Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தவறுக்கு தண்டனை உறுதி!
 
பக்தி கதைகள்
தவறுக்கு தண்டனை உறுதி!

மகாபாரத யுத்தத்தின் முடிவு சமயம்! பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.ஒரு ஞானியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் தனது சாவுக்காக பயப்படுபவரும் அல்ல. கவுரவர்களுக்காக போர் செய்து தோற்றுப் போனதற்காகவோ, அவர்களின் மரணத்திற்காகவோ கலங்குபவரும் அல்ல! அப்படியானால், எதற்காக அழுகிறார் என்ற சந்தேகத்துடன் கிருஷ்ணர் அவரை அணுகினார். கவுரவர்களும், பாண்டவர்களும், திரவுபதியும உடன் நின்றனர்.‘‘மகாத்மாவே! ஏன் அழுகிறீர்கள்! ஞானியான தங்கள் கண்ணில் நீர் வழிகிறதென்றால், அதற்கு அர்த்தமில்லாமல் இருக்காதே!” என்றார் கிருஷ்ணர்.‘‘கிருஷ்ணா! அறியாதவன் போல் பேசுகிறாயே! எவ்வளவோ இழப்புகள்! பாண்டவர்களுக்காக கடவுளின் அவதாரமாக நீயும் இருக்கிறாய். ஆனாலும், அவர்களின் கஷ்டம் தீரவில்லை, பிரச்னைக்கு முடிவும் கிடைக்கவில்லை. அதை நினைத்து அழுகிறேன்,” என்றார்.கண்ணன் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?சூதாட்டம் தவறு என்று தெரிந்தும் தர்மர் சூதாடினார். அதிலும், மனைவியை பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். இந்த கொடிய செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டாமா! நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும். அதை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar