Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


“பொதுவாக கணவனும் மனைவியும் சேர்ந்து ஒன்றாக ஒரே பொருளாகத்தான் கருதப்படுவர். விதி, மன்மதனைக் கொன்று என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டது.  இது பாதிக் கொலையாகும்.  என்னையும் கொன்றிருந்தால்தான் கொலை முற்றுப்பெற்றதாகும்.  மரத்தை யானை முறித்துக் கீழே தள்ளிவிட்டால் அதன் மீது படர்ந்திருக்கும் கொடியும் கீழே விழுவதைத் தவிர வேறு என்ன வழி? அதுபோல நான் இங்கிருந்து வருந்துகிறேன்".
"நீ எனக்காக இங்கே ஒரு சிதையை ஏற்பாடு செய். அதன் மீது என் கணவரின் சாம்பலைப் பூசிக்கொண்டு தளிர் படுக்கையில் எவ்வளவு விருப்பத்துடன் என் உடலை வைப்பேனோ அவ்வாறே நெருப்பிலும் விழுந்து அவருடன் சேர்ந்து விடுகிறேன்".  
"சிதையில் நான் விழுந்ததும், எங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு கை நீரை தர்பணமாக கொடு.  தனித்தனியாக வேண்டாம். மறு உலகில் அவர் என்னுடன் சேர்ந்தே அந்த நீரை பருகுவார். மேலும் அவருக்கு கிரியை செய்யும் பொழுது, மாம்பூவின் கொத்துக்களை அவருக்காக தர வேண்டும்.  ஏனெனில் அவருக்கு மாம்பூவின் மீது விருப்பம் அதிகம்."
இப்படி ரதி உயிர் துறக்க தயாரான பொழுது, ஆகாயத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
"ரதியே! உன் கணவன் வெகுநாள் உன்னை விட்டு இருக்க மாட்டான். சீக்கிரமே நீ அவனை அடைவாய்.  முக்கண்ணனின் கண் நெருப்பால் அவன் இறந்ததற்கு காரணம் கூறுகிறேன். கேள்!" என்று அந்த அசரீரி சொல்ல ஆரம்பித்தது.
"ஒரு சமயம் பிரம்மதேவரிடம் தகாத முறையில் மன்மதன் நடந்துகொண்டான்.  தன் அம்புகளால் அவர் மனத்தை கலக்கி, திலோத்தமையிடம் தவறான எண்ணம் கொள்ளச் செய்தான்.  இதனை அறிந்த பிரம்மன் தன் மனத்தை அடக்கி, மனச்சலனத்துக்கு காரணமாயிருந்த மன்மதனை சபித்துவிட்டார்.  அந்த சாபத்தின் பலன்தான் இது.  

"தர்மன் என்ற ஒரு தேவன் பிரம்மனிடம் மன்மதனுக்கு சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டிக்கொண்டான்.  பிரம்மன், அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, "பார்வதியை சிவபெருமான் மணக்கும் பொழுது, மன்மதன்  தனக்கு உதவி செய்தவன்தான் என்று உணர்ந்து தான் அழித்த அவனது பழைய சரீரத்தையே அவனுக்கு அளித்து முன்போல் இருக்கச் செய்வார்" என்று கூறியிருக்கிறார்.  

"ஆகையால், மங்களமுடைய ரதியே! இந்த சாம்பலை பாதுகாத்து வா. சிவபெருமான் கோபத்தால் மன்மதன் உடலை இழந்தான்.  அதுபோல் சிவபெருமான் அருளினால் மறுபடியும் அந்த உடலை பெறப் போகிறான்".

வடிவம் காணமுடியாமல் நின்ற ஒரு தேவதை அசரீரியாக இப்படிச் சொன்னதும் தான் உயிரைவிடும் எண்ணத்தை சற்று தளர்த்தினாள் ரதி.  அசரீரியின் வாக்கியத்தில் முழுதும் நம்பிக்கை கொண்ட வசந்தன், ரதியிடம் தக்கபடி பேசி, அவளுடைய  எண்ணத்தை முழுவதுமாக விடச் செய்தான்.  

(குறிப்பு: இங்கே அசரீரி தேவதை ரதியை "மங்களமுடைய" என்று அழைத்தது ரதி கைம்பெண் அல்ல என்று அவளை உணர செய்யவதற்கு என்று கொள்ளலாம்).
மெலிவுற்று, ஒளியிழந்து சோர்ந்திருந்த ரதி, அசரீரியின் வாக்கியத்தினால் சற்று உற்சாகம் பெற்று, சாபத்தின் முடிவிற்கான காலத்தை - அதாவது சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொள்ளும் நாளை, எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.
பெண்களின் அழகிற்கு முக்கியமான பயன் தன் கணவரின் மனத்தை வசப்படுத்தி அவரது அன்பை நிரந்தரமாக பெற உதவுவது.  ஆனால் தன் அழகினால் சிவபெருமானை கவர முயற்சி செய்த பார்வதிக்கு, அவள் எதிரிலேயே அழகு தெய்வத்தை அழித்த சிவபெருமானின் செயலை அவளால் ஏற்க முடியவில்லை.   தவிர, பரமன் மன்மதனிடம் கோபம் கொண்டதே தன் அழகுக்கு நேர்ந்த அவமானமாக பார்வதி கருதினாள். மேலும், சிவபெருமானின் அன்பைப் பெற உதவாத தன் அழகின் மீது ஒரு வெறுப்பு கூட வந்தது. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம்தான்.
அது என்ன அப்படி அழகுக்கு மயங்காத ஓர் ஆண்மகனா, பார்த்துவிடலாம் என்ற ஒரு வீராப்பு பார்வதியின் மனதில் தோன்றியது.  
தன் அழகு பயனுடையதாக வேண்டுமென்றால் சிவபெருமானை மணக்க வேண்டும்.  அதற்கு வழி, அந்த இலட்சியத்தை நோக்கி தவம் செய்வது. பெண் தவம் செய்வதா?  அவளுடைய தாய் மேனா மகளுடைய இந்த முடிவை கேட்டு திடுக்கிட்டாள்.  இந்த சிவன் கிடைக்காவிட்டால் என்ன? வேறு ஆண்பிள்ளை இந்த உலகத்தில் இல்லையா? அதற்காக ஒரு பெண் தவம் செய்யப் போகிறேன் என்று கிளம்புவது எப்படி ஒரு தாயால் ஏற்க முடியும்?.  தான் விரும்பிய புருஷன் தனக்கு கிடைக்க வேண்டுமென்றால், பெண்கள் சாதாரணமாக தன் இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருப்பாள்.  ஏதாவது விரதம் இருப்பாள். அல்லது, உனக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன், என் விருப்பம் நிறைவேற அருள் செய் என்று வேண்டிக் கொள்வாள்.   இதையெல்லாம் விட்டு விட்டு, ஒரு பெண் உடலை வருத்தி முனிவர்கள் போல தவம் செய்யப் போகிறேன் என்பது, கொஞ்சம் அதிகம் இல்லையா? "மகளே! மனதிற்கு பிடித்த தேவர்கள் விக்கிரக வடிவில் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள்.  நீ அவர்களை பூஜித்து விரும்பிய பலனை பெறலாம்.  உன் நளினமான உடல் தவம் செய்வதில் உள்ள சிரமங்களை தாங்காது.  வாகைப்பூ தேனியை தாங்கும், ஆனால் பறவை உட்கார்ந்தால் தாங்காது", என்று பல வகையாய் சொல்லி மகளின் மனத்தை மாற்ற முயன்றாள். மேனாவுக்குத் தெரியாது சாட்சாத் அம்பிகையே அவளிடம் அவதாரம் செய்திருக்கிறாள், அவள் சிவபெருமானைத்தான் மணம் புரிவாள் என்று.
ஆனால், எவ்வளவு முயன்றும், மேனாவால் மகளின் மனத்தை மாற்ற முடியவில்லை. பார்வதி, தன் எண்ணம் நிறைவேறும் வரை தவம் செய்யப்போவதாக கூறி, தன் தந்தையிடம் அனுமதி கேட்டாள்.  தந்தை
ஹிமவான் பார்வதியின் முடிவை முழுவதுமாக ஆதரித்து,  தவம் செய்ய அனுமதி அளித்தான்.  அவனுக்கு அது மகிழ்ச்சியையே அளித்தது.  
உடனே இமயத்தில் தவம் செய்ய மயில்கள் நிறைந்த ஒரு சிகரத்தை பார்வதி தேர்ந்தெடுத்தாள்.  அவள் தேர்ந்தெடுத்த அந்த இடம், பிற்காலத்தில் "கௌரீ சிகரம்" என்று அவள் பெயராலேயே அழைக்கப்பட்டது.  இடம் முடிவானவுடன், கொஞ்சமும் தாமதியாமல் தவக்கோலம் பூண்டாள்.
முத்துமாலையை நீக்கி மரவுரி அணிந்தாள்.  கூந்தல் அலங்காரங்களை நீக்கி, சடைகளாக வகுத்துக்கொண்டாள். அதனாலென்ன, அந்த சடைகளினால் அவள் அழகு குறையவில்லை. தங்கத்தினாலான மேகலையை நீக்கி,  முஞ்சத்தினால் முப்புரியை செய்து, அதை  இடையில் அணிந்தாள். முஞ்சம் என்பது தர்ப்பை போல் ஒரு புனிதமான  புல். உதட்டில் பூசிய வர்ணத்தை நீக்கினாள். கையில் ஜபமாலை ஏந்தினாள்.   
பார்வதி எப்பொழுதும் பட்டு மஞ்சத்திலேயே உறங்கியவள்.  அதில் கூட அவள் தலைப்பூ உதிர்ந்து அது அவள் உடலில் படுமாயின் வருந்துபவள். இப்பொழுது வெறும் தரையிலேயே உட்கார்ந்தாள். கையைத் தலையணையாக கொண்டு கடினமான தரையிலேயே படுத்தாள்.  
தன்னைக் கண்டு மிருகங்கள் அஞ்சாமல் இருக்கும் படி நடந்து கொள்வது தவம் செய்பவர்களுக்கு முதல் கடமை. அங்கு சுற்றித் திரிந்த மான்கள் அவளிடம் கொஞ்சம்கூட அச்சப்படவில்லை. இரு கைகளிடம் தானியத்தை ஏந்தி அந்த மான்களுக்கு தருவாள்.  
அந்த பனிமலையில் தினசரி மூன்று தடவை நீராடுவாள்.  மரவுரியையே ஆடையாக அணிந்தாள். எப்பொழுதும் ஜபம் செய்து வந்தாள்.  
அவளுடைய தவத்தின் மேன்மையைக் கண்ட அங்குள்ள ரிஷிகள் அவளைக்காண வந்தனர்.  பார்வதியின் தபோவனம் அங்கு வருபவர்களின் பாபங்களை போக்கவல்லதாக தூய்மையாக இருந்தது.  இயற்கையிலேயே பகையுள்ள புலி, மான் முதலிய பிராணிகள் அங்கு எந்த பகையுணர்ச்சியும் இல்லாமல் சுற்றி வந்தன.  
தான் செய்கிற தவத்தின் அளவு (வீர்யம்) குறைவு, போதிய பலன் கிடைக்காது என்று நினைத்தாள்.  உடனே தன் உடல் வருத்தத்தையும் கவனிக்காமல், தவத்தை உக்கிரமாக செய்ய ஆரம்பித்தாள்.  
மிக உஷ்ணமான கோடையில் நாற்புறமும் அக்னியை ஜ்வலிக்க செய்து அதன் நடுவில் நின்று தவம் செய்தாள்.  வேறு எதையும் பாராது, சூரியனையே பார்த்து நின்றாள்.  கடுமையான வெய்யிலிலும்  அவள் முகம் தாமரை மலர்போல் அழகு குன்றாது சோபையுடன் விளங்கியது.  
மழை பொழியும் பொழுது மட்டுமே அந்த நீரை அருந்தி அதையே உணவாகக் கொண்டாள்.  குளிர்ந்த சந்திர கிரணங்கள் அவள் சிரமத்தை சற்று நீக்கின.  பார்வதியின் உடலில் மழை நீர் பட்டவுடன் ஆவி எழுந்தது.  அவ்வளவு கடுமையாக அவள் உடல் வெப்பமடைந்திருந்தது. 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar