Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நெற்றிக்கண் நெருப்பில் மன்மதன்
 
பக்தி கதைகள்
நெற்றிக்கண் நெருப்பில் மன்மதன்

‘‘அசுரனின் பிடியில் இருந்து நம் அமராவதி நகரம் மீள்வது எப்போது? சூரபத்மனின் கொடுங்கோல் ஆட்சி தீர்ந்தால் தான் நாம் சுகம் காண முடியும்?’’ என தேவர்கள் வருந்தினர்.
‘‘இமய மலையில் பார்வதி நிகழ்த்தும் தவம் பலிக்க வேண்டும். சனகாதி முனிவர்கள் முன்னர் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் மவுனம் கலைந்து அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அதற்கு நாம் ஏதாவது செய்தால் சிவசக்தி ஐக்கியம் நிகழும். இல்லறத்தில் இருவரும் இணைந்தால் நாம் எதிர்பார்க்கும் திருமுருகனின் அவதாரம் விரைவில் நிகழும். பார்வதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானின் உள்ளத்தில் தோன்ற வேண்டும்! ஆசை ஒருவரின் உள்ளத்தில் அலைய பாய வேண்டும் என்றால் அதற்கு மன்மதன் தானே மலரம்பு தொடுக்க வேண்டும். அதனால் மன்மதனை நாம் அனுப்புவோம்’’ என்றார் பிரம்மா
அந்த தீர்மானத்தை தேவர்கள் அனைவரும் வழிமொழிந்தனர்.
‘மன்மதா! வா!’ என அவர்கள் அழைத்தனர்.
ஆண், பெண் சங்கமத்திற்கும், உயிர்களின் பெருக்கத்திற்கும் ஆசையே அடிப்படைக் காரணம். அந்த ஆசையை மனங்களில் தோற்றுவிப்பவனே மன்மதன். சிறகடிக்கும் சின்னச் சின்ன ஆசைகளால் தானே இந்த பெரிய பிரபஞ்சமே இயங்குகிறது.  
ஆசை தோன்றுமிடத்தில் தான் அவனும் தோன்றினான்.
ஆம்! திருமாலின் மனத்தில் இருந்து உண்டானவன் தான் காமன் என்னும் மன்மதன்.
திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்து உண்டானவர் பிரம்மா என்பதால் மன்மதன் அவருக்குத் தம்பிமுறை மன்மதன்.
வருகை புரிந்த மன்மதனை வரவேற்றனர் எல்லோரும்!
ஏனென்றால் அவனால் தானே எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். பிரம்மா தம்பியின் தோளில் தட்டிக் கொடுத்து,
‘மன்மதா! உன் உதவியை எதிர்பார்த்தே அனைவரும் இங்கு கூடியுள்ளோம்’’
‘அண்ணா! கட்டளை இடுங்கள்! கண நேரத்தில் முடிக்கிறேன்’ என்றான் மன்மதன்.
கயிலை நாதரான சிவபெருமானின் மவுனத்தைக் கலைப்பதற்காக  மலர்க்கணை தொடுக்க வேண்டும். தணியாத மோகத்தை சிவபெருமான் மனதில்  உண்டாக்கினால் இமயமலையில் உள்ள பார்வதியைச் சென்று அவர் சந்திப்பார். பிறகென்ன?
இருவரும் திருமணம் புரிவர். அதற்குப் பின் மகன் பிறப்பான். அவன் பிறந்தால் சூரபத்மனின் கதை முடியும். உடனே மீன் கொடி பறக்கும் உன் தென்றல் தேரில் கரும்பு வில்லோடு மலர் அம்புகளோடு சென்று காரியத்தை முடி’ என்றான் பிரம்மன்.
ஆலைக் கரும்பு சிலை! ஐங்கணை பூ! நாண் சுரும்பு!
மாலைக் கிளி முரசம்! மாருதம் தேர்! – வேலைக்
கடி முரசம்! கங்குல் களிறு! குயில் காளம்!
கொடி மகரம்! திங்கள் குடை!
அனைத்து பரிவாரங்களுடன் ஆரவாரமாக வந்த மன்மதன் தயங்கி நின்றான்.
‘‘அண்ணா! என்னை மன்னியுங்கள்!’’ என்றான்
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
அழல் வடிவான சிவபெருமானின் நெஞ்சில் ஆசையைத் தோற்றுவிக்க என்னால் முடியாது. சிவனைத் தவிர வேறு எவரை வேண்டுமானாலும் காமக்கடலில் விழ வைப்பேன். முற்றும் துறந்த முனிவர்கள், இந்திரன், சந்திரன் என எவரும் என் மலர்க்கணைக்குப் பலியாவது நிச்சயம். ஆனால் அவரின் நிழலைக் கூட என்னால் நெருங்க முடியாது.
‘மன்மதா! நீ சொல்வது உண்மை தான்!  இருந்தாலும் இடர்ப்படும் எங்களுக்காக இந்த உதவியை செய்து தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உன்னை சபிப்பேன்.  போய் வருகிறேன் என்று சொல்’ என்று கோபித்தான் பிரம்மன்.  
சாபம் பெறுவதை விட சிவபெருமான் கையால் அழிவதே மேல் என முடிவு செய்தான் மன்மதன்.
‘நாசம் வந்து உற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்’
‘போய் வருகிறேன் என்று சொல்ல மாட்டேன் பிரம்ம தேவரே!  போவேன் ஆனால் வர மாட்டேன்’ என்று புறப்பட்டான் மன்மதன்.
மன்மதன் தன் அரண்மனைக்கு வந்து புறப்படத் தயாரானான். மனைவி ரதிதேவி ஓடி வந்தாள். ‘‘நாயகரே! எங்கே போகிறீர்கள்?’ எனக் கேட்டாள்.
‘அபசகுனமாக பேசுகிறாயே. அவ்வளவு தான் நான்’ என்றான். நடந்ததை எல்லாம் அறிந்த ரதிதேவி, ‘சிவபெருமானோடு போர் செய்து திரும்பி வந்தவர்கள் உண்டா? தாங்கள் தனித்துச் செல்ல வேண்டாம். உடன் நானும் வருகிறேன். தென்றல் தேர் கயிலாயத்தின் வாசலில் நின்றது. காவல் காக்கும் நந்திதேவர் வருகை புரிந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.
‘‘நந்தி தேவரே! தேவர்களின் துயரம் போக்க பிரம்மனின் ஆணையை ஏற்று சிவபெருமானைக் காண வந்ததாகச் சொன்னதும் அனுமதி கிடைத்தது.  
‘வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்!
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும்! தோன்றும்!
கடியேறு கமழ்கொன்றை கண்ணி தோன்றும்!
காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்!
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்!
எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்!
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்!
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!
‘சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுக்க வந்தேனே!  எல்லாம் ஊழ்வினை நடத்தும் நாடகமே’ என்று மனம் நொந்தான்  மன்மதன்.
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் தானே! தாமரை, குவளை, முல்லை, அசோகு, மாம்பூ என மலர்களால் ஆன கணைகளை குறிபார்த்து சிவபெருமான் மீது விடுத்தான். அம்பு பட்டதும் மவுனம் கலைந்த சிவபெருமான் நெற்றிக்கண் திறக்கவே, மன்மதன் வெந்து சாம்பல் ஆனான். மன்மதனை எரித்த புகை கயிலாயம் முழுவதும் பரவியது.
கணவரை இழந்த சோகத்தில் ரதி கண்ணீ்ர் சிந்தினாள்.
‘‘என் நாயகரின் உடலைப் பார்த்துக் கூட அழ முடியாத அபாக்கியசாலியாகி விட்டேனே! சாம்பல் குவியலாக அல்லவா அவரது சரித்திரம் முடிந்து விட்டது. ‘மன்மதனைப் போன்ற அழகு’  ‘மன்மதனும் ரதியும் போல’ என்னும் புகழ் மொழிகள் பொய்த்து போனதே’’  
‘செம்பதுமை திருக்குமாரா! தமியேனுக்கு
ஆருயிரே! திருமால் மைந்தா!
சம்பரனுக்கு ஒரு பகைவா! கன்னல் வரிச்
சிலை பிடித்த தடக்கை வீரா!
அம்பவளக் குன்றனைய சிவன் விழியால்
வெந்துடலம் அழிவுற்றாயே!
உம்பர்கள் தம் விழியெல்லாம் உறங்கிற்றோ?
அயனாரும் உவப்புற்றாரே?
என கதறினாள் ரதிதேவி.
மன்மதன் எரிக்கப்பட்ட செய்தி கேட்ட தேவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar