Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கண்ணனாகிய நான் ..
 
பக்தி கதைகள்
கண்ணனாகிய நான் ..

கம்சவதம் நடந்த பிறகு அவனது தந்தையான உக்கிரசேனனை அரியணையில் அமர்த்தினேன்.  (அதற்கு முன் தன் தந்தையையும் சிறையில் அடைத்திருந்தான் கம்சன்).
மகத நாட்டைச் சேர்ந்த மன்னன் ஜராசந்தன் பலமுறை உக்கிரசேனர் ஆண்ட நாட்டின்மீது தாக்குதல் நடத்தினான்.  அவற்றைத் தாக்குப்பிடிப்பது யாதவர்களுக்கு கடினமானதாக இருக்க, சரியான மாற்று இடத்தில் யாதவர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை நடத்த வேண்டும் என எண்ணினேன்.
துவாரகை என்ற புதிய இடத்துக்குக் குடிபெயர்ந்தது யாதவ சாம்ராஜ்யம்.  ஒருபுறம் கடல்.  மறுபுறம் மலைகள் என்று பிறர் தாக்குதல் நடத்த மிகக் கடினமாக அமைந்தது துவாரகை.
என் முயற்சியால் யாதவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நட்புறவு ஏற்பட்டது.  இது இருதரப்புக்கும் சாதகமாக அமைந்தது.  பின்னர் ஒரு கட்டத்தில் ஜராசந்தனை பாண்டவர்கள் வென்றனர்.  
அரக்கு மாளிகையிலிருந்து தப்பி வனத்தில் வாழ்ந்த பிறகு மீண்டும் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது திருதராஷ்டிரன் அரைகுறை மனதுடன் அவர்களுக்கு காண்டவப்பிரஸ்தம் என்ற பகுதியை அளித்தார்.  அது நீர்வளம் இல்லாத, மண்வளம் இல்லாத பாலைவனம் போன்ற பிரதேசம்.  எனது ஆசியுடன் இங்கு மிக அழகான ஒரு நகரம் உருவானது.  அற்புதமான அரண்மனை உருவானது.  தகவல் கேள்விப்பட்டு துரியோதனன் பொறாமை மேலும் அதிகமானது.
    பகடை ஆட்டத்தில் தோற்ற பிறகு வனவாசம், அஞ்ஞாத வாசம் அனைத்தையும் முடித்துக்கொண்டு திரும்பிய பாண்டவர்களுக்கு அவர்களது ராஜ்ஜியத்தை ஒப்படைக்க துரியோதனன் மறுத்தான்.  மகாபாரதப் போர் நடைபெற வாய்ப்பு உண்டு எனும் சூழலில் நான் பாண்டவர்களுக்காக துாது சென்றேன்.  அவர்களுக்காக ஐந்து கிராமங்களையாவது கொடு என்று நான் கேட்டபோது கைப்பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டேன் என்று இறுமாப்புடன் பதிலளித்தான் துரியோதனன். போர் தவிர்க்க முடியாததாகி விட்டது.
குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்குவதற்குத் தயாராக இரு தரப்பினரும் எதிரெதிரே அணிவகுத்து நின்றனர்.  எதிர்த்தரப்பில் தனது பாட்டனார் பீஷ்மர், ஆசிரியர் துரோணர், சகோதர முறை கொண்ட கவுரவர்கள் போன்றோரைக் கண்டதும் அர்ஜுனனின் மனம் மாறியது.  அவன் போரிட மறுத்து தன் வில்லைக் கீழே வைத்து விட்டான். இந்த நிலையில் அவனுக்கு நான் கூறிய அறிவுரைகள் தான் பகவத்கீதை.  
இதை நான் அருளிய போது போர்க்களத்தில் அனைவரும் மாயத்திரையால் உணர்வற்று இருக்க, அங்கு அர்ஜுனனால் மட்டுமே இதைக் கேட்க முடிந்தது.
போர் நிகழ்வுகளை அரண்மனையில் இருந்தபடியே திருதராஷ்டிரனுக்கு விளக்கிக் கொண்டிருந்தான் சஞ்சயன்.  அவர்கள் இருவருக்கும் கூட நான் அருளிய கீதையைக் கேட்கும் பேறு கிடைத்தது.  ஆனால் திருதராஷ்டிரனுக்கு அப்போதும் ஞானம் பிறக்கவில்லை என்பது பரிதாபம்.
சஞ்சயன் ஒரு தேரோட்டி என்ற விவரத்தை மட்டுமே மனதில் கொண்டு அவனைக் குறைத்து எடை போட்டு விடக்கூடாது.  நேர்மையாக நடந்து கொள்வதில் அவன் விதுரனுக்கு சமமானவன்.  மன்னன் திருதராஷ்டிரனின் மனம் மகிழும்படி போரின் போக்கை அவன் கூறவில்லை.  உள்ளது உள்ளபடி கூறியதுடன் தனது கருத்துக்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்தினான்.
சஞ்சயன் போரை இப்படி விளக்குகிறான்.
‘நம் தரப்பின் சைனியம் அளவில் மிகப் பெரியதாக இருக்கிறது.  பீஷ்மர் தனது சங்கு கொண்டு போரை தொடங்கலாம் என்பதற்கு அடையாளமாக ஊதுகிறார்.  இதைக் கேட்டதும் துரியோதனின் முகத்தில் அளவில்லாத ஆனந்தம்.
இதற்கு எதிரொலியாக கிருஷ்ணன் தனது பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊத, அர்ஜுனன் தேவதத்தம் என்கிற தனது சங்கை ஊதுகிறார்.  யுதிஷ்டிரன் தனது அனந்த விஜயம் என்ற சங்கை ஓதுகிறார்.  நகுலனும் சகாதேவனும் தங்களது சங்குகளாக சுகோஷம், மணிபுஷ்பகம் ஆகியவற்றை ஊதுகிறார்கள்.
கவுரவர் தரப்பில் இருந்து சங்கொலி கேட்டபோது பாண்டவர்கள் தரப்பில் எந்த திகைப்பும் இல்லை. பாண்டவர் தரப்பில் இருந்து சங்கொலி எழுப்பப்பட்ட போது துரியோதனன் முகத்தில் கலக்கம் வெளிப்பட்டது’ என்றும் சஞ்ஜயன் கூறுகிறான்.
இது ஒருபுறமிருக்க, உங்களில் சிலருக்கு ஒரு நெருடல் இருக்கக்கூடும்.  சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரின்  வீழ்ச்சிக்குக் கண்ணன் காரணமானார். அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற பொய்யை யுதிஷ்டிரனை கூறச் செய்து துரோணரை செயலிழக்கச் செய்து திருஷ்டத்யும்னன் அவரைக் கொல்வதற்கும் கண்ணன் வழிவகுத்தார்.  கர்ணன் சேறில் சிக்கிய தனது தேரை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருந்தபோது அவனிடம் சென்று அவனது தர்மங்களை தானமாகப் பெற்று அவனை பலவீனம் ஆக்கினார்.  துரியோதனனின் பலவீனமான பகுதி தொடை என்பதை பீமனுக்கு சுட்டிக்காட்டி துரியோதனனை வீழ்த்தச் செய்தார். ஆக தந்திரங்களையும் சதிச் செயல்களையும் கண்ணன்  கடைப்பிடித்தது சரியா?
    இதற்கான விடையை அடுத்ததாக நீங்கள் பார்க்கலாம்.  பகவத் கீதையிலும் இதற்கான விடை இருக்கிறது. 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar