Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாணயம் மட்டும் போதும்
 
பக்தி கதைகள்
நாணயம் மட்டும் போதும்


புலவர் ஒருவர் வறுமையில் வாடினார். அவரது  நிலையைக் கண்ட கிராமத்தின் தலைவர், ‘‘தன்னை புகழ்ந்து பாடும் புலவருக்கு நம் அரசர் பரிசளிக்கிறார். நீங்களும் முயற்சி செய்யுங்கள்’’ என்றார். புலவரும் அவைக்குச் சென்று மன்னரைப் புகழ்ந்து பாடினார். ‘‘ புலவரே! உமக்கு என்ன பரிசு வேண்டும்?’’ எனக் கேட்டார் மன்னர்
 ‘‘ அதோ இருக்கிறதே சதுரங்க பலகை. அதில் முதல் கட்டத்தில் ஒரு நாணயத்தை வையுங்கள். அடுத்தடுத்த கட்டத்திற்கு நாணயத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்லுங்கள். இதற்கு எவ்வளவு நாணயம் தேவைப்படுகிறதோ அதை கொடுத்தால் போதும்’’ என்றார். ‘‘ நாணயம் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" எனக் கேட்டார் அரசர்.
‘‘ நாணயம் மட்டும் போதும்’’ என பதிலளித்தார் புலவர்.  
சேவகர்களை அழைத்து கஜானாவில் இருந்து நாணய மூட்டைகளை எடுத்து வரக் கட்டளையிட்டார் அரசர்.  நாணயங்கள் அடுக்கப்பட்டன.  1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என அடுக்கினர். 10ம் கட்டத்தில் எண்ணிக்கை 512 ஆனது. 20ம் கட்டத்தில் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது. பாதி துாரம் அதாவது 32வது கட்டத்தில் நாணயங்களின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.
அப்படியே கோடான கோடிகளை தாண்டியது. இதனால் நாட்டையே அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது. புலவரின்  சாதுரியத்தையும், தான் செய்த தவறையும் உணர்ந்த அரசர் மன்னிப்பு கேட்டார். என்னைவிட இவருக்கு அதிக திறமை அதிகம் என அரச பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar