Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாட்டி சொல்லைத் தட்டாதே
 
பக்தி கதைகள்
பாட்டி சொல்லைத் தட்டாதே


சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் பாட்டி. கல்லுாரியில் இருந்து வந்தாள் பேத்தி ஸ்வேதா. ‘‘வர்ற சன்டே அன்னிக்கு என் கிளாஸ் மேட்டோட பர்த்டே. அன்னிக்கு ராத்திரியில் நடக்கப்போற மிட்நைட் பார்ட்டிக்கு வரச் சொல்றா பாட்டி. நான் போகலாமா?” எனக் கேட்டாள்.
கொண்டாட்டம் என்ற பெயரில் இக்காலத்தில் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக தீயவழிக்குச் செல்வதை உணர்ந்த பாட்டியின் கண்களில் கோபம் கொப்பளித்தது.
ஆனாலும் பேத்தி விடுவதாக இல்லை.
‘‘ பாட்டி... நீ நினைக்கறது சரிதான். ஆனா... என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போறோம். அதனால எந்த பயமும் இல்லை. நான் கட்டாயம் வருவேன்னு சொல்லிட்டேன், ப்ளீஸ் பாட்டி. போகாட்டி நல்லா இருக்காது’’ என்றாள்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, அருகில் ஒதுக்கி வைத்திருந்த காய்கறி கழிவுகளை எல்லாம் பாத்திரத்தில் போட்டாள்.
பேத்தி கொதித்துப் போனாள்.
‘‘பாட்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா... குப்பையை அள்ளி பாத்திரத்தில போடுறியே... நல்ல காய்கறிகளும் சேர்ந்து கெட்டு போயிடாதா?’’ எனக் கேட்டாள்.
‘‘அதனால என்ன? கெட்டுப் போனா போகட்டும்’’ என்றாள் பாட்டி.
புரியாமல் திகைத்தாள் பேத்தி.
‘‘உன்னோட மனம் குப்பையான விஷயங்களை ஏற்க தயாரா இருக்கறப்போ வயிறும் குப்பை உணவை ஏத்துக்கும்னு நினைச்சுட்டேன்’’ என்றாள் பாட்டி.
உண்மை உறைத்தது. உடனே தோழியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டாள். ‘பார்ட்டிக்கு என்னால் வரமுடியாது’ என்றாள் மனஉறுதியுடன்.  
இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா...
தவறான பாதையில் உலகம் போகிறதென்றால் நாமும் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. மீறுவோர் பெரியவர்களின் வழிகாட்டுதல், நேர்மையான பாதையில்  இருந்து விலக நேரிடும் என்பது தான்.   


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar