Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் இந்த ராவணன்
 
பக்தி கதைகள்
யார் இந்த ராவணன்

வட மாநிலங்களில் நவராத்திரியை ஒட்டி ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பது வழக்கம். சீதையைக் கடத்திய அவனுக்கு தண்டனை தரும் விதத்தில் ‘ராம் லீலா’ என்ற பெயரில் விழா நடத்துவர். சரி... யார் இந்த ராவணன்?

பிரம்மாவின் புதல்வர் புலஸ்திய மகரிஷி. இவரது மகன் குபேரன். இவனை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த புலஸ்தியர் விரும்பினார். அவனோ சிவனை நோக்கி தவமிருந்து பெரும் செல்வம் பெற்று, ராஜபோக வாழ்வு வாழ்ந்தான். இதை விரும்பாத புலஸ்தியர்   எடுத்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவாக மகனை ஆன்மிகப்பாதைக்கு திருப்ப, தன் உடலிலிருந்து பலம் மிக்க வஜ்ரவாகு என்னும் அரக்கனை உருவாக்கி  சண்டைக்கு அனுப்பினார். தந்திரக்காரனான குபேரன்,‘‘என் தந்தையின் உடலில் இருந்து பிறந்த தாங்களும் எனக்கு தந்தை போன்றவர். என்னை ஆசிர்வதியுங்கள்’’ என்றான். அத்துடன் புறகடை, மாலினி, வாகை என்ற மூன்று பெண்களை அவருக்கு பணிவிடை செய்யவும் அனுப்பினான்.

குபேரனின் பணிவும், சேவையும் வஜ்ரவாகுவைக் கவர்ந்தது. ஆனால் மகரிஷிகளின் எண்ணம் நடக்காமல் போகாது. குபேரனின் வாழ்வில் விதி விளையாடியது. ஒரு கட்டத்தில், தனக்கு பணிவிடை செய்த பெண்களின் சேவை போதும் என குபேரனிடமே திருப்பி அனுப்ப வஜ்ரவாகு முடிவு செய்தார். அவர்கள் செய்த சேவைக்காக விரும்பும் வரம் தருவதாகவும் வாக்களித்தார்.  தங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்கள் கேட்டனர். வாக்கு மாறாமல் வஜ்ரவாகு திருமணம் செய்தார். அவர்களில் புறகடைக்கு தசக்ரீவன் என்னும் மகன் பிறந்தான். ‘தசம்’ என்றால் ‘பத்து’. ‘க்ரீவம்’ என்றால் ‘தலை’. பத்து தலைகள் கொண்ட அவனே ‘ராவணன்’  என பெயர் பெற்றான். அவனுக்கு தம்பியாக கும்பகர்ணன் பிறந்தான். மாலினிக்கு விபீஷணனும், வாகைக்கு கரன் என்ற மகனும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். ராவணன் சிவபக்தனாகி உலகையே ஆட்சி செய்யும் வரம் பெற்றான். தேவர்களை அடக்கியாண்டான். குபேரனை அணுகிய  தேவர்கள், ‘‘உங்கள் சகோதரனான ராணவனை அடக்கி வையுங்கள்’’ என்றனர். குபேரனும்  துாது அனுப்பினான். ஆனால்  ராவணன், “சர்வலோகத்தையும் அடக்கியாளும் என்னைக் கண்டிக்க நீ யார்? ஒழுங்காக உன் செல்வத்தை என்னிடம் கொடுத்து விட்டு ஓடு’’ என எச்சரித்தான். செல்வத்தை இழந்த குபேரன் தந்தையான புலஸ்தியரின் விருப்பப்படி தவமிருக்க புறப்பட்டான்.
எல்லா விஷயத்திலும் சாதனை புரிந்த இருந்த ராவணன், அடுத்தவன் மனைவியை அடைய வேண்டும் என்ற தீய எண்ணத்தால் ராமபிரானின் வில்லுக்கு இரையானான். இதையே நவராத்திரி காலத்தில் ‘ராம லீலா’ என்னும் பெயரில் கொண்டாடுகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar