கையின் மன்னனாக இருப்பதால், பல போர்களை சந்தித்திருப்பான். அந்த சம்பிரதாயப்படி, முதலில் படைகளை அனுப்பி அவர்கள் தோல்வியுற்றால் தான் ராவணன் போரில் இறங்குவான்.  
 எனவே பெரிய போர் ஒன்றிற்கு ராமன் தயாராக வேண்டும். அதனால் தனக்கு உரிமை இல்லாத காட்டில் வசித்துக் கொண்டு, இலங்கையுடன் போரிட விசித்திர சூழ்நிலை!
 இலங்கையின் சூழல், ராவணனின் படை பலம், அவனது போர்த் தளவாடங்கள் பற்றி விரிவாக அனுமன் எடுத்துச் சொன்னான். அதை பின்பற்றியே தந்திரங்களை மேற்கொள்ள ராமன் தீர்மானித்தான். மற்றவர்களும் தமக்குத் தோன்றிய வழிமுறைகளை எடுத்துக் கூறினர்.
அப்போது அங்கு ஓடி வந்த வானரங்கள் சில ராவணனின் தம்பி விபீஷணன் வந்திருப்பதை தெரிவித்தனர்.
அதற்கான காரணம் புரியவில்லை.
‘‘ராவணனின் துாதனாக வந்திருப்பானோ அல்லது ராவணன் போருக்குத் தயாரானதை அறிவிக்க வந்திருப்பானோ.’’ என்றெல்லாம் சந்தேகம் எழுந்தன.  
விபீஷணன்  ராமனிடம் சரணாகதி அடைய வந்திருக்கிறான் எனத் தெரிந்ததும்‘‘ராமா! இதெல்லாம் கபட நாடகம். மாயையில் வல்ல அரக்கர்கள் செய்யும் தந்திரம் இது. சரணடைவது போல வந்து நமக்கே குழி பறிக்கும் துரோகச் செயல் புரிபவனாக இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் ராமனோ,  ‘‘சரணாகதி அடைய வந்தால் அவனை ஏற்பேன்’’ என்றான்.  
ராமன் அனுமனைப் பார்த்த போது ‘‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். விபீஷணன் நேர்மையானவன். பிறன் மனைவியை விரும்பும் தீமையைச் செய்யும் அண்ணனின் செயலைத் தவறு என்று இடித்துச் சொல்லும் துணிவு கொண்டவன்.  துாதுவனாகச் சென்ற எனக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தவன் இவனே. என்னை இம்சிப்பது தகாது என தர்மத்தை போதித்தவன். ஆகவே இவன் நல்லவனாக எனக்குத் தோன்றுகிறான். இவனால் நமக்கு நன்மை ஏற்படும்  என்பது தான் என் கருத்து.’’
அக்கருத்தை லட்சுமணன் ஏற்காவிட்டாலும், அண்ணனின் பரந்த மனதிற்கு கேடு உண்டாகாது எனக் கருதினான்.
விபீஷணனை ஆரத் தழுவி  தன்னோடு சேர்த்துக் கொண்டான் ராமன்.
அத்துடன் யாரும் எதிர்பார்க்காத நிலையில், விபீஷணனை இலங்கையின் மன்னராக அங்கேயே முடிசூட்டியும் வைத்தான்.   
ராவணன் பற்றிய  ரகசியங்களை தெரிவிக்கலாம் என்பதற்காகத் தான் இவ்வளவு  பெரிய பரிசா! அதுவும் நோக்கம் நிறைவேறு முன்?  என லட்சுமணன் குழம்பினான்.   
 ‘‘அண்ணா! விபீஷணனுக்கு ஏன் பட்டாபிஷேகம் செய்தீர்கள் எனப் புரியவில்லையே,’’ எனக் கேட்டான் லட்சுமணன்.
‘‘கொடுங்கோன்மைக்கு எதிராகக் குரல் கொடுப்பவன் நல்லவனாகத் தான் இருப்பான். அநீதியை எதிர்த்து,  ராஜபோகங்களைத் துறந்து விட்டு என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு இந்த பட்டாபிஷேகத்தை விட வேறு என்ன பரிசு இருந்து விடப் போகிறது?’’ என்று கேட்டான் ராமன்.
 ‘‘சரி அண்ணா! விபீஷணனுக்கு பட்டம் கட்டினீர்கள் சரி! ராவணனுக்குப் பிறகல்லவா இவன் இலங்கைக்கு அதிபதியாவான். ஒருவேளை ராவணன் மனம் திருந்தி சீதையை ஒப்படைத்தால் விபீஷணனுக்கு ஏது ராஜ்யம்? அப்போது நீங்கள் அளிக்கப் போகும் பரிசு?’’
‘‘அயோத்தி’’  பளிச்சென பதில் அளித்தான் ராமன்.
அனைவரும் திடுக்கிட்டு ராமனைப் பார்த்தனர்.
‘‘ஆமாம் லட்சுமணா! என் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்கிறான். எனக்காகவே அயோத்தி என காத்துக் கொண்டிருக்கிறான். அதாவது அவனுக்கு ஆட்சி புரிவதில் விருப்பமில்லை. ஆகவே அயோத்தியை  ராவணனுக்குக் கொடுத்து விடுவேன்!’’ என்றான் ராமன்.
ராமனின் பெருந்தன்மை கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர்.
‘‘இப்படி அயோத்தியை கொடுத்தீர்களானால், உங்களுக்கு என எந்த ராஜ்யம் இருக்கிறது?’’ தயக்கமுடன் கேட்டான் லட்சுமணன்.
‘‘இந்த காடு இருக்கிறது. இயற்கை அன்னை ஆட்சி நடத்த நான் அடிமையாக இங்கேயே வாழ்வேன்’’ என்றான் ராமன்.
அதைக் கேட்ட அனுமன் மனதிற்குள் சிரித்தான். ராவணன் ஒருபோதும் சரணாகதி அடையப் போவதில்லை என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar