Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கொலை மிரட்டல்
 
பக்தி கதைகள்
கொலை மிரட்டல்


அன்று அலுவலகத்தில் நுழைந்தபோது ரியல் எஸ்டேட் அதிபர் காசிராஜன் எனக்காகக் காத்திருந்தார். கசங்கிய ஆடை. கலங்கிய கண்கள். பதறி விட்டேன்.
“என் பிரச்னைக்கெல்லாம் பச்சைப்புடவைக்காரிதான் காரணம்னு எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்கப்போறேன். அதுக்கு முன்னால...’’
“முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்”
“என் மக ராதிகாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு”
“தெரியுமே! அதுக்காக மீனாட்சிக்குப் பச்சைப் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தீங்களே”
“அப்படியும் பழி வாங்கிட்டாளே! என் மனைவியும் மகளும் ஜவுளி எடுக்க கோயம்புத்துார் போயிருக்காங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்திருங்கன்னு சொன்னாங்க. ஒத்துக்கிட்டோம். அங்கேயே ஒரு ஆஸ்பத்திரில டெஸ்ட் எடுத்ததுல சுகர் 600க்கு மேல இருக்குன்னு தெரிஞ்சது. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி இன்சுலின் ஏத்தியிருக்காங்க. பொண்ணு பேச்சு மூச்சில்லாமக் கெடக்கா.
பொண்ணு பொழைப்பாளா? அப்படியே பொழைச்சாலும் 23 வயசுப் பொண்ணுக்கு சுகர் இருந்தா எப்படி கல்யாணமாகும்”
“அது சரி, நீங்க ஏன் இன்னும் கோயம்புத்தூர் போகல”
“நாளைக்குப் போகணும். இன்னிக்கு ஒரு முக்கியமான நில விற்பனை விவகாரம் இருக்கு. எப்படியும் ராத்திரிக்குள்ள முடிஞ்சிரும். உடனே கெளம்பிருவேன்.  என் பொண்ணு பொழைப்பாளா? கல்யாணம் நடக்குமா”
உதவியாளர் அரக்க பரக்க உள்ளே ஓடி வந்தார்.
“ஜி எஸ் டி ஆபீஸ்லருந்து பெரிய ஆபீசர் வந்திருக்காங்களாம். கீழ கார்ல உக்காந்திருங்காங்க. உங்கள அவசரமாப் பாக்கணுமாம்.. கிளையண்ட்டு மாட்டிக்கிட்டாருன்னு… ”
ஓடினேன். அரசுத்துறை வண்டி ஒன்றில் மகாராணியைப்போல் கம்பீரமாக அமர்ந்திருந்தவளைப் பார்த்ததுமே யாரென தெரிந்துவிட்டது.
அவள்முன் தரையைத் தொட்டு வணங்கினேன்.
“அவன் மிகவும் ஆடிப்போய் விட்டானோ”
“ஒரே மகளுக்கு இந்த நிலை என்றால்.. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். எனக்கு நெஞ்சம் பதைக்கிறது.”
“நேரம் அதிகம் இல்லை. நீ காசிராஜனிடம் பேசும்போது உனக்கு அவன் கர்மக்கணக்கு புரியும். அதை அவனிடம் சொல். பரிகாரத்தைச் சொல்லாதே. அவன் சரியாக முடிவெடுத்தால் மகள் பிழைத்துக் கொள்வாள்”
“இல்லாவிட்டால்…”
“விதி விட்ட வழி.”
காசிராஜனிடம் ஓடினேன்.
அவர் அழுது கொண்டிருந்தார்.  ஆதரவாக தோளைத் தொட்டேன். திடுக்கிட்டு நிமிர்ந்தார். அந்தக் கணத்தில் எனக்கு எல்லாமே புரிந்துபோனது.
“காசி, பிரச்னை என்னன்னு பச்சைப்புடவைக்காரி காட்டிக் கொடுத்துட்டா. ஆனா நீங்கதான் சரியான பரிகாரம் செய்யணும்”
“என்ன சொல்றீங்க”
காசிராஜனின் இறந்த காலம் கண்முன்னர் ஓடியது. நான் பேச ஆரம்பித்தேன்
 “நீங்களும் மாரிமுத்துவும் சேர்ந்து டெவலப் செய்யலாம்னுதானே அண்ணா நகர் நிலத்தப் பேசி முடிச்சீங்க. திடீர்னு உங்களுக்கு மாரிமுத்துவ அத்துவிடணும்னு தோணிச்சி. பலகோடி ரூபாய் தர வேண்டிய இடத்துல சில லட்சங்களை கொடுத்து அவரக் கழட்டி விட்டுட்டீங்க. அது சம்பந்தமா இன்னிக்குத்தான் பத்திரம் ரெஜிஸ்டர் ஆகப் போவுது. மாரிமுத்து ஒத்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சப்ப கொலை செஞ்சிருவேன், மகனைக் கடத்திருவேன்னு மிரட்டினீங்க. அந்தப் பாவம்தான் உங்க பொண்ணப் படுத்துது”
“நான் மிரட்டினேன். ஆனா ஒண்ணுமே செய்யலியே”
“செஞ்சிருந்தா உங்க பொண்ணு செத்திருப்பா”
“இப்போ நான் என்னதான்  செய்யணும்”
“பிரச்னையச் சொல்லிட்டேன். தீர்வு உங்க இஷ்டம்”
என்னை முறைத்துப் பார்த்துவிட்டு எழுந்து சென்றார் காசிராஜன்.
சில நிமிடங்கள் கழித்து நான் தொய்வாக வெளியே நடந்து சென்றேன். பச்சைப்புடவைக்காரி இன்னும் அதே இடத்தில்தான் அமர்ந்திருந்தாள். ஓடிப்போய் அவள் காலில் விழுந்தேன்.
“கோபித்துக்கொண்டு போய்விட்டார்”
“கோபம் எல்லாம் சில நிமிடம்தான். மகள் விவகாரம் அல்லவா?”
“என்ன ஆகப்போகிறது தாயே... எனக்கு பயமாக இருக்கிறது”
“நான் காட்டுகிறேன்.”
அன்னையின் கால்களுக்குக் கீழே அமர்ந்தபடி அவளின் அழகு முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
காசிராஜன் கோபமாக இருந்தார். திடீரென தன் அலைபேசியைக் கீழே போட்டு உடைத்தார். தன் டிரைவரைக் கன்னாபின்னா எனத் திட்டினார். சில நிமிடங்களில் அவர் மனம் சமனப்பட்டது. காரை ஓரிடத்தில் நிறுத்தச் சொன்னார். யோசனையில் ஆழ்ந்தார்.
அடுத்து காட்சி விரிந்தபோது காசிராஜனும் இன்னொருவரும் இருந்தனர்.
“இன்னும் எதுக்கு வந்திருக்க? அதான் பத்து கோடி ரூபாய் சொத்த அம்பது லட்சம் கொடுத்து அமுக்கிட்டியே? நம்ப வச்சிக் கழுத்தறுத்திட்டியே? இன்னும் என்னடா வேணும்”
அந்த மனிதர்தான் காசிராஜனுடைய கூட்டாளியாக இருக்கவேண்டும். அவரையே பார்த்தபடி நின்ற காசிராஜன் சட்டென அவர் காலில் விழுந்தார்.
“என்ன மன்னிச்சிரு, மாரிமுத்து. ஆசையில புத்தி கெட்டுப்போய் மோசம் செஞ்சிட்டேன். நல்லவேளை எங்காத்தா தடுத்து நிறுத்திட்டா. நிலத்த என் பேருக்கு மாத்த வேண்டாம். நீயே டெவலப் பண்ணு. வர லாபத்தில என் பங்கு என்னன்னு நீ நெனக்கறியோ அத மட்டும் கொடு போதும்”
மாரிமுத்து காசிராஜனைத் தழுவிக்கொண்டார்.
“வேற எதுவும் வேண்டாமா காசி”
“நான் உன்ன மிரட்டிக் கையெழுத்து வாங்கினதுக்காக என்ன மன்னிச்சி நானும் என் குடும்பமும் நல்லா இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கடா”
“தாயே... தந்தை திருந்திவிட்டார். மகளின் கதி? அவள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாளே”
“இவன் மனதில் அன்பு தோன்றியவுடன் அவள் பிரச்னை தீர்ந்துவிட்டது”
“என்ன சொல்கிறீர்கள், தாயே”
“நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. உன்னை இப்போது ஒருவர் அழைப்பார். அவரே எல்லாம் சொல்வார்.”
நான் பதில் சொல்லும்முன் அலைபேசி ஒலித்தது.
“எடுத்துப் பேசு நல்ல செய்திதான்”
“கோயம்புத்தூர்லருந்து டாக்டர் நாதன் பேசறேண்ணா. பச்சைப்புடவைக்காரி அருளால இன்னிக்கு ஒரு உயிரக் காப்பாத்திட்டேண்ணா. 23 வயசுப் பொண்ணு.  சுகர் டெஸ்ட் எடுத்திருக்காங்க. 600ன்னு வந்திருக்கு. உடனே ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி இன்சுலின் ஏத்தியிருக்காங்க. அந்தப் பொண்ணு பேச்சு மூச்சில்லாமப் போயிருச்சி. என்னக் கூப்பிட்டாங்க. நான் திருப்பி சுகர் பார்த்தேன். வெறும் 50தான் இருந்துச்சி. இன்னும் கொஞ்சம் குறைஞ்சிருந்தாலும் உயிருக்கே ஆபத்தாயிருக்கும்”
“அப்புறம் எப்படி டாக்டர் முதல்ல 600ன்னு காட்டிச்சி”
“அந்த வேடிக்கைய ஏண்ணா கேக்கறீங்க? அந்தப் பொண்ணுக்கு நல்ல பசி. ஆஸ்பத்திரில இருக்கற கடையில பேரீச்சம்பழம் வாங்கி சாப்பிட்டிருக்கு. பாதி சாப்பிடும்போதே டெஸ்ட் பார்க்க கூப்பிட்டுட்டாங்க அது கையக்கூடக் கழுவாம அப்படியே போயிடுச்சு. டெஸ்ட் எடுத்துவங்களும் கையக் கழுவச் சொல்லல. ரத்தம் எடுத்தபோது அதுல ஒரு சின்ன பேரீச்சம்பழத் துகள் ஒட்டிக்கிட்டு வந்திருக்கு. அதனால சுகர் அறுநுாறுன்னு காமிச்சிருக்கு. நல்லவேளைண்ணா, பச்சைப்புடவைக்காரி அருளால இன்சுலின நிறுத்தி திருப்பியும் சுகர டெஸ்ட் பண்ணனும்னு தோணிச்சி. இல்லேன்னா அந்தப் பொண்ணு செத்திருக்கும்”
“அந்தப் பொண்ணுக்கு..’’
“ஒண்ணுமில்லை.ண்ணா. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பிள்ளை பெத்துக்கலாம்மான்னு சொல்லிட்டேன். மாப்பிள்ளை வீட்டுக்கும் கூப்பிட்டுச் சொல்லிட்டேன். பச்சைப்புடவைக்காரியோட வெளையாட்டப் பாத்தீங்களாண்ணா”
பேசி முடிந்ததும் பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.
“ஸ்.. என்ன இது குழந்தையைப்போல் அழுதுகொண்டு…  
கண்ணீரினூடே சிரித்தேன்.
 “அவளை வாழ வைத்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் சொல்”
 “என்னைக் கொத்த வரும் பாம்பிற்கும், கொல்ல வரும் மனிதனுக்கும் மனதால்கூட தீங்கு நினைக்காத அன்பு நிலை வேண்டும் தாயே”
‘அது வரத்தால் வராது. வாழ்க்கை முறையால்தான் வரவேண்டும். நுாறு பிறவிகள் அன்பு காட்டுவதையே தொழிலாக, தவமாக, நெறியாகச் செய்வதால் மட்டுமே வரும். அதை விட்டுவிடு.  வேறு ஏதாவது கேள்”
“நுாறு பிறவிகள் என்ன, ஆயிரம் பிறவிகள்கூட ஆகட்டும். ஆனால் அந்த நிலை வரும்வரை உங்களிடம் வேறு எதையும் வேண்டாத மனம் வேண்டும்”
அன்னை சிரித்தபடி காற்றில் கலந்தாள். தனியாக அமர்ந்தபடி அழுதுகொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar