Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துறவி பன்றியான கதை
 
பக்தி கதைகள்
துறவி பன்றியான கதை


துறவி ஒருவர் ஊருக்கு வெளியே ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார். அவருக்கு சீடர்கள் பலர் இருந்தனர். ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று குட்டிகளுடன் வசித்தது. சீடர்கள் அதை துரத்த முயற்சித்தும் அது அசையவில்லை.
"பரவாயில்லை, பன்றி இருந்துவிட்டுப் போகட்டும். அதுவும் கடவுளின் படைப்புத்தானே என்றார் துறவி.
காலம் நகர்ந்தது.  தினமும் சீடர்களுடன் துறவி ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்போது பன்றியை பார்த்துக் கொண்டே செல்வார். சீடர்களோ முகம் சுளிப்பார்கள். அவ்வப்போது பன்றிகளுக்கு உணவளிக்கச் சொல்வார் துறவி.  துறவிக்கு வயதானது. ஒருநாள் நோய்வாய்ப்பட்டார். மரணம் நேரப் போவதையும், அடுத்த பிறவியில் ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள பன்றிக் கூட்டத்தில் பிறக்கப் போவதையும் ஞான திருஷ்டி மூலம் உணர்ந்தார்.  
இறக்கும் நேரம் நெருங்கியது. பிரதான சீடனிடம் ‘‘அப்பனே! இது தேவ ரகசியம். நான் இன்று இரவு இறக்கப் போகிறேன். அருகில் வசிக்கும் பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் குட்டியாகப் பிறப்பேன். நீ அதை கண்காணித்துக் கொள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த மூன்று நாட்களுக்குள் கொன்றுவிடு.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்து விடுகிறேன்’’ என்றார்.
அன்றிரவு துறவி இறந்ததும் பன்றியின் கருவில் புகுந்தார். பிரதான சீடனும் காத்திருந்தான். குறித்த நாளில் பன்றி குட்டி போட்டது. துறவியின் மீதுள்ள கருணையால் பன்றிக்குட்டி ஒரு வாரம் இருக்கட்டும் என்று விட்டான் சீடன்.
பிறகு ஒரு நாள் குட்டியைக் கொல்ல வாளை ஓங்கியபோது பன்றியாக இருந்தும், யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத குறையாக, ‘‘நான் சொன்னது எல்லாம் தப்பு. பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘ குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே கடவுளின் திருவடியை அடைய முடியும்?
‘‘கடவுளின் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றியின் வாழ்க்கையைப் போல் கடவுளின் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்குதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் பன்றியாக பிறக்க ஆசைப்படுகிறேன். நீயும் பன்றியாக பிறந்தால் உண்மையை புரிந்து கொள்வாய்’’
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்.
அந்தத் துறவி தான் பிறந்த உடனேயே தன்னைக் கொன்று விட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னதால் அதில் பற்று வந்துவிட்டது.
ஆம்... துறவியின் கதையில் வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது.
இன்று பலரும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்களே...அதில் அப்படி என்ன தான் சுகம் இருக்கிறது என்று பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின் அதைவிட்டு விலக முடியாத அளவிற்கு சிக்கலில் மாட்டிக்  கொள்கிறார்கள்.
மாமிசம், மது, புகை, சூது செயல்களால் திருட்டு, லஞ்சம், விபச்சாரம் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என அனைத்தையும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க இளைஞர்கள் விரும்புகிறார்கள். அது துறவி இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்த கதைதான்....
பன்றியாக இல்லாத வரைக்கும் தான் பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும்.
பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். விளையாடாகக் குடித்தாலும் விஷம் வேலையைக் காட்டத் தானே செய்யும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar