Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரவானாகிய நான் ..
 
பக்தி கதைகள்
அரவானாகிய நான் ..

பாண்டவர்களில் நடுநாயகமான அர்ஜுனனுக்கும் உலுாபி  என்பவருக்கும் பிறந்தவன் நான்.  என் தாயும் தந்தையும் மணம் செய்து கொண்ட பின்னணியே மிக வித்தியாசமானது.
திரவுபதியை மணந்த போது பஞ்சபாண்டவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  ஆனால் பொது நன்மை கருதி அதை ஒருமுறை அர்ஜுனர் மீற வேண்டி வந்தது.  இதன் காரணமாக அர்ஜுனர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வெளியேறி பல இடங்களுக்குச் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்டு தவம் செய்யும்படி ஆனது. அப்போது அவர் பாரதத்தின் வடகிழக்குப் பகுதிக்கும் சென்றார். அங்குள்ள கங்கை நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது அவர் அழகில் மயங்கிய உலுாபி அந்த நதியின் அடிப்புரத்துக்கு அவரை இழுத்துச் சென்றார்.

என் தாய் உலுாபி ஒரு நாக கன்னிகை.  அவர் உடலின் மேல்பாதி மனித உருவிலும் மறுபாதி பாம்பு உருவிலும் இருந்தது. இவரது தந்தை நாக அரசனான கவுரவ்யர். அவர்தான்கங்கை நதியின் அடிப்புறத்தில் உள்ள நாக ராஜ்ஜியத்தின் தலைவர்.  அர்ஜுனரின் அழகில் மயங்கி உலுாபி அவரைத் தன் ராஜ்ஜியத்துக்கு அழைத்துச் சென்றார். அதேசமயம் பாண்டவர்கள் நாக வம்சத்துக்கு எதிராக செயல்படுபவர் என்று தான் கருதுவதாகக் கூறினார்.  பிற்காலத்தில் கவுரவர்களுடன் போர் புரிய நேரிட்டால் தனக்குப் பல கோணங்களிலிருந்து நட்பும் ஆதரவும் தேவைப்படும் என்று கருதிய அர்ஜுனர், பாண்டவர்கள் நாகலோகத்துடன் நட்பாக இருக்கவே விரும்புவதாக குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து தன்னை அர்ஜுனர் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று உலுாபி வேண்டுகோள் விடுக்க, அதை அர்ஜுனன் மறுத்தார்.  பின்னர் உலுாபி பலவிதமாகப் பேசி அவரைத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தார்.  இதைத் தொடர்ந்து தண்ணீரில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் அர்ஜுனரின் அடிமைகள் என்றும் தண்ணீரில் அர்ஜுனர் ஒருபோதும் தோற்கடிக்கப்பட்ட மாட்டார் என்றும் வரங்களை அளித்தார். நான் நாகலோகத்தில் வளர்ந்தேன். அதே சமயம் என் தந்தை அர்ஜுனரின் பராக்கிரமங்களை என் தாய் தொடர்ந்து கூறி வந்தார்.  ஒருகட்டத்தில் தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற நாகலோகத்தை விட்டு நீங்கினேன்.  அப்போது தன் தந்தையான இந்திரனோடு இந்திரலோகத்தில் அர்ஜுனர் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன். அங்கு என்னைப் பார்த்து மகிழ்ந்தார் என் தந்தை.  பின்னர் குருக்ஷேத்திரத்தில் நடைபெற இருக்கும் மகாபாரதப்போரில் நானும் அவருக்கு உதவ வேண்டும் என்று கேட்க ஒத்துக் கொண்டேன்.
மகாபாரதப் போரில் ஸ்ருதயுஷ் அவந்தி நாட்டு இளவரசர்களான விந்தன், அனுவிந்தன் ஆகியவர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடித்து.  சகுனியின் சகோதரர்களையும் கொன்றேன். என்னால் தன் படைக்கு நேரும் கஷ்டங்களைப் பார்த்து துரியோதனன் ராட்சதனான ஆலம்புஷன் என்ற அரக்கனை என்மீது ஏவினான். எங்கள் இருவருக்குமிடையே கடுமையான சண்டை நடந்தது. அந்த அரக்கனின் தேரை நான் உடைத்தேன். அவனைப் பல துண்டுகளாக்கினேன். ஆனால் அந்தத் துண்டுகளை சேர வைத்து மீண்டும் உருவம் கிடைக்கும் சக்தி அவனுக்கு இருந்தது.
நான் நாக வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால் பல தலைகள் கொண்ட பாம்பாக அவனை அணுகினேன். ஆனால் அவனோ கருடனின் உருவை எடுத்துக் கொண்டு என்னை சின்னாபின்னம் ஆக்கினான்.  
பின்னரும் மனம் தளராமல் சகுனியிடம் கடும் போரிட்டேன். அப்போது தந்திரமாக பின்னால் வந்து என்னைக் கொன்றான் ஆலம்புஷன்.
இதற்குப் பழி தீர்க்கும் வகையில் என் பெரியப்பா மகனான கடோத்கஜன் ஆலம்புஷனை மகாபாரதப்போரின் பதினான்காம் நாள் அன்று கொன்றார்.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar