Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜல்...ஜல்...ஜல்...எனும் சலங்கை ஒலி....
 
பக்தி கதைகள்
ஜல்...ஜல்...ஜல்...எனும் சலங்கை ஒலி....

சந்திரசேகர்.

வீட்டில் எந்த நேரமும் லேசான சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது தீய சக்திகளை அண்டவிடாமல் தடுக்க எளிய வழி.  
பெரும்பாலான பங்களாக்களில் ஓசை எழுப்பும் குழாய் மணிகளை தொங்கவிட்டிருப்பர். 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த மணிகள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் நம் பாரம்பரியத்திலேயே பல விஷயங்கள் உள்ளன. அதை கடைபிடித்தாலே எந்த செலவும் செய்ய தேவையில்லை.  
நடை பழகும் சிறுகுழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது நம் வழக்கம். இதில் இருவித நன்மை உண்டு. அந்த சத்தத்திற்காக குழந்தை மேலும் மேலும் நடக்கப் பழகும். அதன் கால்கள் வலுப்பெறும், பசியெடுக்கும், உடல்நலம் பெறும்.
மற்றொன்று கொலுசு சத்தம் நின்று போனால் குழந்தை எங்கே இருக்கிறது என்ன செய்கிறது என புரிந்து நாம் உடனே கண்காணிக்க  வேண்டும்.
இதில் நமக்கு தெரியாத நன்மையும் ஏற்படுகிறது. கொலுசு சத்தம் ஒலிக்கும் வீட்டில் எந்த துர்ஆவிகளும் அண்டாது. எனவே குழந்தைகள் மட்டுமின்றி பெண்களும் கொலுசு அணியலாம்.
அடுத்தது வளையல். கர்ப்பணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதன் நோக்கம் கருவில் உள்ள குழந்தைக்கு மங்கல ஒலி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதே சமயம் கர்ப்பிணியின் நடமாட்டமும் குடும்பத்தினரின் கண்காணிப்பில் இருக்கும்.
அதே போல வீட்டில் இருக்கும் பெண்கள் வளையலுடன் தான் இருக்க வேண்டும். தங்கத்தை விட கண்ணாடியால் ஆன வளையல் அணிவது சிறப்பு. வளையல்கள் உரசும்போது ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.  
அதிர்ஷ்டத்தை நிலைக்க செய்வதில் பெரும் பங்கு கண்ணாடி வளையல் சத்தத்திற்கு உண்டு. அதிர்ஷ்டத்தை தடை செய்யும் இடையூறுகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும்.
பெண்கள் வளையல் அணியாமல் ஒருபோதும் பூஜை செய்ய கூடாது. நிறைய கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்வில் நிறைய நல்ல விஷயங்களும் நடக்கும். ஒரு வீட்டில் தொடர்ந்து கண்ணாடி வளையல், கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாள்.
அடுத்தது எதிர்மறை விஷயம்.
வீட்டில் எப்போது நல்ல விஷயங்களையே பேச வேண்டும். நெகட்டிவ் சொற்களை கூடியவரை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான விளைவை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.  
உருப்பட மாட்ட, விளங்க மாட்ட, நாசமா போவ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் வீடுகளின் பக்கம் மகாலட்சுமி நெருங்க கூட மாட்டாள். கடவுள் அருளால எல்லாம் நல்லதாவே நடக்கும், எல்லாம் நன்மைக்கே, ரொம்ப நல்லது என எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசும் இடத்தில் நிம்மதி நிறைந்திருக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar