Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கணவரின் உயிரை மீட்டவள்
 
பக்தி கதைகள்
கணவரின் உயிரை மீட்டவள்

மந்திர தேசத்து மன்னரான அஸ்வபதி  ஒருமுறை நாரதரைச் சந்தித்து தனக்கு குழந்தைப்பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினார். அதற்கு காரடையான் நோன்பு இருந்தால் பிரச்னை தீரும் என்றார் நாரதர்.
அதன்படி மன்னருக்கு பிறந்த பெண்குழந்தையே சாவித்திரி.  கல்வி, கலைகளைக் கற்றுக் கொடுத்து வீரமங்கையாக்கினாள். ஒருநாள் காட்டில் வேட்டைக்குப் போன சாவித்திரி, சாளுவ தேசத்து மன்னரான சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்தித்தாள்.  
போரில் நாட்டை இழந்த சால்வன் காட்டில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். சால்வனுக்கும் அவரது மனைவிக்கும் பார்வை குறைபாடு இருந்தது. பெற்றோரை அன்புடன் பராமரித்த சத்தியவானைக் கண்ட சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். ‘இவரே எனக்கு ஏற்ற கணவர்’ எனத் தீர்மானித்தாள்.
விஷயத்தை தந்தையான அஸ்வபதியிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார்.  
மந்திர தேசம் வந்த நாரதரிடம் தன் மகளின் விருப்பத்தை அஸ்வபதி தெரிவித்த போது, ‘‘சத்தியவானுக்கு அற்பாயுள் என்பதால் எமன் அவனை நெருங்கும் காலம் வரப் போகிறது’’ என எச்சரித்தார். ஆனாலும் சத்தியவானைக் கணவராக அடைந்தாள் சாவித்திரி.
அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். மாமனார், மாமியாரைப் பரிவுடன் கவனித்தாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. ஒருநாள் சாவித்திரியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சத்தியவானின் தலை கீழே நழுவியது.  கணவரின் உயிரை எமன் கவர்ந்து செல்வதை அவள் நேரில் கண்டாள். தன் கற்புத்திறத்தால் எமதர்மனைப் பின்தொடர்ந்தாள். அவனுடன் போராடி கணவரின் உயிரை மீட்டாள். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு என பல வரங்களை எமதர்மனிடம் பெற்றாள்.  
பொதுவாக பெண்களின்  பெயருக்கு பின்னர் கணவரின் பெயரை எழுதுவது வழக்கம். ஆனால் கணவரின் மீதுள்ள பக்தியால் இவள் மட்டுமே ‘சத்தியவான் சாவித்திரி’ என அழைக்கப்படுகிறாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar