Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கலியுகம்
 
பக்தி கதைகள்
கலியுகம்


திருவஹீந்திரபுரம்!
நல்ல அதிகாலை வேளை... கிருஷ்ணபாண்டன் ஓட்டி வந்த புரவி ரதம் கருட நதிக்கரையில் நின்றது. பொலபொலவென்றொரு விடியல்... ஆதவனை தரிசித்தபடியே இறங்கினார் ஸ்ரீவேதாந்த தேசிகன். அவரைத் தொடர்ந்தாள் அவரது பத்தினியான திருமங்கை. கருட நதியில் ரத்தக் குழம்புபோல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. அது திருமங்கையை யோசிக்கச் செய்தது.
‘‘என்ன மங்கா யோசனை?’’ லேசாய் சோம்பல் முறித்தபடியே கேட்டார் தேசிகன்.
‘‘ஆற்றுநீர் ரத்தப்பெருக்கும் போல தென்படுகிறதே... ஸ்படிகம் போலல்லவா ஆற்று நீரிருக்கும்...?’’
‘‘நல்ல கேள்வி... ஆனால் ரிஷிகள் நினைத்தால் ஸ்படிகமும் சென்னீராகிவிடும்..’’
‘‘அப்படியானால்?’’
‘‘இதுபற்றி நீ அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இத்தலப் பெருமை முழுவதையும் முதலில் நீ அறிந்திட வேண்டும்.’’
‘‘அறியத் துடிக்கிறது மனது... முதலில் கூறுங்கள்...’’
‘‘இத்தலம் எம்பெருமான் மண்மிசை திருப்பதியாக திகழ எண்ணி கோவில் கொள்ள விரும்பி தலம்...’’
‘‘திருப்பதியாக என்றால்...?’’
‘‘காம்யார்த்தமாய் பிரார்த்தனை புரிந்து கொள்ள உகந்த இடம், உரிய இடம் என்று சுலபமாய் அதற்கொரு பொருள் கூறலாம்...’’
‘‘அப்படியாயின் திருவரங்கமும், காஞ்சியும் பிரார்த்தனைக்குரியவை ஆகாதா?’’
‘‘அங்கே பிரார்த்தனைக்கு தேவையே இல்லை. அவை சரணாகதி புரிவோர்க்கான தலங்கள்! அதனால் அங்கே பிரார்த்திக்க கூடாதா? பிரார்த்தனைகள் பலிக்காதா என்று கேட்டு விடாதே... எங்கும் பிரார்த்திக்கலாம்.. நகரக்கூட திரானியற்றவர்க்கு அவர் உள்ளமே கூட பிரார்த்தனைத் தலம் தான்! மனதால் நினைத்தாலும் போதும்... அதற்காக திடகாத்திரமாய் இருக்கும்போதும், மந்தகாச வயப்பட்டு என்னுள்ளேயே அவனிருக்கிறான் – ஆலயம் சென்று சேவித்தால் தானா? என்று கேட்டு விடக்கூடாது.’’
‘‘புரிகிறது... திருப்பதி எனும் பிரார்த்தனைக்குரிய தலத்திற்கு விளக்கம் தாருங்கள்..’’
‘‘யுகங்களில் கலி வீரியம் மிக்கது. பெரும் மாயைகளை உடையது! பெற்றெடுத்த தாயைக்கூட இந்த யுகம் வினாடியில் கொலைகாரி ஆக்கிவிடும்! தர்மபத்தினியையும் தடம் மாறிடச் செய்யும்! உண்ணும் உணவில் கூட கலப்படம் உருவாகி அரிசியைப் போலவே ஆனால் அரிசி வடிவம் கொண்டு ஒன்று தோன்றும். இதெல்லாம் கலிபுருஷனின் செயல்பாடுகள். பொறாமை களவு, வஞ்சனை, சுயநலம் – போன்ற உணர்வு மிகுதியாக உடையோரே இவனது ராஜ்ஜியத்தின் மந்திரிகள்.
இவர்கள் மனிதர்கள் ஆட்டிப் படைக்க முயல்வர். அப்போதெல்லாம் இந்த கலிவசம் அகப்படாதிருக்க ஒருவன் எம்பெருமானை சிக்கெனப் பிடித்துக் கொள்வது ஒன்றுதான் ஒரேவழி! இருப்பினும் சில பிழைகளை இவன் நம்மை செய்ய வைத்துவிடுவான். இவனே நம் கர்மமாகவும் ஆகி அம்மட்டில் வழி நடத்துவான். அவ்வேளை நம் பிரார்த்தனைகளே நம்மை கர்மக் கட்டில் இருந்து விடுவிக்கும். நம்பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கவும், நமக்கு நல்லருள் புரியவும் எம்பொருமான் கோவில் கொண்ட தலத்தையே திருப்பதி என்கிறோம். பதி என்னும் சொல் பரம புருஷனை குறிப்பது... திருவுடையபதி என்றால் அவனுக்குள் அந்த திருமகளும் அடக்கம் என்பதாகும்... அப்படிப்பட்ட திருப்பதிகளுக்கு சென்று நம் பிரார்த்தனைகளை நாம் காம்யார்த்தமாய் ஈடேற்றிக் கொள்ளலாம்’’
‘‘காம்யார்த்தமாய் என்றால்’’
‘‘இங்கே ஆதிசேஷன் தன் வாலால் எழுப்பிய கிணறு ஒன்று உண்டு. அதன் நீர் ஆதிசேஷனின் பக்தியுணர்வு கலந்த சிறப்புக்குரியது. ‘தாகமாய் இருக்கிறது’ என்று தாகத்துக்கெல்லாம் தாகமான எம்பெருமான் ஒரு நாடகமாட, உடனே மானுட பாவனையோடு பதறிய ஆதிசேஷன் தன் வாலால் நிலத்தில் அடித்து உருவாக்கிய கிணறு இக்கிணறு! இக்கிணறு எம்பெருமான் தாகம் தீர்த்தது!
எம்பெருமானின் தாகத் தவிப்பையே போக்கிய இக்கிணறால் நம் தவிப்பதை் தான் போக்க முடியாதா என்ன? இக்கிணற்றில் நாம் புனிதமான பசுவின் பாலைச் சேர்த்திட பாற்கடலாகவே அது ஆகி நம் கர்மமும் பாலோடு சேர்ந்து அக்கடலில் கலந்திடும்.
கலிவாழ்வில் மானிடர் துயரைக் குறைக்க என்றே எம்பெருமான் நம் பொருட்டு செய்த ஒரு ஏற்பாடு இது என்றும் கூறலாம்.
இங்கே தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்னும் பொருளில் தேவநாதன் என்னும் பெயரில் எம்பெருமான் சேவை சாதிக்கிறான். ஹேமாம்புஜ வல்லியாக தாயார் அவனுடன் திகழ்கிறாள்.
இங்குள்ள சிறுகுன்றின் மீதே எம்பெருமான் ஹயக்ரீவனாகவும் கோயில் கொண்டுள்ளான். இங்கு வருவோர் இந்த கருட நதியில் நீராடி, பின் சேஷ தீர்த்தத்தில் பால் சேர்த்து தேவநாதனிடமும், ேஹமாம்புஜ வல்லியிடத்தும் சென்று பிரார்த்தனைக்கான பயனை அனுக்ரஹமாய் பெற்று குன்றின் மேலேறி ஹயக்ரீவனை வணங்கிட, அவனே ஞானத்தை கல்வி என்னும் வடிவில் வழங்கி நம் வாழ்வில் ஒளி சேர்க்கிறான்’’
‘‘அடேயப்பா... எத்தனை கீர்த்தி! எத்தனை கருணை!’’
‘‘ஆம்! இத்தல கீர்த்தியும், கருணையும் பெரிதினும் பெரிது. திருப்பதிகளில் ஏழுமலை மீது ஒரு திருப்பதி திகழ்வது போல சமதளத்தில் கடல்மிசை திகழும் ஒரு திருப்பதியாக இது திகழ்கிறது. இதற்கு அப்பால் தென்புலத்திலும் சில திருப்பதிகள் இருப்பதால் இதை நடுநாட்டுத் திருப்பதி என்றும் அழைப்பர்.
இங்கே திருமங்கையாழ்வார் எழுந்தருளி தேவநாதனை புகழ்ந்து பாடி மங்களாசாசனமும் செய்துள்ளார்.’’
தேசிகரின் விளக்கத்தை கிருஷ்ண பாண்டனும் செவிமடுத்து சிலிர்த்துப் போனான். அதன்பின் கருடநதியில் நீராடி ஆலயமிசை சென்றிட, அங்கே வேதாந்த தேசிகரின் வருகையறிந்து பெரும் கூட்டம் கூடியிருந்தது.
எல்லோரும் தேசிகனை ஆச்சார்யனாக கருதி வணங்கிட, சிலருக்கு அவ்வாறு செய்ய தோன்றவில்லை! இவர் ஒரு சாமான்யப்பட்டவர்... அற்பமான மந்திர தந்திரங்களை கற்றவர். எம்பெருமான் வழி நடக்கும் ஆச்சார்யனுக்குரிய தகுதிகள் இல்லாதவர் என்று அவர்கள் கருதினர்.  
இது குறித்து தேசிகன் கவலை கொள்ளவில்லை. ஆனால் திருமங்கை கவலை கொண்டாள். அவள் முகவாட்டத்தில் அது தெரிந்தது. அவருக்கான மாளிகையில் அவர் ஓய்வெடுத்த வேளையில் தேசிகனே இது குறித்து திருமங்கையிடம் கேட்கலானார்.
‘‘ திருமங்கை எதனால் வாட்டம்?’’
‘‘என்னவென்று சொல்வேன்’’
‘‘எதுவாயினும் சொல். கவலைப்படுவது அறியாமையையும் குறிக்கிறது. என் மனைவியாக இருந்து கொண்டு அறியாமையோடு
இருக்கலாமா?’’
‘‘என்னிடம் இருப்பது அறியாமை அல்ல. ஆற்றாமை’’
‘‘அது அறியாமை பொறித்த இன்னொரு குஞ்சு தான். நீ விஷயத்துக்கு வா’’
‘‘உங்களை இங்குள்ள சிலர் ஒரு ஆச்சார்யனாகவே கருதவில்லை. அற்ப மந்திர தந்திரங்கள் உடையவர் என்கின்றனரே... நான் அதை எப்படி தாங்குவேன்’’
‘‘இதற்கா இத்தனை பாடு?’’
‘‘ஏன் உங்களுக்கு வருத்தமாக இல்லையா?’’
‘‘நான் கருப்பானவனில்லை. ஆயினும் என் நிழல் கருப்பாகவே உள்ளது. அது எப்படி கருப்பாக இருக்கலாம் என நான் கேட்கலாமா?’’
‘‘இது என்ன மடமை. நிழல் வண்ணமே இளங்கருப்பு தானே?’’
‘‘அதே போல கலிவண்ணமே இப்படி சிலர் நினைக்க காரணம் மங்கா! நீ இது குறித்து சிந்திக்காதே. காலத்தால் இவர்கள் மாறி விடுவர்’’
‘‘மாறாவிட்டால்?’’
‘‘அது அவர் கருமம். அதற்கு நானோ நீயோ என்ன செய்ய முடியும்?’’
உன் பசிக்கு நான் உணவளிக்கலாம். அது வரைதான் என் எல்லை. உனக்காக நான் உண்டால் உன் பசி தீருமா? உண்ணத்தான் முடியுமா?’’
‘‘எப்படி இப்படி சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறீர்கள்?’’
‘‘ஒர சாதாரணத்தை அப்படியே அது உள்ளவிதத்தில் தானே எடுத்துக் கொள்ள முடியும்?’’
‘‘ஆனாலும் உங்களுக்கு ஸ்திர மனது’’
‘‘எம்பெருமானை மனத்தில் உறுதிபட இருத்தினால் உன் மனதும் ஸ்திரமாகி விடும்’’
‘‘தேசிகனும், திருமங்கையும் திருமாளிகையில் இவ்வாறு பேசியபடி இருக்க அந்த மாளிகையை எழுப்பிய சிலருடன், ஆலய வைதீகர்களும் அவரைக் காண அங்கு வந்தனர்.
அவர்களிடம் ஒரு படபடப்பு தெரிந்தது.
‘‘என்ன விஷயம்?’’
‘‘ஒன்றுமில்லை. இத்திருமாளிகையின் புறத்தில் ஒரு கிணறு வெட்ட வேண்டும். வைதீக நிமித்தம் அது மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் இங்கே அந்த இடத்தில் கிணறு வெட்டவோ, எழுப்பவோ முடியாது என்கின்றனர். உள்ளே பாறை மிகுதியாம். ஊற்றும் இல்லையாம். கிணறு இங்கே சாத்தியமில்லை. கிணற்றின் உட்புறச் சுவரை எழுப்பத் தேவையான கற்களும் மிக கோணலானவை. அதைக் கொண்டு வட்ட வடிவில் ஒரு கிணற்றை எழுப்ப இயலாது என்கின்றனர்’’
‘‘அப்படியா?’’
‘‘ஆம்... நுாறு கொத்தன் வந்தாலும் ஆகாதாம். வந்திருக்கும் தேசிகர் மந்திரத்தாலும் ஆகாது... என்கின்றனர்’’ என்றார் ஒரு வைதீகர்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar