Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நினைத்த வரமும் கிடைத்த சாபமும்
 
பக்தி கதைகள்
நினைத்த வரமும் கிடைத்த சாபமும்

எவ்வளவு சொல்லியும் அண்ணன் ராவணன் திருந்தவில்லையே என சோகத்தில் ஆழ்ந்தான் கும்பகர்ணன்.
 ‘சீதையை ஒப்படைக்க மறுப்பதால் ராமனின் வில்லுக்கு இரையாகப் போகிறோனே’ என வருந்தினான்.
தம்பியான விபீஷணன் அறிவுரை சொல்லியும் ராவணன் ஏற்கவில்லை என்பதால் எதிரியான ராமனைச் சரணடைந்தான். அதனால் தம்பியின் ஆதரவையும் இழப்பதற்கு காரணமாகி விட்டான் ராவணன். பெண்ணாசை படுத்தும் பாட்டை எண்ணி பெருமூச்சு விட்டான் கும்பகர்ணன். ஆனாலும் தம்பி விபீஷணன் ராமனின் பக்கம் போனது சற்று ஆறுதல் அளித்தது.     
தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ராவணன் பக்கம் இருக்கவும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவும் முடிவு செய்தான்.
 ஆறு மாதம் விழிப்பு, ஆறு மாதம் துாக்கம் என்னும் இயல்பு கொண்ட தன் நிலையை ஒருநொடி சிந்தித்தான்.  நிலையற்ற வாழ்வில் தனக்கு மட்டும் துாக்கம் இப்படி நீண்டு விட்டதே என சுயஇரக்கம் மனதில் எழுந்தது.  
தவமிருந்து தெய்வங்களிடம் வரம் பெறுவது அரக்கர்களின் நடைமுறை.  அந்த வகையில் கும்பகர்ணனும் படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி தவமிருந்த காலம் ஒன்றுண்டு.   
அரக்கர் குலத்தின் எதிரிகளான தேவர்களை முற்றிலும் அழிக்க விரும்பி, முன்பொரு காலத்தில் தவமிருக்க தொடங்கினான் கும்பகர்ணன். விஷயத்தை கேள்விப்பட்ட தேவர்களுக்கு பயம் தொற்றியது.
‘‘ சிவனின் இருப்பிடமான கைலாயத்தையே அசைத்தவன் அரக்கன் ராவணன். அவனது தம்பியல்லவா இவன்?’’ .
‘‘ வரமளித்த சிவனின் தலை மீதே கை வைக்கத் துணிந்த பஸ்மாசுரனின் இனத்தைச் சார்ந்தவன் அல்லவா?’’ என அரக்கர்களின் இயல்பு பற்றி தேவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.  
‘‘ இப்படித் தான் ஒருமுறை தவசக்தியால் வரம் பெற்ற பஸ்மாசுரன்,  காண்போரை எல்லாம் சாம்பலாக்க எண்ணினான். ஆனால், மோகினி என்னும் இளம்பெண் வடிவில் வந்த மகாவிஷ்ணு அசுரனை  மயக்கினார். கடைசியில் தன் தலை மீதே தானே கை வைத்து நொடியில் சாம்பலாகிப் போனான். இவனைப் போலவே பலம் மிக்க அரக்கர்கள் என்ன தான் வரம் பெற்றாலும், காம சிந்தனைக்கு அடிமைப்படுவது அவர்களின் இயல்பு.
 அதனால் கும்பகர்ணனின் தவத்தால் நேரும் பின்விளைவை எண்ணி பிரம்மா வரமளிக்க வேண்டும் எனக் கருதிய தேவர்கள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதியை சந்தித்தனர். கும்பகர்ணன் தன் கோரிக்கையைச் சொல்லும் போது அவன் கேட்க எண்ணியதை சொல்ல முடியாமல் செய்ய வேண்டினர்.  
சரஸ்வதியும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தாள்.  அதே சமயம் தன் கணவருக்கும் களங்கம் வரக் கூடாது என்றும் தீர்மானித்தாள். முடிவாக கும்பகர்ணனின் நாக்கில் அமர்ந்தாள்.  
கும்பகர்ணனின் தவப்பயனாக பிரம்மாவும் நேரில் காட்சியளித்தார். மகிழ்ந்த கும்பகர்ணன், ‘அழிவில்லாதவனாக என்றும் வாழ வேண்டும்’ என்னும் பொருளில் தனக்கு ‘நித்யத்துவம்’ அருளும்படி கேட்க விரும்பினான். ஆனால் சரஸ்வதி அவனது நாக்கைப் புரட்டி  ‘நித்திரத்துவம்’ என உச்சரிக்கச் செய்தாள்.  பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என உறுதியளித்தார்.  
அழியாத வரம் பெறுவதற்கு பதிலாக கலையாத நித்திரையை அதாவது உறக்கத்தை வரமாகப் பெற்றான். சட்டென உச்சரிப்பில் நேர்ந்த தவறை உணர்ந்தவன், சற்று சலுகை அளிக்க வேண்டும் எனக் கெஞ்சினான். அதன்படி ஆறு மாதம் விழிக்கவும், ஆறு மாதம் துாங்கவுமாக  வரத்தை மாற்றியமைத்தார் பிரம்மா. அதன்பின் அனைவரின் ஏளனம், வெறுப்புக்கு ஆளானான். இப்படி ஆறு மாதம் துாங்கிய போது தான் ராவணன் சீதையை அபகரித்தான்.
இப்படி சிந்திக்கும் நேரத்தில், கும்பகர்ணன் முகத்தில் புன்னகை அரும்பியது.  
‘‘என்ன விசித்திரமானது என் வாழ்க்கை!
அண்ணன் ராவணனின் போக்கு பிடிக்காமல், அதே நேரம் அவனை விட்டு விலகவும் முடியாமல் அவதிப்படும் தனக்கு  ஆறுமாத துாக்கம் என்பது  நிம்மதி அளிப்பதை உணர்ந்தான்.   
ஆமாம், கும்பகர்ணன் துாங்கும் போது அவனை சுலபமாக யாராலம் எழுப்ப முடியாது.  ஆயுதங்களால் குத்தியும், இடித்தும், ஓலமிட்டும் தான் அரக்கர்கள் துாக்கத்தை கலைப்பர். ஆறு மாதம் முடியும் கட்டமாக இருந்தால் அவன் விழித்தெழ  சாத்தியமுண்டு. இல்லாவிட்டால் முயற்சி வீண் தான்.  
 ராவணனுக்கு ஆதரவாக போரிடும் போது தான் கொல்லப்படுவது உறுதி என்பது புரிந்தது. அதுவரை  ராவணனின் கட்டுப்பாட்டில் இருக்கவும், அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு வாழவும் வேண்டும் என்றாலும், தூங்கும் காலத்தில் அண்ணனிடம் பேசவோ, அவனுக்கு புத்தி சொல்லவோ தேவையில்லை என்பதை எண்ணி ஆறுதல் அடைந்தான். இந்த வாய்ப்பை வழங்கிய பிரம்மா, சரஸ்வதிக்கு மானசீகமாக தன்  நன்றி தெரிவித்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar