Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அசுரர்கள் புரிந்த அற்புத யாகம்
 
பக்தி கதைகள்
அசுரர்கள் புரிந்த அற்புத யாகம்

‘நம் குருநாதரின் ஆணைப்படியே சிவபிரானை நோக்கி நீ தவம் இயற்று! மாபெரும் வேள்வி செய்! அனைத்துத் தம்பியர்களும் உன் உடனிருப்பார்கள்’ என்றாள் மாயை. தாயும், குருவும் கூறிய வண்ணம் வனத்தில் ஒரு பெரிய பரப்பைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய யாகம் நிகழ்த்த திட்டமிட்டு அதற்குரிய வேள்விப் பொருள்களையும் தருவித்தான் சூரபத்மன்.
பிரம்மாண்டமான யாகசாலை அதைச் சுற்றி மலைகளினாலேயே மதில்கள். காவல் காக்க எண்ணற்ற அசுரர்கள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? சூரபத்மன் தனது தாயார் மாயைப் போலவே மந்திர மாயங்களாலேயே பூதங்களையும், காளிகளையும், வைரவர்களையும் வரவழைத்து காரியங்கள் செய்ய கட்டளையிட்டான். ஆயிரம் யோசனை அகலமும், ஆழமும் உள்ள ஓர் ேஹாம குண்டமும், அதனைச் சுற்றி நுாற்றி எட்டு ேஹாம் குண்டங்களும், அவற்றைச் சுற்றி ஆயிரத்தெட்டு ேஹாம குண்டங்களும் நிறுவினான்.  
யாக திரவியங்களாக மிருகங்களின் சதைத்துண்டுகள், இரத்தம், நெய், பால், தயிர், மது, நச்சு விறகுகள் போன்றவற்றை தருவித்து மலைபோல குவித்தான். வேள்வி தோல்வியாகாமல் வெற்றியோடு விளங்க நான்கு வாயில்களுக்கும் சென்று வீரமடந்தையைப் பூஜித்து பலி தொடுத்தான். அனைத்து ேஹாம குண்டங்களிலும் அக்னி அணையாது வான் நோக்கி தீ நாக்குகள் நீளுமாறு பார்த்துக் கொள்ள தாரகாசுரனையும் சிங்கமுகாசுரனையும் பொறுப்பாக நியமித்தான்.
நடுவில் வைத்த ேஹாம குண்டத்தில் வச்சிரக் கம்பத்தை நிலைநாட்டினான். பின் சிவபெருமானை மனமார தியானித்து சிவ மந்திரத்தை முறைப்படி உச்சரித்து நெய், பொரி, உதிரம், மாமிசம் முதலியவற்றை அக்னி பகவானுக்கு ஆகுதி ஆக்கி வேள்வி செய்தான்.
 அனைத்து ேஹாம குண்டங்களிலும் தீ ஒளிர, நாம உச்சாடனம் வானுலகை எட்ட அற்புதமாக யாகம் நடத்தினர் அசுரர்கள். எட்டுத் திசைகளையும் சுட்ட வேள்வி நெருப்பினைக் கண்டு திருமால், இந்திரன் முதலானோர் நடுங்கினர். பல்லாண்டுகள் யாகம் இயற்றியும் பரமசிவன் தரிசனம் தராதது குறித்து சூரபத்மன் மனம் வருந்தி தன் தம்பியரைக் கூப்பிட்டான்.
‘வேள்வி வளர்ப்பதையும், சிவமந்திரம் ஜபிப்பதையும் சற்றும் விட்டு விடாமல் நீங்கள் தொடருங்கள்’ என்று ஆணையிட்டான். பிறகு சூரபத்மன் ஆகாயத்திற்குச் சென்றான். வானில் சென்று நின்றபடியே, ‘சிவபெருமானே சரணம்! சரணம்!’ என்று கூவியபடி வாளாயுதம் கொண்டு தன் தசைகளைத் தானே அரிந்து அவற்றையே யாகக்கனலில் ஆகுதி ஆக்கினான்.
‘வானகத்திடை நிற்புறு சூரபன் மாவாம்
தானவர்க்கு இறை வாள்கொடே ஈர்ந்து தன் மெய்யின்
ஊன் அனைத்தையும் அங்கி மேல் அவியென ஓச்சித்
சோனை ஒத்த தன்  குருதியை இழுதெனச் சொரிந்தான்’
தசைகளையே சமித்தாகவும், உதிரத்தையே நெய்யாகவும் ஆக்கி அண்ணன் சூரபத்மன் யாகம் புரிவதைக் கண்ட தம்பி சிங்கமுகாசுரனும், தாரகனும், அசுரர்களும், ‘இன்னமும் சிவன் மனம் இரங்கவில்லேயே’ என வருந்தினர்.
ஆயிரம் ஆண்டுகள் இப்படியே கழிந்தன. வாளால் தசைகளை அரிய அரிய மேலும் மேலும் அங்கங்கள் வளர்ந்து கொண்டே இருந்தது. இதுவும் சிவனாரின் திருவிளையாடலோ என எண்ணிய சூரபத்மன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, ‘முழுவதுமாகத் தன்னை யாகத்தணலில் அர்ப்பணித்து’ என எண்ணி அக்கினியில் விழுந்தான். நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்ட சூரபத்மனின் பிரிவைத் தாங்க இயலாமால் சிங்கமுகாசுரன் தன் தலையைத் தானே அரிந்து கொண்டான்.
அதைப் பார்த்த தாரகனும் அவ்வண்ணமே செய்தான். இவருவம் தலையைத் துண்டித்துக் கொண்டாலும் வெட்ட வெட்ட மீண்டும் அவர்கட்குத் தலைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. அண்ணனைப் போலவே இருவரும் யாக குண்ட நெருப்பில் விழ முனைந்தனர்.
அப்போது சிவபெருமான் தோன்றினார்.
‘‘அசுரர்களே! வருந்தாதீர்கள்! அரக்கர்களாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் அண்ணன், தம்பி பாசத்தையும், ஏற்றுக் கொண்ட செயலில் உறுதியாக இருக்கும் நிலைகுலையாத நெஞ்சுரத்தையும் பாராட்டி மகிழ்கின்றேன். புனிதகங்கை நீரை இங்கே பெருக்கெடுக்கச் செய்கிறேன். தணலில் விழுந்து இறந்த தமையன் சூரபத்மன் புனித கங்கையில் புத்துயிர் பெறுவான்’
சிங்கமுகனும், தாரகனும், அசுரர்களும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்த்தொலி கூற வேள்வி நெருப்பில் இருந்து உயிர்த்தெழுந்த சூரபத்மன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சிவபெருமானை நமஸ்காரம் செய்தான்.
அருட்ஜோதி தெய்வம்! என்னை
ஆண்டு கொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்த தெய்வம்!
பொருட்சாரும் மறைகள் எல்லாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்த தெய்வம்! உயர்
நாதாந்த தெய்வம்!
இருட்பாடு நீக்கி ஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!
நெடுங்காலம் தன்னை நினைத்துப் பெருந்தவம் புரிந்த சூரபத்மனை நோக்கிய சிவபெருமான், ‘என்ன வரம் வேண்டுமோ...கேள், வழங்குகின்றேன்’ என்றார்.
‘எம்பெருமானே! உலகிலுள்ள அனைத்து அண்டங்களுக்கும் நானே அதிபதியாக வேண்டும். யாராலும் அழிக்க முடியாத வஜ்ர தேகத்தை நான் பெற வேண்டும். எண்ணும் இடங்களுக்கு அடுத்த நொடியே செல்ல இந்திர ஞாலத்தேர் வேண்டும். இந்திரன், நான்முகன், திருமால் தேவர்கள் அனைவரையும் வெல்லும் ஆயுதங்கள் வேண்டும். ஒருமைப்பட்ட மனதுடன் பலகாலம் தவம் செய்து உயிரையும் பொருட்படுத்தாமல் ேஹாம குண்டத்தில் தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டதால் அவனுக்கு வரங்கள் வழங்குவதில் தடை என்ன இருக்க முடியும்?
ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நுாற்றெட்டு யுகங்கள் ஆட்சி புரியும் வல்லமையும், வஜ்ர தேகத்தையும், இந்திர ஞாலத்தேரையும், மேலும் எண்ணிறந்த ஆயுதங்களையும் வரங்களாக வழங்கினார் சிவபெருமான்.
ஏழுகடல்களும் மேருமலையைச் சூழ்ந்து விளங்கினால் எப்படி இருக்குமோ அப்படி அசுரர்கள் கூட்டம் சூரபத்மனைச் சுற்றி கோஷமிட்டு குதுாகலித்தது. சூரன், சிங்கமுகன் தாரகன் மூவரும் சிவமூர்த்தி தந்த வரபலத்தால் புதிய மும்மூர்த்திகளாகவே பொலிந்தனர். கச்சியப்பர் பாடுகின்றார். வரம் வழங்கிய பின் சிவபெருமான் கூறுவதார் அச்செய்யுள் அமைந்துள்ளது.
தேவர் யாவரும் சென்று தொழப்படும்
மூவர் ஆகி மொழிந்திடும் நுங்களைத்
தாவிலாத நம் சக்தி ஒன்றே அலால்
ஏவல் வெல் பவர்?
மூல முதல்வனைத் தவிர வேறு எவராலும் நம்மை அழிக்க முடியாது என்பதை அறிந்தபின் அசுர கணங்கள் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.   


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar