Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிறந்தார் பராயகுப்தன்
 
பக்தி கதைகள்
பிறந்தார் பராயகுப்தன்


சம்பந்தம் இருக்கிறது... அந்த கூட்டத்தினர் மலர் மாலைகள், சந்தனம், பட்டாடைகள், நெய், பால், பன்னீர் என்று விதவிதமாகக் கொண்டு வந்தனர். கூட்டத்தை ‘சாஸ்து’ என்பர். அவர்கள் அந்தத் தெய்வக்குழந்தைக்கு சாத்துவதற்காக மேற்கண்ட பொருட்களையும் கொண்டு வந்தனர். இதனடிப்படையில், குழந்தைக்கு ‘சாஸ்தா’ என பெயர் சூட்டினர். மகிஷி என்னும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க வந்த குழந்தை என்பதால் ‘தர்மசாஸ்தா வாழ்க’ என்ற குரல் விண்ணதிர ஒலித்தது.
குழந்தை எப்படி இருந்தது தெரியுமா? கருங்கடல் போன்ற நிறம், சிவந்த தலைமுடி, பரந்த மார்பு, பிறக்கும் போதே கழுத்தில் ஆபரணங்கள், அதிலே முக்கியமாக ஒரு மணி, கையில் செண்டு என்னும் கூர்மையான ஆயுதம் ஆகியவை இருந்தது. கழுத்தை கண்டம் என்பர். கண்டத்திலே மணி அணிந்திருந்ததால், குழந்தையை தேவர்கள், “மகிஷியை அழிக்க வந்த மணிகண்ட பூபதி’ என அடைமொழியிட்டு அழைத்தனர். பூவுலகிற்கு அரசனான மணிகண்டன் என்பது இதன் பொருள். ஆயுதத்தை யாராவது செண்டு என்று சொல்வார்களா? ஆனால் சாஸ்தாவின் ஆயுதத்தை செண்டு என்றனர். செண்டு என்றால் மலர்ச்செண்டு என்ற பொருள் மட்டுமல்ல, கூர்மை என்ற பொருளும் உண்டு.
மனிதக் குழந்தைகள் இவ்வாறு பிறப்பதில்லை. ஆனால் தர்மசாஸ்தா தெய்வக்குழந்தை அல்லவா! அதனால் இத்தகைய தோற்றத்தில் பிறந்தார்.
பெயர் சூட்டு விழாவின் போது பிரம்மா வந்தார். தேவர்கள் அவரிடம்,“இந்தக் குழந்தைக்கு நாங்கள் கூட்டமாக வந்து வாழ்த்து தெரிவித்ததால் ‘சாஸ்தா’ என பெயரிட்டுள்ளோம். தங்களுக்கு இதில் ஆட்சேபம் இருக்கிறதா?” என்றனர்.
பிரம்மா அவர்களிடம்,“அந்தப் பெயர் சரியானதே! ஆனால் என் பங்கிற்கு இந்தக் குழந்தைக்கு பூதநாதன் என்றும், பராயகுப்தன் என்றும் கூடுதல் பெயர்களை சூட்டுகிறேன். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்சபூதங்களும் இவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்பதால் பூதநாதன் என்ற பெயர் இவனுக்கு பொருந்தும். பராயகுப்தன் என்றும் இவன் அழைக்கப்படுவான். பராய என்றால் ‘தகுதியான’ குப்தன்’ என்றால் தாராள மனமுள்ளவன்...தகுதியும், தாராள மனமும் கொண்டவன் என்று இதற்கு பொருள். அது மட்டுமல்ல, அனைவராலும் அறிய முடியாத சூட்சும குணங்கள் கொண்டவன் என்றும் பொருள் உண்டு.
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒரே தகுதியைக் கொண்டவனும், நல்லவர்களுக்கு கேட்டதைத் தரும் தாராள மனமுள்ளவனுமான இவன் மட்டுமே மகிஷியை அழிக்க முடியும் என்பதால், பராயகுப்தன் என்ற பெயர் இவனுக்கு சாலவும் பொருந்தும்” என்றார்.
தேவர்கள் மனமகிழ்ச்சியுடன் ‘பூதநாதன் வாழ்க, பராயகுப்தன் வாழ்க’ என வாழ்த்தொலி எழுப்பினர். இந்த வாழ்த்தொலி சாக்த லோகத்தில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பார்வதிதேவி, ஆனந்த லோகத்தில் இருந்த விநாயகர், ஸ்கந்த லோகத்தில் மயில் மேல் அமர்ந்திருந்த முருகன் ஆகியோர் காதிலும் கேட்டது. அவர்கள் அவசர அவசரமாக சப்தம் கேட்ட இடத்திற்கு வந்தனர். நடந்ததை அறிந்து, தங்களுக்கு மேலும் ஒரு சகோதரன் கிடைத்து விட்டதை எண்ணி விநாயகரும், முருகனும் மகிழ்ந்தனர். குழந்தையைக் கொஞ்சினர். பெறாத குழந்தையாயினும் தன் கணவனின் குழந்தை என்ற மகிழ்ச்சியுடன் பார்வதியும் குழந்தையைத் துாக்கி உச்சி முகர்ந்தாள்.
சிவனும் பார்வதியும் குழந்தையுடன் ரிஷபத்தில் (காளை) அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவரவர் வாகனத்தில் கைலாசம் சென்றனர். அங்கே சாஸ்தா செல்லமாய் வளர்ந்தார். குழந்தைக்கு மூன்று வயதானதும், பிரம்மாவை குருவாகக் கொண்டு பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. சகல கலைகளிலும் வல்லவரானார் தர்மசாஸ்தா.
ஒருநாள் சிவலோகத்தை நோக்கி ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டது.
“எம்பெருமானே! நமச்சிவாயா! எந்நாட்டவர்க்கும் இறைவனே! என்னைக் காப்பாற்றுங்கள். என்னை பலியிட ஒரு கொடியவன் துாக்கி செல்கிறான். நாளும், பொழுதும் உங்களுக்கு சேவை செய்தேனே! என்னைக் காப்பது உங்கள் கடமையல்லவா?” என்று அவள் குரல் எழுப்ப தியானத்தில் இருந்த சிவன் விழித்தார். என்ன நடக்கிறது என்பதை அவர் அறியமாட்டாரா என்ன? அவர் நான்கே வயதே ஆன குழந்தை பூதநாதனை அழைத்தார்.
“மகனே! உன் காதுகளில் அந்த அபலை பெண்ணின் குரல் விழுகிறதா? அவளைக் காப்பாற்று. அந்தக் கொடியவனுக்கு தர்மத்தை உணர்த்து” என ஆணையிட்டார்.
சாஸ்தா உடனே அந்தக் கொடியவன் முன் தோன்றினர். அவனது பெயர் பூபால பளிஞ்ஞன். இன்றைய நேபாளம் பகுதியை ஆட்சி செய்தவன். காளியின் தீவிர பக்தன். மந்திர தந்திரங்கள் தெரிந்தவன். அவனுக்கு வயதாகி விட்டதால், இறந்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது. எனவே தன் குலகுருவின் ஆலோசனைப்படி, காளி மாதாவுக்கு ஒரு கன்னிப்பெண்ணை பலியிட்டால் சாகாவரம் பெறலாம் என நினைத்தே அவளை இழுத்து வந்தான்.
தர்மசாஸ்தா அவனை மறித்தார். பூபாலனின் மந்திர கட்டுகளை தன் பார்வையாலேயே விலக்கினார். அந்தப் பெண் விடுதலை பெற்றாள். பிறகு மன்னனிடம்,“பூபாலா! நான் சிவனது புத்திரன். உனக்கு தர்மத்தை போதிக்கவே வந்தேன். நீ பூவுலகில் பிறந்து விட்டாய். பிறந்தவர்கள் மறைவது உறுதி. இதற்காகக் கலங்கக்கூடாது. வாழ்வில் அனைத்தும் நிச்சயமற்றது. ஆனால் மரணம் ஒன்றே நிச்சயமானது. எத்தனை தான் கொடிய பூஜை செய்தாலும் காளிமாதாவால் உனக்கு சாகாவரம் தர இயலாது. அது இயற்கைக்கு புறம்பானது. எனவே நீ மனம் திருந்தி காளியிடம் உனக்கு பிறப்பற்ற நிலை வேண்டும் என்று கேள். அவள் தன் பரம பக்தர்களுக்கு இதை நிச்சயம் கொடுப்பாள்” என்றார்.
ஒரு தெய்வமகன் தன் முன் தோன்றி இவ்வாறு நல்ல சொற்களை மொழிவதைக் கேட்ட பூபாலன் மனம் திருந்தினான். அவரது திருவடிகளில் விழுந்தான். தனது அரண்மனைக்கு வந்து உணவருந்தி செல்ல வேண்டினான். சண்டையிட வந்தவன் வீட்டில் சாப்பாடு. இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும். சண்டைகளால் ஏதும் ஆகப் போவதில்லை. விரோதமே வளரும். சமாதானமாக சென்றால் உலகமே பூந்தோட்டமாக மாறி விடும்.
இந்நேரத்தில் அரண்மனை நந்தவனத்திலிருந்து கலகலவென்ற சிரிப்பொலி கேட்டது. அங்கே தன் தோழிகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள் பூபால பளிஞ்ஞனின் மகள்.
“மகளே! இங்கே வா!  நம் அரண்மனைக்கு ஒரு விருந்தினர் வந்திருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்பது நமது பண்பாடல்லவா? வந்து வணக்கம் சொல்’’ என்று அழைத்தான் பூபாலன்.
அந்தப் பெண் அங்கே வந்தாள்.  வெட்கத்துடன் தலை குனிய, “மகளே புஷ்கலா! இவரது திருவடிகளில் விழுந்து ஆசி பெறு” என்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar