Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிருஷ்ண தந்திரம்
 
பக்தி கதைகள்
கிருஷ்ண தந்திரம்


கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒருநாள் காட்டுவழியாக சென்றனர். இருட்டி விட்டதால் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் புறப்படலாம் என எண்ணினர்.

மிருக நடமாட்டம் இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் மூவரும் துாங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் காவல் இருப்பது என்றும் முடிவு செய்தனர்.

 அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் துாங்க அர்ஜுனன் மட்டும் விழித்திருந்தான். திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

 அதில் கோர உருவம் ஒன்று வெளிப்பட்டது.

அகன்ற நாசியும், துாக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக அது காட்சியளித்தது.

ஆவேசத்துடன் துாங்குவோரின் அருகில் சென்றது.

தடுக்க முயன்ற அர்ஜுனனிடம் அவ்வுருவம் துாங்குவோரை கொல்லப்
போவதாக கர்ஜித்தது. அர்ஜுனனுக்கு ஆக்ரோஷம் வந்தது. அவனது கோபம் அதிகரிக்க அதிகரிக்க, கோர உருவம் பெரிதாகத் தொடங்கியது. அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.

 
இரண்டாம் ஜாமம் வந்ததும் பலராமரை காவலுக்கு வைத்த அர்ஜூனன் துாங்க ஆரம்பித்தான்.
 அப்போது மீண்டும் கோர உருவம் தோன்றி முன்பு சொன்னதையே பலராமரிடமும் தெரிவித்தது. வெகுண்ட அவருக்கு கோபம் தலைக்கேறியது. அதற்கேற்ப உருவம் பெரிதாகி பலராமரை தாக்கி மறைந்தது.


மூன்றாம் ஜாமம் வந்ததும். கிருஷ்ணரை எழுப்பி விட்டு பலராமர் துாங்க தொடங்கினார்.

அப்போதும் பொல்லாத உருவம் வெளிப்பட்டது.

 அதைக் கண்ட கிருஷ்ணர் சிரித்தார்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ எனக் கேட்டது கோர உருவம்.

 
‘‘துாக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையுமாக இருக்கும் உன்னை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை’’ என்றார் கிருஷ்ணர். ஆக்ரோஷத்துடன் அந்த உருவம் மோத ஆரம்பித்தது. கிருஷ்ணரும் புன்னகை மாறாமல் சண்டையில் ஈடுபட்டார்.

கிருஷ்ணர்  சிரிக்கச் சிரிக்க உருவத்தின் பலம், அதன் வடிவம் குறைய தொடங்கியது.
கடைசியில் அவ்வுருவம் சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அதை ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

 பொழுது புலர்ந்தது.

பலராமரும், அர்ஜுனனும் கண் விழித்தனர். இரவில் கோர உருவம் தாக்க வந்ததையும், அது பெரிதாக மாறியதையும் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, ‘‘உங்களுடன் சண்டையிட்ட கோர உருவம் இது தான்.

  இருவரும் கோபத்துடன் சண்டையிட்டீர்கள். உங்களுக்கு
 கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. சிரித்தபடியே நான் சண்டையிட்டதால் அதன் பலம் குறைந்ததோடு கடைசியில் புழுவாக மாறியது.

 வம்பு சண்டைக்கு ஒருவன் வரும்போது புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.
 கோபத்தைக் குறைப்பவனே சிறந்த ஞானி’’  என்றார்.
இந்த கிருஷ்ண தந்திரம் நமக்கும் அவசியமானது.  இக்கட்டான நேரத்தில் புன்னகையுடன் செயல்பட்டால் பெரிய பிரச்னைகள் கூட சிறிதாகி விடும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar