Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புஷ்கலா திருமணம்
 
பக்தி கதைகள்
புஷ்கலா திருமணம்


அந்த இளைஞன் சளைக்கவில்லை. மதம் கொண்ட யானையின் தும்பிக்கையைப் பிடித்து தரதரவென இழுத்தான். அவ்வளவு பலம் மிக்க யானை தன் வலிமையை எல்லாம் இழந்தது போல், அவன் இழுத்த இழுப்புக்கு வந்தது. இதைப் பார்த்த புஷ்கலாவின் தந்தை ஆச்சரியமடைந்தார். ‘இந்த வனமகன் சாதாரணமணானவன் அல்ல. இவன் ஒரு தெய்வப்பிறவி. சாத்தியமில்லாத ஒன்றை செய்யும் மனிதர்கள் எல்லாருமே தெய்வப்பிறவிகள் தான்’ என்ற சிந்தனை அவரது மனதில் ஓடியது.
ஒரு கட்டத்தில் யானை அந்த இளைஞன் முன் மண்டியிட்டு விட்டது. அவன் அதன் மேல் ஏறி அமர்ந்தான். இனி பயமேதும் இல்லை என நினைத்த புஷ்கலாவின் தந்தை, அவன் முன் வந்து வணங்கினார். யானையிடமிருந்து தன்னைக் காத்த இளைஞனுக்கு நன்றி கூறினார்.
“இளைஞனே! என்னைக் காத்த உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன். என்னிடம் அரச குடும்பத்தினருக்கு உரிய பட்டாடைகள் உள்ளன. அதில் உனக்கு பொருத்தமானதை தருகிறேன். பெற்றுக்கொள்” என்றார். இளைஞனும் மறுக்காமல் அதைப் பெற்று அணிந்து கொண்டான். ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஒரு மன்னனுக்குரிய அத்தனை இலக்கணத்துக்கும் பொருத்தமாக அவனது வடிவம் அமைந்தது. அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்கலாவின் தந்தை.
அப்போது அந்த இளைஞன்,“வியாபாரியே! என்ன பார்க்கிறீர்கள். மாப்பிள்ளை மாதிரி இருக்கிறேனா! உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து வைப்பீர்களா?” என்று கேட்டான்.
இந்த அதிசயங்களை எல்லாம் கண்டு தன்னிலை மறந்திருந்த புஷ்கலாவின் தந்தை,‘எனக்கு மகள் இருப்பது இவனுக்கு எப்படி தெரியும்? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறதே!’ என நினைத்தவர், அவன் யார் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல், “அதற்கென்ன! என் உயிர் காத்த உங்களுக்கு என் மகளை திருமணம் செய்து தருவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.
இதையடுத்து அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். திரும்பி வரும் போது, ஆரியங்காவில் தங்கியிருந்த தன் மகளை அழைக்க கோயிலுக்கு சென்றார். அங்கே புஷ்கலாவைக் காணவில்லை. ஆனால் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. அந்த இளைஞனுக்கு எந்த பட்டாடையை பரிசாகக் கொடுத்திருந்தாரோ, அதே ஆடை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
“அப்படியானால்...ஐயப்பா, நீயா இளைஞனின் வடிவில் வந்து என்னைக் காத்தாய்!” என்றவர், அங்கு மகள் இருக்கிறாளா என சுற்றுமுற்றும் பார்த்தார். அவளைக் காணவில்லை என்றதும், அருகிலிருந்த மேல்சாந்தியின் வீட்டுக்கு சென்று, மகளைப் பற்றி விசாரித்தார்.
அவரை வரவேற்ற மேல்சாந்தி,“ ஐயா! என்னவென்று சொல்வேன். உங்கள் மகள் ஐயப்பனுடன் ஜோதி வடிவில் கலந்து விட்டாள். அவளை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த அதிசயம் இங்குள்ள அனைவர் கண் முன்னாலும் நடந்தது. நீங்கள் ஐயப்பனின் மாமனராகி விட்டீர்கள். மதுரையின் மருமகனாகி விட்டார் எங்கள் ஆரியங்காவு ஐயப்பன்” என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
மகிழ்வதா...மகளின் பிரிவை நினைத்து அழுவதா என்ற இக்கட்டான சூழலில் கண்ணீர் மல்க நின்ற புஷ்கலாவின் தந்தை முன், ஐயப்பன் தன் துணைவி புஷ்கலாவுடன் காட்சி தந்தார். அதைப் பார்த்து ஆனந்தமடைந்தார் புஷ்கலாவின் தந்தை. ஐயப்பனிடம்,“சுவாமி! தாங்கள் என் மகளை தங்களோடு இணைத்துக் கொண்டது எனக்கு மட்டுமல்ல! சவுராஷ்டிர குலத்துக்கே பெருமை! எங்கள் சவுராஷ்டிர குலமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. எங்களுக்காக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். என் மகளை எங்கள் குலத்தினர் முன்னிலையில், நீங்கள் திருமாங்கல்யம் சூட்டி மனித மரபுப்படி திருமணம் செய்ய வேண்டும். எனக்கு அதற்கான அனுமதி அளிக்க வேண்டும்” என்றார். கருணையே வடிவான ஐயப்பனும் ஒப்புக்கொண்டார்.
இதன்பின் மதுரையில் இருந்து சவுராஷ்டிர குல மக்கள் அனைவரும் ஆரியங்காவு வந்தனர். திருமணத்துக்கு முன்னதாக நடக்கும் நிச்சயதார்த்த விழாவை நடத்தினர். மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதே தமிழக பண்பாடு. அதன் அடிப்படையில் ஆரியங்காவு கோயில் நிர்வாகத்தினர் கோவிலிலுள்ள ராஜ கொட்டாரத்திற்கு வந்தனர். பந்தளத்தை ஆண்ட மன்னர், பாண்டியர்களின் வழி வந்தவர். அவர் ஆரியங்காவு ஐயனை தரிசிக்க வரும் போது, இந்த கொட்டாரத்தில் தான் தங்குவார். இதனால் இதை ‘ராஜ கொட்டாரம்’ என அழைத்தனர். இந்த கொட்டாரம் அலங்கரிக்கப்பட்டது. நிச்சயதார்த்த சடங்கு பொருட்கள் தட்டுகளில் வைக்கப்பட்டன. பெண் வீட்டார் தங்கள் பங்கிற்கு 21 தட்டுகளில் பழங்கள், பட்டு மற்றும் மங்கலப்பொருட்களை வைத்தனர். நிச்சயதார்த்தம் சிறப்பாக நிறைவேறியது.
 இதையடுத்து தாலப்பொலி என்னும் மாப்பிள்ளை ஊர்வலம் துவங்கியது. தாலம் என்றால் தட்டு அல்லது தாம்பாளம். தாம்பாளத்தில் புதுநெல், அரிசி, தேங்காய், மஞ்சள், வெற்றிலை, பூக்களுடன் ஒரு விளக்கும் ஏற்றி வைத்து கேரளப்பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் ஊர்வலமாக வருவர். அதே போல சவுராஷ்டிர பெண்களும் தாலப்பொலி ஊர்வலத்துடன் மணமகனை அழைத்து வர புறப்பட்டனர். மாப்பிள்ளை அழைப்பும் சுபமாக நிறைவேறியது. மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார் ஐயப்பன். பிறகு மங்கல வடிவான புஷ்கலாவை தீப வடிவில், ஐயப்பன் சன்னதியில் இருந்த ஜோதியில் சேர்த்தனர். அதாவது ஐயப்பனுடன் புஷ்கலா இரண்டறக் கலந்து விட்டாள் என்ற அரிய தத்துவத்தை வெளிப்படுத்தினர்.
யாராக இருந்தாலும் ஐயப்பனுடன் என்றேனும் ஒருநாள் ஐக்கியமாகியே தீர வேண்டும் என்பதே புஷ்கலா-ஐயப்பன் திருமணம். இதை வலியுறுத்தும் வகையில் தான் சபரிமலை கோயில் முகப்பில் ‘தத்வமஸி’ என எழுதப்பட்டுள்ளது. இதற்கு நீயே நான், நானே நீ எனப்பொருள். ஆழ்ந்த பக்தி செலுத்தினால், மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதை இந்த சொல் வெளிப்படுத்துகிறது. இதனால் தான் சபரிமலையில் இருக்கும் ஐயப்பனையும் ‘சுவாமி’ என்கிறோம். சபரிமலைக்கு செல்லும் பக்தனையும் ‘சுவாமி’ என்கிறோம்.
சபரிமலை பக்தர்கள் எல்லாரும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்தையும் எழுப்புகின்றனர். இதற்கு ஆழ்ந்த காரணம் இருக்க வேண்டும். சரணம் என்றால் என்ன?
....


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar