Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வாய்மையே வெல்லும்
 
பக்தி கதைகள்
வாய்மையே வெல்லும்

மன்னராக இருந்த  விஸ்வாமித்திரர் ஆன்மிகத்தில் உயர்நிலை பெற தவம் மேற்கொண்டார். அந்நிலையை அடைந்தால், தனக்கு போட்டியாகி விட நேருமே எனக் கருதிய இந்திரன், தேவலோக நடனமாதுவான மேனகையை அனுப்பி அடிபணியச் செய்தார். வர்களுக்கு பிறந்த குழந்தையே சகுந்தலை. அதன் பின் அவளைக் காட்டிலுள்ள பறவைகளின் பராமரிப்பில் வளர்ந்ததால், றவைகளால் வளர்க்கப்பட்டவள் என்னும் பொருளில் ‘சகுந்தலை’ எனப் பெயர் பெற்றாள்.

 பிறகு கண்வ மகரிஷியின் பராமரிப்பில் இருந்தாள். ஒருமுறை அவள், வேட்டைக்கு வந்த இளவரசனான துஷ்யந்தனைக் கண்டு காந்தர்வ மணம் புரிந்தாள். இதில் சகுந்தலை கர்ப்பமானாள். இந்நிலையில் ஒரு மோதிரத்தை பரிசளித்து விட்டு துஷ்யந்தன் புறப்பட்டான். செல்லும் வழியில், சகுந்தலாவின் ஞாபகத்தில் இருந்த துஷ்யந்தன், முனிவர் ஒருவரை அவமதித்தான். “என்னைக் கண்டு கொள்ளாமல், எந்தப் பெண்ணின் மதிமயக்கத்தில் சென்றாயோ, அவளை மறக்கக் கடவது’’ என சபித்தார். அவனுக்கு நினைவு மறந்து போனது.
சகுந்தலா ஒரு ஆண்குழந்தை பெற்றாள். அவனுக்கு ‘பரதன்’ எனப் பெயரிட்டாள். அவனது பெயரால் தான் நம் நாட்டுக்கு ‘பாரதம்’ எனப் பெயர் வந்தது. சகுந்தலை தன் கணவர் துஷ்யந்தனைத் தேடி அரண்மனைக்கு வந்தாள். ஆனால் முனிவர் சாபத்தால் துஷ்யந்தன் அவளைப் புறக்கணித்தான். ‘இவள் என் மனைவியல்ல’ என சத்தியம் செய்தான். “மன்னா! சத்தியத்தை யார் சரிவர கடைபிடிக்கிறாரோ அவரே சிறந்தவர். இதோ... நம் திருமண நாளில் நீங்கள் எனக்கு அளித்த மோதிரம்’’ எனக் காட்டினாள். சாப விமோசனம் அந்த நேரத்தில் கிடைக்க, துஷ்யந்தனும் அவளை அடையாளம் கண்டான். ‘வாய்மையே வெல்லும்’ என்பது இந்த சம்பவத்தால் நிரூபணம் ஆனது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar