Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வளையல் வானவில்
 
பக்தி கதைகள்
வளையல் வானவில்

மலை ஏற ஏற மலைப்பும் திகைப்பும் தான் தோன்றும். ஆனால் அந்த மலைப்பயணம் வியப்பும், சிலிர்ப்புமாகவே அமைந்தது. எங்கே திரும்பினாலும் பசுமை, செழுமை, வளமை, ததும்பும் ஊராக இருந்தது விஜயவாடா. கனகதுர்கா எனக்கு நீண்ட நெடுங்காலமாகக் கனவு துர்கா. எனது கனவு தேவதை. எனது வண்ண தேவதை.
 உலக கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட போது, கவிதை வடிவில் கனகதுர்கா சக்தி அழைத்ததாக நெகிழ்ந்தேன். மனசு முழுக்கக் கவிதையும், கனக துர்கா கனவும் சுமந்து பயணப்பட்டேன்.  முதன் முதலில் இந்திர கீலாத்ரி மலைக்குச் சென்றேன். அந்த மலைப்பயணம் வியப்பும், சிலிர்ப்புமாக இருந்தது.
அது நவராத்திரி நேரம். தினமும் கண்கவரும் அலங்காரமும், பூமாலையும், தெய்வீகமும், கம்பீரமுமாக இருப்பவள் விஜயவாடா கனகதுர்கா. நவராத்திரி சமயம் என்பதால் அவளுக்குக் கூடுதல் பொலிவு, சோபை, ஜொலிப்பு, களிப்புடன் அவள் இருப்பாள் என்ற ஆசையுடன் பயணித்தேன். ஒருபக்கம் கிருஷ்ணா நதி அன்னையின் பாதம் நனைக்கிறது. மறுபக்கம் மலையின் பசுமை அவளை இணைக்கிறது. கிருஷ்ணாவை நதி என்றே சொல்ல முடியாது. கடல் போல பரந்து விரிந்து கிடக்கிறது. நல்லவர்களாக நம் மனமும் இப்படித்தான் விரிவடைந்து இருக்க வேண்டும் என்பதையே கனகதுர்கா, இப்படி நதியாகப் பாய்ந்து செல்கிறாள். குகையை, கடுமையான பாறையைக் குடைந்து  கிருஷ்ணா நதியைப் பாய வைத்ததாக புராணம் சொல்கிறது. இதுவும் கூடக் கனகதுர்கா சொல்லும் தத்துவம் என்றே தோன்றுகிறது.
கடினமான, ஈரமற்ற, உயிரோட்டம் இல்லாத மனதைக் குடைந்து, மனிதநேயம் நிறைந்த ஜீவநதியாக நாம் மாற வேண்டும் என்பதைத் தான் மலை அடிவாரத்தில் இருந்தே கனகதுர்கா எடுத்துச் சொல்கிறாள். கோயிலுக்குச் செல்வதும், கடவுள்  தரிசனமும் எதற்காக? என்ற கேள்வி எழும் போது இதற்காகத் தான் என்று சக்தி உணர்த்துவது போல இருந்தது. திருத்தலங்கள் உருவான விதம் கேட்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து ஆச்சர்யப்பட மட்டுமல்ல. அதன் தத்துவம், படிமம், உணர்வுகளை நம் நாடி நரம்பெல்லாம் இணைத்துக் கொள்ளத்தான் என்பதை உணர்த்தினாள் கனகதுர்கா.   
மலை ஏற ஏற மனசெல்லாம் பரவசம். சுற்றிலும் இருந்த பசுமை, காற்றின் குளுமை, ஆற்றின் நீ்ர்மை இதெல்லாம் வேறு பிறவியாக மாற்றுவதை உணர்ந்தேன். நீண்ட நெடிய கோபுரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மஞ்சள், சிவப்பு, நீலம், பசுமை என வண்ணங்களுக்கே அழகூட்டினாள் கனகதுர்கா. பொன் கோட்டை என்ற அர்த்தம் தரும் தேவி அவள். துருகம் என்பதே ‘பாதுகாப்பான கோட்டை’ என்று அர்த்தப்படும். அகழிகளால் சூழ்ந்த கோட்டை.
கோயிலுக்குச் செல்லும் வழி முழுக்க ஒன்று, பத்து, நுாறு, ஆயிரம், கோடி வண்ணங்களால் ஆன வளையல்கள் கொண்டு தோரணம் அமைத்திருந்த பாங்கு உயிருக்குப் புல்லரிப்பைத் தந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த பிரதேசத்தின் காவல் தெய்வமான அம்மா கனகதுர்கா, அசுரர்களை அழித்து இங்கு குடிகொண்டிருக்கிறாள். குன்றும், மலையும், மேடும், ஆறும், நீண்ட வண்ண கோபுரமுமாக இருப்பவள். கோட்டை போல ஊரைக் காத்து நிற்கிறாள். மக்களைக் காத்து நிற்கிறாள்.
அவளின் கருவறை முன்பு நின்ற போது அழகின், அருளின், கருணையின், கனிவின், ஆற்றலின், அறிவின், தாய்மையின் உச்சம் என்பதாக உணர்ந்தேன். அந்தச் சிரிப்பு, அந்தக் கண்கள், அந்தப் பேரழகு உருவாக்கிய கலைஞர்களை பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து நாம் நினைப்பதற்கான வரமும் கனகதுர்கா உருவாக்கியது தான். எதற்காக அழைத்தாள் அம்மா என்று பரிதவித்துப் பிரகாரம் சுற்றிய போது தெய்வீக வாசனை, பூக்களின் வாசனை, பூஜைப் பொருட்களின் வாசனை என்பதாகத் தேவலோக உணர்வைத் தந்தது.
‘அம்மா... அம்மா...’ என்று யாரோ அழைத்தார்கள்.
கவனிக்காமல் நடந்தேன்.
அன்பின் உச்சமான அம்மா கொலுவிருக்கும் பீடத்தில் – அம்மா என்பது பொதுப்பெயர் தானே?  
யாரோ தொட்டு அழைத்தார்கள். சட்டென கண் முன்னே வந்தார் அந்த நபர். ஒரு காலத்தில் என் மீது பொறாமை கொண்டு அவதுாறு பரப்பி, எனக்கு முள் கிரீடம் சூட்டியவர் அவர். அவர் செய்த சூழ்ச்சி, குயுக்தியால் ஏற்பட்ட வலியை, வேதனையை,  ரணத்தை எல்லாம் கனகதுர்காவிடம் முறையிட்டு மரத்துப் போய், மறந்து போய் இருப்பவள் நான். இவர் எதற்கு இங்கே? மறுபடியும் ரணப்படுத்தவா? துடித்துப் போனேன்.
‘‘உங்களுக்கு செய்த துரோகத்துக்கு என் குடும்பத்தில் பல சோகங்கள். பல இழப்புகள். துாங்காத இரவும், பசிக்காத பகல்களுமாக அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறேன் தாயே... எனக்குக் கனகதுர்கா தந்த கட்டளை ஒன்றே ஒன்று. உங்களிடம் மன்னிப்பு கேட்பது தான்... கனகதுர்காம்மா சன்னதியில் நின்று கேட்கிறேன். மன்னியுங்கள்’’  என  கண்ணீர் வழிய நின்றார்.  
‘நான் துருகமாக, துர்க்கமாக, துர்காவாக இருப்பதன் அர்த்தம் இதுதான் மகளே... தீயவர்களைக் காலில் விழ வைப்பது, அகழியாக, கோட்டையாக நல்லவர்களை நிமிர வைப்பது, துன்பமான மலையை, குகையைக் குடைந்து சந்தோஷத்தை நதியாகப் பெருக்குவது, துஷ்டர்களி்ன் தீமையை அழித்து நொறுக்குவது, வானவில் வண்ணமாக வாழ்வை மாற்றுவது, ஆடகப் பொன்னாகக் குணத்தைப் புடம் போடுவது எல்லாமே என் இயல்பு மகளே... இப்போது நீ செய்ய வேண்டியது மன்னிப்பு தருவது மட்டுமே’’  மாயப் புன்னகையுடன் அன்னை சொன்னாள். கனகதுர்காவின் இந்திர கீலாத்ரி மலை உச்சியும், கிருஷ்ணா நதி தீரமும், பசுமையும், மனசில் உருவாக வாய்ப்பில்லை என்றால் கனகதுர்கா தரிசனம் எதற்காக? மன்னிப்பு என்னும் ஜீவநதியை மனசில் சுரக்க வைத்தாள் கனகதுர்கா.
....................     


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar