Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆறுவது சினம்
 
பக்தி கதைகள்
ஆறுவது சினம்


இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாஸன்

உங்களுக்குக் கோவமே வராதாமே.... என்று ஒருவரிடம் இரண்டு, மூன்று முறை  தொடர்ந்து கேட்டால் உடனே அவர் யாரு சொன்னா? என்று கோபப்படுவார். இது தான் உலக இயல்பு, கோபம் என்பது தும்மல் மாதிரி. எப்ப வரும்ன்னு தெரியாது. அடக்கவும் முடியாது.
    ஆனா நம்ம அவ்வைப் பாட்டியின் அறிவுரை ஆறுவது சினம். ஆறுவது என்றால் தணிதல். கோபம் சூடாக இருக்கும். அதனைத் தணித்து குளிருக்குக் கொண்டு வருகிறோமே இல்லையோ சமமாகவாது வைத்துக் கொள்ளவேண்டுமல்லவா !  இப்போது அதுதான் பிரபலமான கூல்... என்னும் வார்த்தை. ஒரு டபரா டம்ளரில் சூடாகக் காப்பி கொடுத்தால் அதன் சூடு ஆறிட மாற்றி, மாற்றி ஆற்றுகின்றோமே அது போலக் கோபம் வந்தவுடன் இடம் மாறினால் குளிர்ச்சியாகலாம். கோபம் நவரசங்களுள் ஒன்று. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூட சீறு.... சினம் கொள்ளாதே.... என்பார். நிர்வாகம் செய்யும்போது கோபம் இல்லாமல் ஆகாது. ஆயினும் அப்போது கூட கோபப்படுவது போல நடி.... ஆனால் கோபப்படாதே  என்கிறார். மஹான்களுக்கு கூட கோபம் வரும். ஆனால் அது கணநேரம் கூட நிலைக்காது என்பார் திருவள்ளுவர். கோபத்தை அடுத்த நொடியில் துாக்கியெறியும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆனால் நமக்கோ கோபம் வந்தவுடன் கையில் கிடைப்பதைத் தான் துாக்கி எறிகின்றோம். எனவே தான் கையில் இருப்பதை எறியாமல் கோபத்தைத் துாக்கி எறியக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சான்றோர் கூறுகின்றனர்.
     கோபம் என்பது ஒரு மனிதன் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். ஆம் நாம் கோபப்பட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. கண்கள் சிவக்கிறது. காது மடல்கள் விறைத்துக் கொள்கிறது. புத்தி தடுமாறுகிறது. வார்த்தைகள் முறையாக வருவதில்லை. இத்தனை நிகழ்வுகள் நமக்கு..... ஆனால்           எதிரில் இருப்பவரோ சர்வ சாதாரணமாக  ‡ ஆமா .... இவருக்கு வேற வேலையில்லை. எப்பவும் இப்படித்தான் என்று கடந்து போய்க் கொண்டேயிருப்பார். அப்போது பாருங்கள். யாருக்கு நஷ்டம்... நமக்குத் தான் உடல் ரீதியாக..... செயல் ரீதியாக.... பொருளாதார ரீதியாக.... என்று அடுக்கிக் கொண்டே போகலாம் எனவே தான் அடிக்கடி கோபப்படுபவர்களின் கோபம் கூட அலட்சியப்படுத்தப்படுகிறது. கோபத்தின் போது வீசியெறியும் வார்த்தைகளே நினைத்தால்... அப்பப்பா... உறவுகளே உடனேயே முறித்துப் போட்டு விடுகின்றது இருபத்து நான்கு மணிநேரமும் ஈரத்திலேயே இருக்கும் நாக்கு எத்தனை சூடான வார்த்தைகளே அள்ளி வீசுகின்றது. எனவே தான் வள்ளுவமும் நாவினால் சுட்டவடு என்கின்றது.         உடல் காயம் ஆறிவிடும் ஆனால் மனக் காயமோ நாளுக்கு நாள் எண்ணி எண்ணி  அதிகமாகிக் கொண்டே போகும். தலைமுறை, தலைமுறையாகப் பேச்சு வார்த்தை இல்லாதவர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அவன் கேட்ட வார்த்தைக்கு அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூடாது என்று கடைசி மூச்சு வரை கங்கணம் கட்டியவர்கள் இருக்கிறார்கள்.
    எனவே தான் சினமென்பது தணிக்கப்படவேண்டும் என்கிறார் அவ்வை. அவளுக்கு தெரியும் இதனைத் தவிர்க்க முடியாது., தணிக்கத் தான் முடியும் என்று.
    கோபம் ஏன் வருகிறது. முதலில் எதிர்பார்ப்பு. நாம் நினைத்தது நடக்காவிட்டால் கோபம் வருகிறது. பிறகு ஒவ்வொரு மனிதனும் தான் சொல்வதையே அனைவரும் கேட்க வேண்டும் என விரும்புகின்றார்கள். அதனால் வருகிறது. இயலாமையால், தாழ்வு மனப்பான்மையால், ஆற்றாமையால், தனிமைப்படுத்தப் படுவதால், வெறுமையான சூழலால், ஏமாற்றம் அடைவதால், தன் மேலேயே தான் இரக்கம் கொள்வதால், பிறர் புறக்கணிப்பதால் அல்லது புறக்கணிக்கப்படுவதாக நினைப்பதால், மன அழுத்தத்தால் என ஏராளமான காரணங்களேச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கோபத்திற்குக் காரணங்கள் தெரியாது.
    பிறகு கோபத்தைத் தணிக்க என்ன தான் வழி ‡ முதலில் எதிர் பார்ப்பைக் குறைத்து இயல்பு  நிலையை ஏற்கப் பழகவேண்டும். மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். நிறைய பயணங்கள் செய்து மனிதர்களின் குணங்களைப் படிக்க வேண்டும். இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். சிரிக்கப் பழக வேண்டும். ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாக ஆக்கிக்கொள்ள முயல வேண்டும். கடந்த காலத்தை திரும்பப் பெற முடியாது என்னும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்புறம் என்னதான் வேண்டும் என்று கோபம் வரக்கூடாது.
    ...... சிரிப்பையும், மனமகிழ்ச்சியையும் அழிக்கும் கோபத்தைப் போல ஒருவருக்கும் வேறொரு பகையும் உண்டோ? என்று வள்ளுவம் கேட்கிறது. நாம் பெரும்பாலும் சிரிக்கவே மறந்து விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.
    சிறிய வயதில் குழந்தையாய் இருக்கும் போது கிலுகிலுப்பையை ஒருவர் ஆட்டினால் அதன் அசைவையும், ஒலியையும் பார்த்து, கேட்டு பொக்கை வாயைக் கொண்டு சிரித்த நாம் வயது ஆக, ஆக சிரிப்பு என்றால் என்ன என்று அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருவன் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பெரும்பாலான விஷயங்களே எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டு விடுகின்றது என மனநுாலார் தெரிவிக்கின்றனர். ஒரு பேச்சுக்காக எடுத்துக் கொண்டால் ஒரு நடுத்தர மனிதன் முன்பு நாம் திடீரென கிலுகிலுப்பையை கொண்டுபோய் ஆட்டினால் அவர் சிரிப்பதற்குப் பதிலாக உடனடியாகக் கோபம்தான் கொள்வார். இன்னும் சொல்லப் போனால் கிலுகிலுப்பையை ஆட்டுபவர் அடி வாங்கினாலும் கூட ஆச்சரியமில்லை.
    வயது ஆக ஆக நமது நகைச்சுவை உணர்வின் சதவீதம் குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு ‡ ‘டேக் இட் ஈஸி பாலிஸி’ என்கின்றார்களே அது மட்டும் இருந்தால் கோபம் வருவது குறைவாகும் என்பது அனுபவ உண்மையாகும்.
    ஒரு ஜென் துறவி இருந்தார் அவருக்கு கோபமே வராது. அவரது சீடர்கள் பலமுறை ஆச்சரியத்துடனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சீடன் சற்றுத் துணிச்சலாகவே  ஒரு நாள் ‡ குருவே ‡ தங்களுக்கு கோவமே வராதா? காரணம் என்ன? என்று கேட்டு விட்டான். சிரித்த படியே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கும் கோபம் வரும் ஆனால் ஒரு சம்பவத்திற்குப் பின்னர் என் கோபத்திற்கான காரணத்தை எண்ணிச் சிரித்துக் கொண்டே கோபத்தினை புறந்தள்ளி விடுகின்றேன் என்றார்.
    சீடர்கள் ஆர்வமாக என்ன சம்பவம் குருவே? எனக் கேட்டார்கள். குருவும் சிரித்தபடியே சொன்னார் நாம் நமது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஓடையில் ஒரு படகில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம் அவ்வாறு ஒரு நாள் நான் தியானம் செய்து கொண்டிருக்கும் சூழலில் தியான நிலை கலைந்து கண்விழிக்க இருந்தேன். தீடீரென்று ஒரு படகு வந்து என் படகு மீது மோதியது. யார் என் படகு மீது மோதுகின்றார்கள் என்று கோபத்துடன் கண்களைத் திறந்து பார்த்தேன். அது ஒரு வெற்றுப் படகு. அதனை யாரும் இயக்க வில்லை தானாக எப்படியோ காற்றில் அசைந்து என் படகு மீது மோதியிருக்கின்றது காலம் அப்படித்தான் கோபமான சூழ்நிலை யார் மூலமோ நம் மீது திணிக்கின்றது என்ற ஞானத்தைப் பெற்றேன். அப்போது முதல் கோபம் வரும் போதெல்லாம் அந்த வெற்றுப் படகினை எண்ணி எனக்குள்ளேயே சிரித்து கொள்வேன். கோபம் காணாமல் போய்விடும் என்றார் எத்தனை சீடர்களுக்குப் புரிந்தது என்று தெரியவில்லை எல்லோரும் தலையாட்டினார்கள்.
    நாமும் தான் வெற்றுப் படகினை எண்ணிக் கொள்ளலாம். சிலர் கோபம் வரும்பொழுது ஒன்று, இரண்டு, எண்களே எண்ணுங்கள் என்பார்கள். எண்களே ஒன்று, இரண்டு என்று எண்ணுகின்ற அளவு மனம் நிதானமாக இருந்தால் தான் கோபத்தைக் கட்டுப்படுத்தி விடலாமே, எனவே கோபத்தை அதன் வழியிலேயே சென்று வெல்லவோ, அல்லது குறைக்கவோ பழகுதல் நன்மை பயக்கும். கோபத்தால் இழந்தவைகளைக் கணக்கிட்டால் இந்த நீண்ட உலகில் பட்டியல் இடுவதற்குப் பக்கங்கள் போதாது.
    எனவே தான் மகாகவி பாரதியாரும் கூட ‡ ரௌத்திரம் கொள் ‡ என்று சொல்லாமல் ‡ ரௌத்திரம் பழகு ‡ என்று சொன்னார்கள். பழகுகின்ற ஒன்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் தானே. கடந்த நிமிடங்களை திரும்பப் பெறும் கருவி நம்மிடம் இல்லை. நிகழ் காலத்தை நிதானமாக்கும் அறிவு நம்மிடம் உள்ளது. எனவே சினத்தைத் தணிப்போம் சிறப்பைப் பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar