Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வசூல் மன்னன்
 
பக்தி கதைகள்
வசூல் மன்னன்


மன்னர் சதானிகன் தர்ம சிந்தனை கொண்டவர். யாகங்கள் நடத்தி தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். தன்னை நாடி வரும் புலவர்களுக்கு பரிசளிப்பார். அறப்பணிகளில் ஈடுபட்டார். அவரது நாடும், மக்களும் செழிப்புடன் இருந்தனர். அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனுக்கு தானம் செய்வதிலோ, யாகம் நடத்துவதிலோ ஈடுபாடு இல்லை. நாட்டில் மழையின்றி வளம் குறையத் தொடங்கியது. மக்கள் மன்னரைச் சபித்தனர். மன்னனுக்கு  யாகம், தானத்தின் பெருமையை பெரியவர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.                   
“யாகம், தானம் செய்த என் தந்தை அடைந்திருக்கும் நிலை பற்றி யாருக்குத் தெரியும்? அதை எனக்கு நிரூபித்துக் காட்டினால்  நானும் தானம், யாகம் செய்யத் தயார்” என்றான்.                  
இது யாராலும் முடியாத காரியம் என்பதால் அவர்கள் மேற்கொண்டு பேசவில்லை. அவர்கள் நாட்டின் நலனுக்காக  வேதியர்கள் மூலம் சூரிய பகவானை நோக்கி பிரார்த்தனை செய்தனர். ஒரு முதிர்ந்த வேதியர் வடிவில் தோன்றிய சூரியபகவான், அனைவரையும் முனிவரான பார்க்கவரிடம் அழைத்துச் சென்றார்.                  
அவரிடம் நாட்டின் வறட்சி பற்றி தெரிவித்தனர். தன் தவசக்தியால் மன்னர் சதானிகரின் தற்போதைய நிலை பற்றி அறிந்து வர முனிவர் புறப்பட்டார். முதிய வேதியரான சூரிய பகவானும் உடன் சென்றார்.                  
எமதர்மனைச் சந்தித்தால் மன்னரின் மறுபிறவி பற்றி அறிய முடியும் என்பதால், இருவரும் எமலோகம் சென்றனர். வழியில் எதிர்பட்ட ஒருவர் தனக்கு வர வேண்டிய கூலியைத் தருமாறு கேட்டார். ஒன்றும் புரியாமல் பார்க்கவர் விழித்தார். முற்பிறவியில் பார்க்கவருக்கு புராணங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்றும், அதற்கான கூலியைப் பெறவில்லை என்றும் தெரிவித்து, அவரது புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கை பெற்றுக் கொண்டார். பின்னர் பார்க்கவருக்கு பால் கொடுத்தவர், துணி நெய்த நெசவாளர் என ஒவ்வொருவராக வந்து அவரிடம் இருந்த புண்ணியம் முழுவதையும் பெற்றுச் சென்றனர்.                  
புண்ணியம் இழந்த பார்க்கவரால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. இதன் பின் முதிய வேதியரான சூரியன், பார்க்கவ முனிவரைச் சுமந்து சென்றார். இருவரும் எமலோகம் அடைந்தனர். அங்கு சதானிகர் நரக தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். தான தர்மம் செய்தவர் ஏன் நரகத்தில் இருக்கிறார் என்று குழப்பம் வந்தது. சந்தேகத்தை மன்னரிடமே கேட்டனர்.                  
 “ஏழைகளிடம் இருந்து கடுமையாக வரி வசூலிப்பவனாக இருந்து விட்டேன். அந்த பணத்தில் தானம், யாகத்திற்காக நிறைய செலவிட்டும் வந்தேன். அதனால்  பாவக்கணக்கு அதிகமானது. அதற்கான பலனை அனுபவிக்கிறேன். இந்த நிலை என் மகனுக்கு வேண்டாம். மக்கள் மீது நான் விதித்த வரிகளை குறைக்கும்படி அரசுக்கு அறிவுறுத்துங்கள்” என்றார்.               
எமதர்மனின் அனுமதியுடன் சதானிகரை பூலோகத்திற்கு சூரிய பகவான் அழைத்து வந்தார். தந்தையும், மகனும் சந்தித்த போது, தானம், யாகத்துக்கு தடை சொல்ல வேண்டாம் என்றும், வரிச்சுமையைக் குறைத்து ஏழைகளை காக்க வேண்டுமென்றும் சொல்லிச் சென்றார் மன்னர் சதானிகர். இளவரசனும் அதைச் செயல்படுத்த அமைச்சரவைக்கு ஆணையிட்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar