Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசிரியையின் ஆத்திரம்
 
பக்தி கதைகள்
ஆசிரியையின் ஆத்திரம்


அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பேச வந்த என்னை ஒரு ஆசிரியை தனியாகச் சந்தித்தாள்.
“கூட்டம் முடிஞ்சவுடன பத்து நிமிஷம் என்கிட்டத் தனியாப் பேசுவேன்னு பச்சைப்புடவைக்காரி மீது சத்தியம் செஞ்சி கொடுங்க. இல்லாட்டா..”
“இல்லாட்டா...’’
“கூட்டதுல பச்சைப்புடவைக்காரியப் பத்திக் கன்னாப்பின்னான்னு கேள்வி கேட்டு உங்கள நெளிய வைப்பேன்”
அருகில் வேறொரு ஆசிரியை சத்தமாக அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“கொடுத்துரேன். நான் இருக்கேன்ல? ஏன் பயப்படணும்?”
சத்தியம் செய்து கொடுத்தேன்.
கூட்டம் முடிந்து கிளம்பும்போது அந்த ஆசிரியை வழிமறித்தாள். காலியாக இருந்த ஒரு அறையில் அமர்ந்தோம்.
“நான் சந்திரா. பச்சைப்புடவைக்காரி எனக்கு எதுவுமே தரல. யாருமே எனக்கு எதுவுமே தரல. நல்ல குடும்பத்துல பொறந்தேன். பெத்தவங்ககிட்ட குறைஞ்ச பட்ச அன்ப எதிர்பாத்தேன். கெடைக்கல. எனக்கு அஞ்சு வயசாகும்போது அப்பா அம்மாவுக்கு விவாகரத்து ஆயிருச்சி. ஒண்ணுவிட்ட அத்தைகிட்ட ஒரு வேலைக்காரியா வளர்ந்தேன். பூங்குடி கிராமத்துலயே அதிகம் படிச்சவ நான்தான். பி.எட்., படிச்சேன். வேலைக்காக அலைஞ்சேன். கடைசியா ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேந்தேன். வேலை சக்கையா பிழிஞ்சாங்க. வெளிய சொல்லிக்கற  மாதிரி சம்பளம் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு சென்னையில இந்த பிரபலமான பள்ளிக்கூடத்துல  போனமாசம்தான் சேர்ந்தேன். நல்ல சம்பளம். ஆனா பிரின்சிபல் என்னைத் துச்சமா மதிக்கறாங்க. எப்பவுமே கடுப்போடதான் பேசறாங்க. நான் கிராமத்துக்காரிங்கறதுனால  மத்த டீச்சருங்க  விலகியே இருக்காங்க.  பச்சப்புடவைக்காரி ஏன் என்ன மட்ட�

கதை கேளு.. ராமாயண கதை கேளு...
..............
பகுதி – 69
.............
தீயும் தீண்டத் துணியாத துாயவள்
.............
ராவணன் மாய்ந்தான் என்ற செய்தி கேட்டு கூக்குரலாய் ஆரவாரமிட்டு மகிழ்ந்து, துள்ளி குதித்தனர் வானர வீரர்கள். எல்லோருக்கும் பெருத்த நிம்மதி. தம் முயற்சிகளில் பல இடையூறுகளும், சில சந்தர்ப்பங்களில் நம்பிக்கை இழப்பும் இருந்தாலும், லட்சியத்தை அடைந்துவிட்ட திருப்தி பேரானந்தத்தைத் தந்தது. லட்சுமணன், அனுமன், சுக்ரீவன் முதலான அனைவரும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய போது ராமன் மனசுக்குள் சந்தோஷப்பட்டானே தவிர, தன்னடக்கம் காரணமாக வெளிப்படையாக அந்த ஆனந்தத்தைத் தெரிவிக்கவில்லை. வழக்கம்போல கண்களும், முகமும் மலர்ந்திருந்தன. ஆனாலும் கண்களில் வழக்கத்தை விட கூடுதல் ஒளி, அந்த சாதனையின் பெருமையைக் காட்டியது!
அதே சமயம் விபீஷணனின் கண்கள் நீர் பெருக்கின. ராவணனின் உடலுக்கருகே போய் மண்டியிட்டு அமர்ந்தான். ‘தெரிந்தே அழிவைத் தேடிக் கொண்டு விட்டீர்களே அண்ணா! அபகரித்து வந்தவளை என்றுமே அடைய முடியாதபடி நிரந்தர பிரிவைக் கொண்டீர்களே. மோகத்தால் கடத்தி வந்து விட்டாலும், சீதைக்கு உங்கள் மீது கொஞ்சமும் நாட்டம் இல்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னரும் மூர்க்கமாக நடந்து கொண்டு விட்டீர்களே! எவ்வளவோ அறிவுறுத்தியும் பேதலித்த புத்தியால் பழி பாவம் தேடிக் கொண்டீர்களே. அநியாயமாகக் கையகப்படுத்தியதெல்லாம் தற்காலிக உரிமையைத்தான் அளிக்கும், ஆனால் கைவிட்டுப் போய்விடும் என்ற உண்மையை உணராது இருந்துவிட்டீர்களே…’ என்றெல்லாம் புலம்பினான்.   
ராமன் அவனது தோளைத் தொட்டு ஆறுதல் படுத்தினான். ‘உன் ஆதங்கம் புரிகிறது விபீஷணா.. என்ன செய்ய, சிலரை திருத்தவே முடியாது; அவர்களுடைய கெடு செயல்களை மரணத்தால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். கவலைப்படாதே. உன் வம்சத்தில் இப்போதைக்கு நீ ஒருத்தன் மட்டுமே எஞ்சியிருக்கிறாய். உனக்கென ஒரு கடமை காத்திருக்கிறது. அது – உன் அண்ணன்மார்களுக்கு நீத்தார் கடன் நிறைவேற்றுவதுதான். இந்த வகையில் உன் வம்சத்தின் கெடு செயல்களால் ஏற்பட்ட பாவங்களைப் போக்குவதோடு அவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தியடையவும் வழி செய்’
ஆறுதல் அடைந்தான் விபீஷணன். அதேசமயம், கணவன் உயிர் நீத்தான் என்ற விவரம் கேள்விப்பட்ட மண்டோதரி யுத்த களத்துக்கு ஓடி வந்தாள். ராவணனின் சடலத்தின் மீது விழுந்து அழுதாள். ‘முறையாகத் திருமணம் செய்து கொண்டதால் என்னை பட்டத்து ராணியாக்கி உயர்மதிப்பு அளித்தீரே. அதே சமயம், உம் பராக்கிரமம் அறிந்து உம்மீது காதல் கொண்டு வந்த எத்தனையோ பெண்களுக்கு உம் அந்தப்புரத்தில் இடம் கொடுத்தீர்கள். ஆனால் சீதை ஒருத்தியை மட்டும் உம்மால் தீண்டக் கூட இயலவில்லை. உமக்கான சாபம் காரணமாக மட்டும் அப்படி ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. மனைவி என்ற என் தகுதியை அவளுக்கு அளித்து என்னைப் புறக்கணிக்கத் தயாரான உங்களுடைய அதர்ம சிந்தனையே உங்களை வீழ்த்தியிருக்கிறது’ என்று கதறியவள் அப்படியே அவன் மீது விழுந்து தானும் உயிர் நீத்தாள்.   
சற்றைக்கெல்லாம் அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராமன், லட்சுமணனிடம், ‘விபீஷணனுக்கு முறையாக முடிசூட்டி அவனை இலங்கைக்கு மாமன்னனாக்கு’ என உத்தரவிட்டான். அதன்படியே சில சம்பிரதாய வழிமுறைகளை அனுசரித்து விபீஷணனுக்கு மகுடம் சூட்டினான் லட்சுமணன்.
பிறகு ராமன், ‘அனும... உனக்கு சீதை சிறை வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரியும். ஆகவே நீ போய் நம் வெற்றிச் செய்தியை அவளிடம் சொல். அதற்குப் பிறகு இலங்கை மன்னன் விபீஷணனின் அனுமதி பெற்று அவளை நன்கு அலங்கரித்து அவனுடைய ராஜாங்க முறைப்படி என்னிடம் அழைத்துவர ஏற்பாடு செய்’ என்று கேட்டுக் கொண்டான்.
அனுமன் விரைந்து சென்று சீதையை சந்தித்தான். ‘வென்றார் ராமன், வீழ்ந்தான் பகைவன்’ என்று குறிப்பால் ராம வெற்றியை பறைசாற்றினான். அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த சீதை கண் மூடி, மெய் மறந்து அந்த ஆனந்தத்தை அனுபவித்தாள். பிறகு ராமன் எண்ணப்படியே விபீஷணன் அவளுக்குப் பூரண அலங்காரம் செய்யுமாறு சேடிப் பெண்களுக்கு உத்தரவிட்டான். அதைக் கேட்டு சீதை மிக நாணமுற்றாள். ‘வேண்டாம், இந்த பகட்டெல்லாம் இல்லாமல் எளிமையானவளாகவே என் ராமனைச் சென்று அடைகிறேன்’ என்று மறுத்தாள். ஆனால் அனுமன், ‘ராமனுடைய விருப்பம்தான் இது. அதைத்தான் விபீஷணனும், நானும் நிறைவேற்றுகிறோம். அபகரிக்கப்பட்ட அவமானத்திலும், கோபத்திலும் பல மாதங்களாக தாங்கள் உள்ளம், உடல் எல்லாம் குன்றியிருக்கிறீர்கள். ராமனுக்கு உங்களை பழைய சீதையாகவே பார்க்க விருப்பம். அதனால்தான் இந்த ஏற்பாடு’  என்று சீதைக்கு ஆறுதல் சொன்னான்.
திரிசடையும் அதை ஆமோதிக்க, அவளது மேற்பார்வையிலேயே சீதைக்கு, மகாலட்சுமியாக அலங்காரம் செய்விக்கப்பட்டது. அவளை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வந்து ராமன் முன் நிறுத்தினான்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’  ராமன், சீதை பார்வைப் பரிமாற்றத்தில் இருவருக்குமிடையேயான அன்பு, காதல் எல்லாம் வெளிப்பட்டன. சிவதனுசை முறிக்கும் முன் உப்பரிகையில் நின்ற அவளை சாலையிலிருந்தபடி ராமன் நோக்கிய அதே, புத்தம் புது காதல் பார்வை! பிரிவின் துயரால் நொந்திருந்த உள்ளங்கள், இந்த இணைப்பால் நெகிழ்ந்து மகிழ்ந்த பார்வை.
ஆனால் மனித மனம்தான் எப்படி தறிகெட்டுப் போகிறது! மாயமான் மீது சீதைதான் ஆசை கொண்டாள் என்றாலும், லட்சுமணன் அந்த மான் ஏதோ சதி செய்கிறது என எச்சரித்த போதும், மனைவியின் மகிழ்ச்சிக்காகச் சிறிதும் ஆராயாமல் அதைத் துரத்திக் கொண்டு போன தன் கேவலமான நடத்தையால் குற்ற உணர்வு கொண்டு நொந்து போயிருந்தான் ராமன். ஆனால் அதிலிருந்து விடுபடும் உத்தியாக சீதையைத் துன்புறுத்தும் எண்ணமும் கொண்டான்! ஆமாம், இந்த சாக்கில்  ராவணன் என்ற அரக்கனின் கட்டுப்பாட்டில் பத்து மாத காலம் இருந்த சீதை தன் கற்பு நெறியைக் காத்திருப்பாளா என்று ஊரார் சந்தேகப்படக் கூடும் என்றும், அதையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்றும் கருதினான். தான் அவதியுறும் குற்ற உணர்வு என்ற அரிப்பிலிருந்து விடுபடவும், உலகோர் ஐயத்தைப் போக்கவும் அவளை தீயில் இறங்கித் தன் கற்புத் திறத்தை நிரூபிக்கச் சொன்னான்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். என்ன கொடுமை இது! அரக்கனை வென்று அவன் பிடியில் சிக்கியிருந்த மனைவியை மீட்ட ஒரு கணவன் அவளைத் தன் அன்புப் பிடியில் சிக்க வைத்து சந்தோஷப்பட வேண்டியதை விட்டுவிட்டு இப்படி குதர்க்கமாக யோசிக்கிறானே! அவ்வளவு அவநம்பிக்கையா அவள்மேல்?
ஆனாலும், ஊரார் வாயை மூட வேண்டிய முக்கிய பொறுப்பு இருந்ததால், தீ வளர்க்கப்பட்டது. இதைக் கண்டு அக்னி தேவனே வெகுண்டான். ராமனின் பாசம் பொய்யோ என எண்ண வைக்கும் வகையில் அவன் இட்ட கட்டளையை அக்னி ஏற்க மறுத்தான். தீயேயானாலும், சீதையைத் தீண்டாமல் அவளது  கற்புத் திறத்தை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என தீர்மானித்தான் அக்னி.
ராமனின் மனதை சீதையால் படிக்க முடிந்தது. ‘அவன் அவ்வாறு குற்ற உணர்வடைய நான் அத்துமீறி ஆசைப்பட்டதுதான் காரணம் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். மாய மான் மீது தான் கொண்ட ஆசை, மா அரக்கனான ராவணன் மீதும் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் நியாயமானதுதான். அந்தக் குற்ற உணர்வையும், சந்தேகத்தையும் போக்க வேண்டியது என் கடமை’  என நினைத்துக் கொண்டாள். தான் குற்றமற்றவள் என்ற உண்மையே அவளது முகத்தை மலர வைத்திருந்தது.
தீ மூட்டப்பட்டது. அந்த அக்னி குண்டத்தை வலம் வந்தாள் சீதை. கை கூப்பி ராமனை நோக்கி வணங்கினாள். ராமன் அவள் பார்வையைத் தவிர்த்து விண்ணோக்கினான். உடனிருந்த லட்சுமணன், ‘அதுதான் எல்லாம் முடிந்து விட்டதே! இனியும் அண்ணியாருக்கு ஏன் சோதனை அளிக்கிறார் அண்ணன்’ என மனசுக்குள் அழுதான்.
ஏதோ படியேறி ஒரு வீட்டிற்குள் நுழைவது போல வெகு இயல்பாக தீக்குண்டத்துக்குள் இறங்கினாள் சீதை. தன்னை நெருங்கும் எதையுமே அப்படியே பற்றிக் கொண்டு, பொசுக்கி, சாம்பலாக்கிவிடும் அக்னி, அன்று வெந்தணலாக இல்லாமல் தண் நிலவாக மாறியது.  ஆமாம், சீதை தீச்சூழதான் நின்றிருந்தாள் என்றாலும், குளிர் அருவியில் குளிப்பவள் போலதான் உணர்ந்தாள்.
சட்டென தீயும் தணிந்து அணிந்தது. அனைவரும் ஆரவாரித்தனர். ராமனும் தன் குற்ற உணர்வையும், சந்தேகத்தையும் அந்தத் தீயிலேயே மானசீகமாகப் பொசுக்கி அழித்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar