Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நோய்க்கு ‘நோ என்ட்ரி’
 
பக்தி கதைகள்
நோய்க்கு ‘நோ என்ட்ரி’

திருப்பூர் கிருஷ்ணன்

ஷிர்டி ஊரெங்கும் காலரா பரவிக் கொண்டிருந்தது. அப்போது பாபாவின் பக்தை ஒருத்தி தான் பெற்ற அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினாள். பக்தர் கூட்டம் பாபா முன் கூடியது.  மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார் பாபா. முறத்தில் கோதுமை குவிந்திருந்தது. தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்து விட்டுக் கொண்ட பாபா கோதுமையை  திருகையில் இட்டு மாவு அரைக்கத் தொடங்கினார். மாவு வழிந்து கீழே கொட்டியது.
பாபாவின் முகத்தில் சீற்றம். திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றியபடி கோதுமையோடு பேசத் தொடங்கினார்.
‘‘ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய் விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாக வேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி இருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு!’’
பாபா இப்படி சொல்லிக் கொண்டே திருகையின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றினார்.  
அரைபட்ட மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.  சில பெண்கள், ‘‘பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். நாங்கள் அரைக்கிறோம்’’ என்று சொல்லி அரைக்கத் தொடங்கினர். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமர்ந்தார்.  
பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு கைவலிக்கும் என்கிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால் அவர்களின் பக்தி, பாபாவின் மனதில் கல்கண்டாகத் தித்தித்தது.
பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கை தருகிறார்கள். ஜகஜ் ஜோதியாய் அகில உலகையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி!
‘‘அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை. அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஈடுபட மாட்டேன் என வாக்குறுதி கொடு!’’ பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறது.
எல்லா கோதுமையும் அரை பட்டதும் மாவை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள் பெண்கள்.
‘‘மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லையிலும் மாவை வேலி போல் துாவி விட்டு வாருங்கள்’’
பெண்கள் நான்காகப் பிரிந்து பயபக்தியுடன் கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலியாகத் துாவினர். மறுகணம் காலரா அங்கிருந்து வெளியேறியது. ஊர் மக்கள் குணம் அடைந்தனர்.  பாபாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.  
பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் துாண்டிய தீய சக்தியை!
இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோ... பாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. அதைப் படிக்கும் அனைவருக்கும்  எல்லா மங்கலமும் உண்டாகும். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar