Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இரவினில் ஆட்டம்
 
பக்தி கதைகள்
இரவினில் ஆட்டம்


ஹாதிராம் பாவாஜி என்னும் துறவி திருப்பதி மலையிலுள்ள காட்டில் தங்கியிருந்தார். அவரது பக்தியைக் கண்டு வியந்த ஏழுமலையான் அவரை சந்திக்க விரும்பினார். ஒருநாள் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து நடையை சாத்தியதும் கிளம்பிய ஏழுமலையான் துறவியின் குடிலை அடைந்தார். சுவாமியைக் கண்டதும், ‘பாலாஜி’ எனக் கூவினார் பாவாஜி. ஏழுமலையானை ஆசனத்தில் அமரச் செய்து பழங்கள் கொடுத்து உபசரித்தார்.
“எப்போதும் பக்தர் கூட்டம், பூஜை, புனஸ்காரம் என்றே என் பொழுது கழிகிறது. விளையாட்டாக பேசி மகிழவே உன்னைத் தேடி வந்தேன். சொக்கட்டான் விளையாடலாமா” எனக் கேட்டார்.  திக்கு முக்காடிப் போன பாவாஜி, ‘இதை விட வேறு பாக்கியம் என்ன வேண்டும்’ என்று பகடைகளை எடுத்து கொடுத்தார். சிரித்து மகிழ்ந்தபடி இருவரும் விளையாட பொழுது போனதே தெரியவில்லை. பொழுது புலர்ந்ததும் கோயிலில் சுப்ரபாத சேவைக்காக பட்டாச்சாரியார்கள் ஆயத்தம் ஆயினர்.
“ஆகா! பொழுது புலர்ந்து விட்டதே. கோயிலுக்கு கிளம்புகிறேன். மீண்டும் இன்றிரவு வருகிறேன்!” என மறைந்தார் ஏழுமலையான். பகலில் கோயிலில் இருப்பதும், இரவு வந்ததும் பாவாஜியின் குடிலுக்குச் செல்வதும் தொடர்கதையானது. ஒருநாள் பாவாஜியின் பக்தியை உலகறியச் செய்ய விரும்பிய ஏழுமலையான், தன் ரத்தின மாலையை குடிலில் மறைத்து விட்டுச் சென்றார். சுவாமியின் கழுத்தில் மாலை இல்லாததைக் கண்ட பட்டாச்சாரியார்கள் பதட்டம் அடைந்தனர்.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு செய்தி பறந்தது. திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார் மன்னர். குடிலில் கிடந்த ரத்தினமாலையை கண்ட பாவாஜி கோயிலில் ஒப்படைப்பதற்காக புறப்பட்டார். அவரைக் கண்ட காவலர்கள் மன்னரிடம் இழுத்துச் சென்றனர். தினமும் இரவு ஏழுமலையான் தன்னுடன் விளையாட வந்ததையும், வந்த இடத்தில் மாலையை விட்டுச் சென்றதையும் பாவாஜி தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. அதே நேரம் தண்டிக்கவும் இல்லை.
“ நாங்கள் வைக்கும் சோதனையில் வெற்றி பெற்றால் இதை நம்புகிறேன். அதற்காக ஒரு கட்டு கரும்பு உங்களுக்குத் தரப்படும்.  இன்றிரவுக்குள் அதைக் காலி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார் மன்னர். அதன்படி  கரும்புடன் பாவாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தியானத்தில் இருந்த போது,  ஏழுமலையான் அருளால் யானை ஒன்று தோன்றி கரும்புகளைத் தின்று முடித்தது. பூட்டிய அறைக்குள் யானை புகுந்ததைக் கண்ட காவலர்கள் ஆச்சரியம் கொண்டனர். இந்த அதிசயத்தைக் கண்ட மன்னரும் பாவாஜியை விடுவித்தார். பக்தியில் ஈடுபட்ட பாவாஜி வாழ்வின் இறுதியில் பெருமாளின் திருவடியில் கலந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar