Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!!
 
பக்தி கதைகள்
நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!!

விவசாயி ஒருவரிடம் ‘எழில்’ என்ற பெயரிடப்பட்ட குதிரை ஒன்று இருந்தது. ஒருநாள் மாலையில் அவரைத் தேடிக்
 கொண்டு வெளியூர்க்காரர் ஒருவர் கசங்கிய ஆடையுடன் வந்தார்.
‘‘

என்ன விஷயமா வந்தீங்க?’’ கேட்டார் விவசாயி‘

இது எனக்கு பழக்கமில்லாத பாதை.

வழியில கண்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல விழுந்திடுச்சு. அதை
 வெளியே எடுக்கணும்.

உங்ககிட்ட
ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க...

அதைக் கொண்டு
 காரை வெளியே எடுக்கலாமுன்னு பக்கத்தில சொன்னாங்க. அதான்
உதவி கேட்டு வந்தேன்

’’ என்றார் ‘‘நீங்க வந்தது பெரிய காரா...’’ கேட்டார் விவசாயி. ‘‘இல்ல...சின்ன கார் தான்யா’’ என்றார் வந்தவர். கயிறு உட்பட உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயாரானார் விவசாயி.
குதிரையின் கட்டை அவிழ்த்து, அதைக் கையில் பிடித்தபடி நடந்தார். கார் விழுந்திருக்கும் பள்ளம்,  அதன் நிலைமை எல்லாவற்றையும் பார்த்தார்.  கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால் அதை வெளியே எடுக்கும் போது குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என அவருக்குத் தோன்றியது. ஒரு கயிறை எடுத்து காரில் கட்டி குதிரையோடு இழுப்பதற்குத் தோதாக பிணைத்தார்.

 கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றிருந்தார்.  ‘‘பிறகு, எங்கடா பழனி... ஜோரா இழு  பார்ப்போம்’’ எனக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் நின்றிருந்தது. பிறகு ‘‘ஏண்டா கந்தா இழுடா ராஜா’’ என சத்தமாகச் சொன்னார். குதிரை அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. ‘‘டேய் முருகா...வேகமா இழு’’ மறுபடியும்  உரத்த குரலில் சொன்னார்.  குதிரை ஒரு அடி கூட நகரவில்லை ‘‘என் செல்லம்...என் தங்கம்...எழிலு.. நீயும் சேர்ந்து இழுடா’’  என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.

 அடுத்த ஐந்து நிமிடத்தில் கார் பள்ளத்திலிருந்து மேலே ஏறியது. நன்றி சொன்னார் வெளியூர்க்காரர்.‘‘ ஐயா...நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்களே! அதான் ஏன்னு புரியலை’’  என் எழிலுக்கு கண் தெரியாது. இந்த கஷ்டமான வேலையை தான் மட்டும் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லையா.. அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிறதா நம்ப வெச்சேன்.

 அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை  இழுத்துடுச்சு! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு காசு பணம் தேவையில்ல...ஆனால் அவை நமக்கு சம்பாதித்துக் கொடுப்பதோ ஏராளம். தத்துவ மேதை பாஸ்கல்,‘‘ வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.

 நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதையே திருவள்ளுவரும் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar