Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமனுக்கு உணவளித்தவள்
 
பக்தி கதைகள்
ராமனுக்கு உணவளித்தவள்


முனிவர்களைத் தேடி வந்த அவன், “நீங்கள் கவுதமரை பற்றிய உண்மையை அறியாமல் அவரைச் சரணடைந்துள்ளீர்கள். அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா. பசுக்களுக்கு துன்பம் இழைப்பது எவ்வளவு பெரிய பாவம்! இவர் அந்தச் செயலை சாதாரணமாக செய்கிறார். தினமும் ஒரு பசுவை அடித்து மாமிசம் உண்கிறார்” என்றான்.
அப்போது முனிவர்களுடன் வந்த வேதியர் ஒருவர்,“இந்திரா! நான் இதை நம்பமாட்டேன். நீர் சொல்வது முற்றிலும் தவறானது. பசுக்களின் காவலனாக விளங்குபவர் கவுதமர். அவர் மீது இத்தகைய கொடிய பழி சுமத்த எப்படி உமக்கு மனம் வந்தது?” என கொதித்தார்.
“வேதியரே! நான் உங்கள் கண் முன் இதை நிரூபித்துக் காட்டினால் நம்புவீர்கள் அல்லவா! நாளை காலை எல்லாரும் யாகசாலைக்கு செல்லுங்கள். நான் சொன்னது சரியென உங்களுக்கு விளங்கும்”‘ என்றான் இந்திரன். இதை நம்பிய முனிவர்களும், வேதியர்களும் மறுநாள் யாகசாலைக்கு சென்று மறைவான இடத்தில் நின்றனர்.
அப்போது ஒரு பசு யாகசாலை பக்கமாக ஓடி வந்தது. யாகப் பொருட்களை அது மிதித்து விடக்கூடாது என்பதற்காக, கவுதமர் ஒரு தடியை எடுத்து பசுவை விரட்டினார்.
முனிவர்கள் அதிர்ந்தனர். அந்த பசுவை தடியால் அடித்துக் கொன்று உண்ணத்தான் கவுதமர் இப்படி செய்கிறார் என நினைத்து விட்டனர். அவர் அருகே சென்று,“பசுவை தடியால் அடித்து விரட்டலாமா?” என கேட்டதுடன், அவரையே அடித்தும் விட்டனர்.
கவுதமருக்கு கோபம் வந்து விட்டது. அவர் கண்களை மூடி நடந்தது என்ன என்பதை தன் ஞானதிருஷ்டி மூலம் அறிந்தார். எல்லாம் இந்திரனின் சதித்திட்டம் என்பது புரிந்தது. தான் சொன்னதை நிரூபிக்க, இந்திரனே பசுவாக உருவெடுத்து, யாகசாலையை அழிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இருப்பினும், ஆராயாமல் தன் மீது பழி சுமத்திய முனிவர்கள் மற்றும் வேதியர்களை அவர் கண்களில் கனல் பொங்க பார்த்தார்.
“தவமுனிவரான என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள்! ஒருவர் இன்னொருவர் மீது அபாண்டமாக பழி சுமத்தினால், வேதம் படித்த நீங்கள், அது சரியானதா என்று கூட ஆராயாமல் என்னைப் பழித்தீர்கள். அது மட்டுமல்ல! நீங்கள் எல்லாரும் காடுகளில் யாகம் செய்ய முடியாமல் என்னைச் சரணடைந்தீர்கள். பசி பட்டினியால் அவதிப்பட்டீர்கள். உங்களுக்கு உணவளித்து, தங்க இடமளித்து அடைக்கலம் தந்தேன். அந்த நன்றியையும் மறந்து, என்னையே அடித்தீர்கள். எனவே பிடியுங்கள் என் சாபத்தை! நீங்கள் படித்த வேதமெல்லாம் மறந்து போகட்டும். அடிப்படை தேவைகளுக்கு கூட நீங்கள் கஷ்டப்பட்டு அலைந்து திரியுங்கள். இந்த சதியைச் செய்தவன் இந்திரன். அவனே பசுவாக வந்து துன்பம் செய்தான். அவனையே நான் விரட்டினேன்” என்றார்.
முனிவர்களும், வேதியர்களும் ஆடிப்போய் விட்டனர்.
இந்திரனின் பேச்சை நம்பி மோசம் போன அவர்கள்,“கவுதமரே! மன்னியுங்கள். அறியாமல் தவறு செய்து விட்டோம். எங்களுக்கு சாப விமோசனம் அளியுங்கள்” என்றனர்.
“அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னிக்க என்னால் இயலாது. அதை அரிகரபுத்திரரான சாஸ்தாவால் மட்டுமே செய்ய இயலும். கலியுகம் வரை இந்த சாபம் உங்களைத் தொடரும். கலியுகத்தில் சாஸ்தா ஐயப்பன் என்ற பெயரில் பூலோகம் வருவார். அவரது தரிசனம் உங்களுக்கு சாப விமோசனத்தை தரும்” என்றார் கவுதமர்.
அந்த வேதியர்களில் ஒருவர் தான் விஜயனாகப் பிறந்தார். அன்று செய்த பாவத்தின் பலனாக குழந்தை இன்றி தவித்தார். இப்போது சாஸ்தாவின் தரிசனம் கிடைத்து பாவம் நீங்கப் பெற்றார். இவரே கலியுகத்தில் பந்தளராஜாவாக பிறந்து ஐயப்பனை வளர்ப்பு மகனாகப் பெற்றார். அன்று சாஸ்தா வாக்களித்தது போல, ராஜராஜன் என்ற மகனும் பிறந்தான். விஜயன் நீராடிய கும்ப தீர்த்தத்தின் ஒரு பகுதியே பம்பை என்னும் பெயரில் நதியாக ஓடுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் கால் நனைக்காமல் திரும்பியதில்லை. இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான புளிச்சமலையில் உற்பத்தியாகி, ஆலப்புழை, பத்தனம்திட்டை வழியாக 176 கி.மீ., துாரம் ஓடி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள புன்னமடா, வேம்பநாடு ஏரியில் கலக்கிறது. பெயருக்கு தான் ஏரியே தவிர இதை ஒரு குட்டிக்கடல் என்றே கூறலாம். 96 கி.மீ., நீளம், 14 கி.மீ., அகலம், 39 அடி ஆழம் கொண்டது. காரணம் கேரளத்தின் மூன்றாவது பெரிய நதியான பம்பை உள்ளிட்ட பத்து நதிகளின் தண்ணீர் இதில் தான் கலக்கிறது.
பம்பை நதிக்கு மிகப்பெரிய புராண சிறப்பு இருக்கிறது. அதன் வரலாறு தெரிந்தவர்கள் அதை அசுத்தப்படுத்த வேண்டும் என மனதால் கூட நினைக்க மாட்டார்கள். ராமாயண காலத்திலேயே இந்த நதி ஓடியதாக தகவல் உண்டு.
சபரிமலை காட்டில் மதங்க முனிவர் வசித்து வந்தார். இவரது சிஷ்யை தான் சபரி. இவளது பெயர் தான் சபரிமலைக்கு சூட்டப்பட்டிருக்கிறது. சபரியைப் போல, நீலி என்ற பெண்ணும் அவரது ஆஸ்ரமத்தில் சேவை செய்து வந்தாள். ஒருமுறை மதங்க முனிவர் சிவத்தல யாத்திரை சென்று விட்டார். இந்த நேரத்தில், சீதையைத் தேடி ராமனும், லட்சுமணனும் இலங்கைக்கு சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில், பம்பை கரையில் இருந்த மதங்க முனிவரின் ஆஸ்ரமம் கண்ணில் பட்டது. அவர்கள் முனிவரைத் தரிசிக்க சென்றனர்.
நீலி தான் அவர்களை வரவேற்றாள். முனிவர் யாத்திரை சென்றுள்ள விபரத்தை தெரிவித்தாள். அவர்களை யார் என விசாரித்த போது, ராமலட்சுமணர் என்ற விபரத்தை அறிந்து மகிழ்ந்தாள். அவர்களது திருவடிகளில் விழுந்து ஆசி பெற்றாள்.
அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று நீலியின் மனதில் ஆசை இருந்தது. இருப்பினும், மலைவாழ் பெண்ணான தன் கையால் சாப்பிடுவார்களோ, மாட்டார்களோ என்ற சந்தேகத்தால் தயங்கினாள்.
ராமலட்சுமணர் அவளது தயக்கத்தை முகக்குறிப்பாலேயே அறிந்து, ‘’‘பெண்ணே! ஏதோ சொல்லத் துடிக்கிறாய். ஆனால் தயங்குகிறாய். சொல்” என்றனர்.
“பெருமான்களே! உங்களுக்கு உணவளிக்க எண்ணுகிறேன். என் கையால் உணவருந்துவீர்களா என்ற சந்தேகமே இதற்கு காரணம்” என்றாள்.
“பெண்ணே! மனிதர்களில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்பது கிடையாது. எல்லாரும் சமமே. உன் கையால் உணவருந்துவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றார் ராமன்.
நீலி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்கள் சாப்பிட்ட பிறகும், நீலி அவர்களிடம் ஏதோ கேட்க எண்ணினாள். அதை உணர்ந்த ராமர்,“இன்னும் உன் முகத்தில் தயக்கம் தெரிகிறதே! எதுவாயிருந்தாலும் கேள்” என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar