Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு தந்தையின் மதிநுட்பம்
 
பக்தி கதைகள்
ஒரு தந்தையின் மதிநுட்பம்

தந்தையின் மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார் மன்னர் ஒருவர். முதியோர் அனைவரும் பூமிக்கு பாரமாக கருதிய மன்னர், அவர்களை எல்லாம் நாடு கடத்த உத்தரவிட்டார்.  இளைஞன் ஒருவன் தன் தந்தை மீதுள்ள பாசத்தால் வீட்டிலுள்ள பாதாள அறையில் ஒளித்து வைத்தான்.
ஒற்றர் மூலமாக இதை அறிந்த மன்னர், அவனை தண்டிக்க முடிவு செய்தார். அதற்காக ஒரே நேரத்தில் காலால் நடந்தும், வாகனத்தில் ஏறியும் அரண்மனைக்கு வரக் கட்டளையிட்டார்.

இது எப்படி முடியும் என தந்தையிடம் கேட்டான் இளைஞன். ‘‘ குச்சியை ஒரு காலில் கட்டிக் கொள். அதையே ஊன்றிக் கொண்டு மற்றொரு காலால் நடந்து செல்’’ என்றார் தந்தை.

அவ்வாறே சென்றான்.
அவனது புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன், ‘‘ நாளைக்கும் அரண்மனைக்கு நீ வர வேண்டும். அப்போது காலணி அணிந்தும், வெறுங்காலுடனும் நடக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். தந்தையிடம் ஆலோசிக்க,   ‘‘உன் ஷூவின் அடிப்பாகத்தை  எடுத்து விட்டு ஷூவை அணிந்து செல்’’ என யோசனை சொன்னார் தந்தை. அதையே பின்பற்றினான்

இளைஞன், அதனைக் கண்டு மன்னர் வியந்தார்.

 ‘சபாஷ்... இரண்டு நாளில் உன் நண்பன், எதிரியை அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும்’  என  கட்டளையிட்டார் மன்னர்.

 தந்தையுடன் ஆலோசித்த போது,  
‘ உன் மனைவி,  வளர்ப்பு நாயை அரண்மனைக்கு அழைத்து செல். மன்னரின் முன் அவர்களை தண்டித்திடு’  என்றார் தந்தை.

 அவனும் மன்னரின் முன்பு நாய், மனைவியை அடித்தான்.
நாய் குரைத்தபடி விலகியது. கோபமான மனைவி, ‘‘ என்னை அடிக்கிறாயா? என்ன செய்கிறேன் பார்’ என கூச்சலிட்டாள். ‘‘மன்னா! எங்கள் வீட்டில் இவரது தந்தையை ரகசியமாக ஒளிந்திருக்கிறார். அவருக்கு தண்டனை கொடுங்கள்’’  என வேண்டினாள்.  
‘‘உன் எதிரியைக் காட்டி விட்டாய், விசுவாசம் உள்ள நண்பன் எங்கே?’’ என இளைஞரிடம் கேட்டார் மன்னர்.
சற்று தள்ளி நின்ற நாயை சைகையால் அழைத்தான்.
 வாலை ஆட்டியபடி அவனருகில் வந்தது. கூப்பிட்டவுடன் ஓடி வரும் இதுவே உற்ற நண்பன்" என்றான்.

‘இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய்’ எனக் கேட்டார் மன்னர்.  

‘தந்தையே என் வழிகாட்டி’’ என்றான். நெகிழ்ந்த மன்னர் வெகுமதி வழங்கியதோடு, ‘நாளை உன் தந்தையை அழைத்து வா’ என்றார்.

மறுநாள் அவனது தந்தையிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் பல கேட்டு தெளிவு பெற்ற மன்னர் தன் ஆலோசகராக நியமித்தார்.
(முதியவர்களை பாதுகாப்பது நம் கடமை) போல்ட்
என நாடு கடத்தியவர்களை தாய் நாட்டிற்கே வரவழைத்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar