Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இருந்தால் வேங்கடம்! இறந்தால் வைகுண்டம்!!
 
பக்தி கதைகள்
இருந்தால் வேங்கடம்! இறந்தால் வைகுண்டம்!!

திருப்பதி மலையில் நந்தவனம் அமைத்து ஏழுமலையானுக்கு தொண்டு செய்தவர் அனந்தாழ்வான். ஒருநாள் அவர் மண் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கர்ப்பிணியான அவரது மனைவி மண் சுமக்க வந்தாள். சிரமத்துடன் அவள் நடப்பதைக் கண்ட சிறுவன் ஒருவன் உதவ முன் வந்தான். அதைக் கண்ட அனந்தாழ்வான், ‘‘நானும், என் மனைவியும் செய்யும் இறைத்தொண்டில் மற்றவருக்கு இடமில்லை’’ என்று சொல்லி விரட்டினார். போவது போல போக்கு காட்டிய அவன், கர்ப்பணி மீதுள்ள பரிவால் மீண்டும் வந்தான். சொல்லியும் கேட்காததால் கோபம் கொண்டு, கையில் இருந்த கடப்பாரையை சிறுவன் மீது வீச, அவனது முகத்தில் ரத்தம் வந்தது.
 மறுநாள் கோயிலுக்குச் சென்ற அனந்தாழ்வான் அதிர்ச்சியடைந்தார். ஏழுமலையானின் முகத்தில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டார். வந்தது ஏழுமலையான் என்பதை அறிந்து கண்ணீர் சிந்தினார். காயத்திற்கு மருந்தாக பச்சைக் கற்பூரத்தை அப்பினார். இதனடிப்படையில் இன்றும் பச்சைக் கற்பூரம் சாத்துகின்றனர். அனந்தாழ்வான் வீசிய கடப்பாரை கோபுரத்தின் உட்சுவரில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  
கடமை உணர்வுடன் மிக்க அனந்தாழ்வான் அடக்கத்தில் சிறந்தவராகவும் இருந்தார்.  
ஒருமுறை இவரது குருநாதரான ராமானுஜர் திருப்பதி மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்தார். அவருக்குப் பணிவிடை செய்ய அனந்தாழ்வான் மலையை விட்டு இறங்கி வந்தார். சீடரைக் கண்ட ராமானுஜர், ‘‘ யாராவது சிறுவர்களை உதவிக்கு அனுப்பியிருக்க கூடாதா?’’ எனக் கேட்டார். ‘‘ திருப்பதி மலை எங்கும் தேடியும் என்னைவிட சிறியவர் யாரும் தென்படவில்லை’’ என்றார். அனந்தாழ்வானின் அடக்கத்தைக் கண்ட ராமானுஜர் நெகிழ்ந்தார்.
இப்படியே துணிச்சலை வெளிப்படுத்தும் விதமாக சம்பவம் ஒன்று இவர் வாழ்வில் நடந்தது.
ஒருநாள் அதிகாலை பொழுதில் நந்தவனத்தில் பூப்பறித்தார் அனந்தாழ்வார். அப்போது இருளில் வந்த கருநாகம் ஒன்று காலில் தீண்டியும் அவர் பொருட்படுத்தவில்லை. வைத்தியரிடம் போகலாம் என அங்கிருந்தவர்கள் கூப்பிட்டும் மறுத்தார்.  
‘‘விஷம் என் உயிரைக் குடிக்காவிட்டால் இங்குள்ள ஏழுமலையானை தரிசிப்பேன். இல்லாவிட்டால் வைகுண்டம் சென்று அங்குள்ள பெருமாளை தரிசிப்பேன்’’  என்று கோயிலுக்கு நடந்தார்.
இவரைப் போற்றும் விதத்தில் ஏழுமலையானுக்கு சாத்திய மாலையை நந்தவனத்திலுள்ள மரம் ஒன்றிற்கு சாத்தி அதனை அனந்தாழ்வானாக கருதி பூஜிக்கின்றனர். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar