Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நீ மனிதனாகவே இரு
 
பக்தி கதைகள்
நீ மனிதனாகவே இரு


ஒருநாள் மதியம் மகாகவி காளிதாசர் வெளியூர் சென்ற போது தாகமாக இருந்தது.  சற்று துாரத்தில் தண்ணீர் குடத்தை சுமந்தபடி பெண் ஒருத்தி வந்தாள். அவளிடம், ‘‘அம்மா தாகமாக இருக்கு... கொஞ்சம் தண்ணீர் தரலாமா’’ எனக் கேட்டார்.
‘‘தருகிறேன் ஐயா... தாங்கள் யார் என்பதை சொல்லவில்லையே’’ என்றாள்.
உடனே காளிதாசருக்கு தன்னைப் பற்றிய உயர்வு மனப்பான்மை உண்டானது.  சாதாரணப் பெண்ணிடம் தன்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா எனக் கருதி, ‘‘நான் ஒரு பயணி அதாவது வழிப்போக்கன்’’ என்றார். அந்த பெண், ‘‘உலகில் இரண்டு பயணிகள் மட்டுமே உள்ளனர். ஒருவர் சந்திரன், மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகல் என பயணம் செய்கிறார்கள்’’ என்றாள்.
‘‘சரி, என்னை விருந்தினர் என வைத்துக் கொள்ளலாம்’’ என்றார் காளிதாசர்.
அதற்கு, ‘‘இருவர் மட்டுமே விருந்தினர். ஒன்று செல்வம். இரண்டு இளமை. இவையே விருந்தினராக நம்மிடம் வந்து போகும்’’ என்றாள்.
எரிச்சலுடன் காளிதாசர், ‘‘நான் ஒரு பொறுமைசாலி’’ என உரக்கக் கத்தினார்.   
உடனே அவள், ‘‘அதுவும் இருவர் மட்டுமே. ஒன்று பூமி. எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கிக் கொள்ளும். மற்றொன்று மரம்.  கல்லால் யார் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு கனிகளைக் கொடுக்கும்’’ என்றாள்.

 கோபம் அதிகரிக்க, ‘‘நான் ஒரு பிடிவாதக்காரன்’’ எனக் கத்தினார். அதற்கும் அவள், ‘‘ஏன் ஐயா கத்துகிறீர்? மெதுவாகப் பேசுங்கள். முடி, நகத்திற்குத்தான் பிடிவாத குணம் உண்டு. எத்தனை முறை வேண்டாம் என வெட்டினாலும் பிடிவாதமாக வளரும்’’ என்றாள் சிரித்தபடி.

தாகம் அதிகமாகவே வெறுப்புடன், ‘‘நான் ஒரு முட்டாள்’’ என வாயசைத்தார் காளிதாசர். அப்போதும் அவரை விடுவதாக இல்லை. ‘‘உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான். ஒருவன் நாடாளத் தெரியாத அரசன். மற்றொருவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன்’’ என்றாள் அவள்.

செய்வதறியாத காளிதாசர்  அவளது காலில் விழுந்தார். உடனே, ‘‘மகனே...எழுந்திரு’’ என்றாள் அவள். நிமிர்ந்த காளிதாசர் மலைத்துப் போனார்.

பராசக்தி நேரில் காட்சியளித்தாள். கண்ணீர் பெருக வணங்கினார். ‘‘காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என உணர்கிறானோ அவனே மனிதப் பிறவியின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு’’ என்று கூறி தண்ணீர் குடத்தை கொடுத்து விட்டு மறைந்தாள்.
தாகம் தணிய தண்ணீ்ர் குடித்தார். ஞானாமிர்தமாக இனித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar