Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எல்லா நாளும் இன்பமே
 
பக்தி கதைகள்
எல்லா நாளும் இன்பமே


 நாயன்மார்களில்  ஒருவரான திருநாவுக்கரசர் சைவமே உண்மைச்சமயம் என்று உணர்ந்து வாழ்ந்தவர்.  பணிவு என்ற பண்பால் துணிவான செயல்களை எளிதில் நிறைவேற்றலாம் என நிலைநாட்டியவர். இவரின் குருபூஜை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று நடக்கும்.
 கடலுார் மாவட்டம் திருவாமூரில் புகழனார், மாதினியார் தம்பதியின் மகனாக 6ம் நுாற்றாண்டில் பிறந்தவர். இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது சகோதரியான  திலகவதியாரின் ஆதரவால் வளர்ந்த இவர்,  சமணத்தை பின்பற்றினார்.  வருந்திய சகோதரி, திருவதிகையில் உள்ள சிவனை வேண்டினார். அதன்பின் வயிற்று வலியால் அவதிப்பட்டார் மருள்நீக்கியார். பிரச்னை தீர சகோதரியிடம்  திருநீறு பெற்று தேவாரம் பாடினார். வயிற்றுவலி மறைந்தது. அப்போது பதிகம் பாடியதால் ‘திருநாவுக்கரசர்’ என பெயர் பெறுவீர் என அசரீரி ஒலித்தது. அதன்பின்  சிவத்தலங்களுக்கு சென்று பாடல்கள் பாடி பக்தியை பரப்பினார்.
இதையறிந்த சமணர்கள், மன்னரான  மகேந்திரவர்மனிடம் சென்று திருநாவுக்கரசர் பற்றி குறை சொல்லவே கல்லோடு திருநாவுக்கரசரைக் கட்டி கடலில் துாக்கியெறிந்தனர். பதிகம் பாடி சிவனருளால் உயிர் தப்பினார். இதைக் கண்ட மகேந்திரவர்மன் சிவபக்தராக மாறினார்.
திங்களூரைச் சேர்ந்த அப்பூதியடிகள் என்பவர் திருநாவுக்கரசரை குருநாதராக கருதி வாழ்ந்தார். அவரது மகனைப் பாம்பு தீண்டிய போது பதிகம் பாடி உயிர் பிழைக்கச் செய்தார் திருநாவுக்கரசர். திருவீழிமிழலை என்னும் சிவத்தலத்தில் பஞ்சம் நிலவிய போது, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பதிகம் பாடி சிவனருளால் பொற்காசுகள் பெற்று மக்களுக்கு வழங்கினர்.  ஒருமுறை வேதாரண்யம் கோயிலுக்கு திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். பல ஆண்டாக இக்கோயில் கதவு மூடிக் கிடந்தது. திருஞான சம்பந்தர் தேவாரம் பாட கதவு திறந்தது. அதன்பின் திருநாவுக்கரசர் பாட கதவு மூடியது.   
  கயிலாய யாத்திரை சென்ற போது திருநாவுக்கரசரின் முன் முனிவர் வடிவில் வந்த ஒரு குளத்தைக் காட்டி அதில் மூழ்கும்படி ஆணையிட்டார்.  அவரும் மூழ்கி எழுந்த போது எங்கும் சிவசக்தியைக் காணும் பேறு பெற்றார். மண், பொன், பெண் ஆசைகளை துறந்த இவர் 81ம் வயதில் திருப்புகலுாரில் முக்தியடைந்தார்.   
இவரது பாடல்கள் 4,5,6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  அவரை வழிபடுவோருக்கு எல்லா நாளும் இன்பமாக அமையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar