Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமனின் உள்நோக்கம்
 
பக்தி கதைகள்
ராமனின் உள்நோக்கம்

விபீஷணன் அரக்கர் குலத்தில் பிறந்தவன் என்றாலும் அவனைக் கண்டதும், ராமனுக்கு ஏற்பட்ட நல்லெண்ணமே அடைக்கலம் அளிக்கத் துாண்டியது.  
‘‘ராமா! அறிந்தோ, அறியாமலோ ராவணனுக்கு எதிரான போரில் அவனது பெரும்பலம் ஒன்றை முன்கூட்டியே தாங்கள் அழித்து விட்டீர்கள்’’ என்றான் விபீஷணன்.
அவனது பேச்சு வியப்பு அளித்தது.
‘‘முன்கூட்டியேவா? அதுவும் அறிந்தோ, அறியாமலோவா?’’ என்றான் ராமன்.
‘‘ஆமாம்! வாலியை வதம் செய்தீர்களே! அதைத் தான் சொல்கிறேன்.’’
அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.  
‘‘ஆம்! ராவணனுக்கும், வாலிக்கும் ஒப்பந்தம் ஒன்று இருந்தது’’ என மேலும் திகைப்பூட்டினான் விபீஷணன்.
‘‘என்ன அது?’’ என ராமன் கேட்க விவரிக்கத் தொடங்கினான் விபீஷணன்.
‘‘ தேவலோக இந்திரனுக்கும், ரிட்சரஜஸ் என்ற வானரப் பெண்ணுக்கும் பிறந்தவன் வாலி! இதே வானரப் பெண்ணுக்கு சூரியன் மூலம் பிறந்தவன் தான் சுக்ரீவன். இந்திரன் தன்னுடைய மாலை ஒன்றை வாலிக்கு கொடுத்திருந்தான். எதிரியை வீழ்த்தச் செய்யும் அந்த மாலையை எப்போதும் அணிய வேண்டும் என்றும் கூறியிருந்தான். ‘எதிரியின் பலத்தில் பாதி வாலியை வந்தடையும்’  என்பதே அந்த மாலையின் மகத்துவம்.  
வாலியின் ஆற்றலுக்கு அளவில்லை என்றாலும் அவன் யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை. அதே நேரம் தன்னை எதிர்ப்பவர்களை ஒரு கை பார்க்காமலும் விட்டதில்லை. எட்டு திசைகளிலும் உள்ள கடல்களில் நீராடி, அந்தந்தக் கரையில் அமர்ந்து தியானம் செய்வது அவன் அன்றாடக்கடமை.  இதை எல்லாம் கேள்விப்பட்ட ராவணனுக்கு வாலியைத் தன் நண்பனாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.  
 ஒருநாள் காலையில் வாலியைத் தேடி புறப்பட்டான் ராவணன். அப்போது அவன் ஒரு கடற்கரையில் தியானம் செய்தபடி இருந்ததைக் கண்டான். அருகில் சென்று வாலியின் முதுகைத் தொட்டான்.  தியானத்தில் இருந்ததால் வாலி பொருட்படுத்தவில்லை. இலங்கை மன்னன் என்ற செருக்கால், பலம் கொண்ட மட்டும் வாலியின் முதுகில் அடித்தான்.  திடுக்கிட்ட வாலி தியானம் கலையவே, கோபம் தலைக்கேறியது. தன் வாலால் ராவணனைக் கட்டியிழுத்தபடி, வானில் பறக்கத் தொடங்கினான். திசை எங்கும் உள்ள கடல்களில் வரிசையாக மூழ்கினான். வாலால் கட்டப்பட்ட ராவணனுக்கு மூச்சு முட்டியது. தன்னை விட்டு விடுமாறு வாலியிடம் கதறினான்.
மனமிரங்கிய வாலி, ஒரு கட்டத்தில் விடுவித்தான்.
அந்நிலையில் தன்னைப் பற்றி புகழ்ச்சியாக, சிவனின் அருள் பெற்றவன் என்றும், லங்காபுரியின் மன்னர் என்றும் சொல்லிக் கொண்டான். இந்நிலையில் வாலியிடம் உடன்படிக்கை ஒன்றைச் செய்வதாகவும் தெரிவித்தான். அதன்படி எதிரிகளால் ஆபத்து நேர்ந்தால் வாலிக்கு தான் உதவுவதாகவும், அதே போல எதிரியால் தீங்கு நேர்ந்தால் தனக்கு வாலி உதவ வேண்டும் என்றும் தெரிவித்தான்.
‘ ராவணனால் தனக்கு ஏதும் ஆகப் போவதில்லை என்றாலும், அவனை கடலில் மூழ்கடித்து தண்டித்ததற்கு ஆறுதலாக இருக்கட்டுமே’ என தலையசைத்தான் வாலி.  
ஆனால் ராமனால் வாலி கொல்லப்பட்டதால் ராவண வதம் நிகழ்வது நுாற்றுக்கு நுாறு உறுதியாகி விட்டது. அவனுக்கு இருந்த பெரும் பலம் போருக்கு முன்னரே அழிக்கப்பட்டு விட்டது’’ என முடித்தான் விபீஷணன்.    
ஆக, வாலியின் மரணம் ராவணனின் பலவீனம் என்பதை அறிந்து, ‘அரக்கர் கூட்டத்தில் இப்படி ஒரு நல்லவன் பிறந்ததே அதிசயம்’  என அனைவரும் பாராட்டினர்.   

ஒரு வேளை சரணாகதி அடையும் முடிவை விபீஷணன் எடுக்காவிட்டால் ராவணன் அவனைக் கொல்வான், அல்லது ராவணனுக்காகப் போர் புரிந்து ராமனால் கொல்லப்படுவான். ஆனால் விபீஷணனின்  நடவடிக்கையால் தர்மம் நிலைநாட்டப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.  

இந்நிலையில் லட்சுமணன் மனதிற்குள், ‘வாலி வதம், விபீஷணனின் சரணாகதி இரண்டுக்கும் ராமன் மனைவியை பிரிந்து நிற்கும் தனிமை உணர்வே காரணமாக இருக்கும். மனைவியைப் பறி கொடுத்த சுக்ரீவனுக்கு உதவவே, ராமன் வாலியை வதம் செய்தான். விபீஷணனைப் பொறுத்தவரை, அவனும் மனைவியை இழந்து, மகள் திரிசடையுடன் வாழ்கிறான். அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், அவனுக்கு மறுமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதால் ராமனுக்குப் பச்சாதாபம் தோன்றியிருக்கும். சீதையைப் பிரிந்த சோகமே இந்நிலைக்கு ஆளாக்கி விட்டது என்றே தோன்றுகிறது!’ என நினைத்தான்.  
அதை புரிந்து கொண்ட ராமனும் தம்பியை உற்று நோக்கினான். அதை உணர்ந்து புன்னகைத்தான் லட்சுமணன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar