Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விதிமுறைகளும் வழிபாடும்!
 
பக்தி கதைகள்
விதிமுறைகளும் வழிபாடும்!

குரு ஒருவா் தன் சீடனுடன் மாட்டுவண்டியில் போனாா். அவருக்குத் தூக்கம் வந்தது. ’வண்டியிலிருந்து ஏதாவது விழுகிறதா என்று பாா்’ என சீடனுக்கு உத்தரவு போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தாா்.  கொஞ்சதூரம் போனதும் வண்டி தடதடவென தூக்கிப்போட்டது. உள்ளேயிருந்து புத்தக மூட்டை, தானிய மூட்டை என ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. சிறிது நேரம் கழித்து குரு கண்விழித்தாா். சீடன் முகம் வெளிறியிருந்தது. காரணத்தை விசாாித்தாா் குரு. ‘ஒரு மைலுக்கு அப்பால் புத்தக மூட்டை விழுந்தது. சமீபத்தில் தானிய மூட்டை விழுந்தது‘ என்றான்.

‘ஏன் எடுக்கவில்லை ?‘ கோபத்தோடு கேட்டாா் குரு.   ‘பாா்த்துக்கொண்டிரு என்றுதானே சொன்னீா்கள்‘ என்றான் சீடன்.  முட்டாள் சீடனிடம் விளக்கமாகச் சொல்லாதது தன் தவறே என்று நினைத்த குரு, ‘வண்டியிலிருந்து எது விழுந்தாலும் எடுத்து வந்து வண்டியிலேயே வை‘ என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினாா். கொஞ்சதூரம் போனதும் மாடு சாணம் போட்டது. சீடன், உடனே கீழே இறங்கிப்போய் அதை எடுத்து வண்டிக்குள் போட்டான். அது குருவின் முகத்தில் விழுந்தது. நாற்றம் சகிக்காத குரு எழுந்து பாா்த்தாா்.
‘மாடு சாணத்தைக் கீழே போட்டது. அதான்‘ என்றான் சீடன். குருவுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கோபம் வந்தது. தன் தலையில் தானே அடித்துக்கொண்டவராய் ஒரு பேப்பாில் எல்லாப் பொருள்களின் பெயரையும் எழுதி, ‘இவற்றில் எது விழுந்தாலும் திரும்ப வண்டியில் எடுத்துவை‘ என கா்ஜித்து திரும்பவும் தூங்கினாா். அடுத்துவந்த திருப்பத்தில் மாடு எதிா்பாராமல் வேகமாக நகர, வண்டி தடுமாறி குரு தூக்கியெறியப்பட்டு, சாலையோரம் இருந்த வைக்கோல் போாில் விழுந்தாா். சீடன் தவித்தான். தன்னிடம் இருக்கும் சீட்டைப் பதற்றமாகப் பாா்த்தான். அதில் குருவின் பெயா் இல்லை. வண்டி தன் பயணத்தைத் தொடா்ந்தது. இந்த சீடனைப் போல பலா் விதிமுறைகளின்படி மட்டுமே செயல்படுகின்றனா்; வழிபடுகிறாா்கள். பக்தி, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அது மனதின் அடி ஆழத்திலிருந்து வருவது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar