Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜடாசுரன்
 
பக்தி கதைகள்
ஜடாசுரன்


திரவுபதியின் பேரெழில் ஜடாசுரனை காமவயப்படுத்தியது. அவளை அனுபவித்திடும் வெறியும் அதிகமாகியது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் பாண்டவர்களுக்கு அவன் உதவிகள் செய்பவன் போல நடித்தான்.
காட்டில் விறகு வெட்டி எடுத்து வந்தான். கனிகள் பறித்து வந்தான். மலர்களில் மாலை கட்டி திரவுபதியிடம் தந்து விசுவாசி போல காட்டிக் கொண்டான். அவனை பாண்டவர்களுக்கும் பிடித்து விட்டது. அந்த ஆசிரமத்தில் லோமச முனிவரும் இருந்தார். அவருக்கும் ஜடாசுரன் சேவை செய்தான். மொத்தத்தில் திரவுபதியின் மீது ஏற்பட்ட மோகம் அவனை அனைவரிடமும் அடங்கிப் போய் நடிக்கச் செய்தது.
அவன் நடிப்பை பாண்டவர்களோ மற்றுமுள்ள முனிவர்களோ துளியும் உணரவில்லை. ஒருநாள் லோமசர் நித்ய கடமையாக நீராடி வரச் சென்றார். நீர்த்துறையிலேயே அமர்ந்து முன்னோருக்கான தர்ப்பண காரியங்களை செய்ய இருப்பதாக கூறிச் சென்றார்.
அவர் சென்ற பின் பீமனும் வனத்திற்குள் காய்கனி வகைகளை பறித்து வருவதாகக் கூறிப் புறப்பட்டான். மிகுந்த பனிக்காலமாக இருந்ததால் மலைப்பகுதி நீங்கி சமநிலத்துக்கு சென்றே இவைகளை கொண்டு வர வேண்டும் என்பதால் தான் திரும்பி வர நேரமாகலாம் என கூறிச் சென்றான். இவ்வேளை தர்மன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் திரவுபதி மட்டுமிருந்தாள். ஜடாசுரனுக்கு தன் விருப்பம் நிறைவேறப் போகும் காலம் வந்து விட்டதாக தோன்றியது. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பமும் கிடைக்காது என உணர்ந்தவன் ஒரு கட்டையால் தர்மன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அமர்ந்து தியானம் புரியும் வேளையில் அவர்கள் தலையில் அடித்து அவர்களை மயங்கச் செய்து விட்டு திரவுபதியைத் துாக்கிக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி ஓட முற்பட்டான். ஆனால் அவளைத் தீண்ட முற்பட்ட போது அவளிடம் இருந்து அனல் ஜுவாலை வீசியது. அவளை அவ்வளவு சுலபமாக தொட்டுத் துாக்க முடியாது அவள் தீயில் தோன்றியவள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. திரவுபதியோ, ‘‘அடப்பாவி... நீ இவ்வளவு கொடியவனா... உன்னை நான் என் சகோதரன் போல் அல்லவா கருதியிருந்தேன்’’ என சீறினாள். ஜடாசுரன் காதில் வாங்காமல் ஒரு உத்தியை கையாளத் தொடங்கினான்.
தர்ம, நகுல, சகாதேவன் ஆகிய மூவரையும் தன் தோளில் வைத்தபடி அங்கிருந்து ஓடத் தொடங்கினான். திரவுபதி அவனை தொடர்ந்து ஓடினாள்.
‘‘நில்... இது மகாபாவம். அவர்களை எங்கு கொண்டு செல்கிறாய்? அவர்கள் மயக்கம் தெளிந்தால் அவ்வளவுதான்’’ என கூக்குரலிட்டுக் கொண்டே பின்னால் ஓடினாள். ஒரு கட்டத்தில் தோளில் கிடந்த அவர்களோடு திரும்பிய ஜடாசுரன் தன் கொடிய அசுரத் தோற்றத்தோடு திரவுபதியைப் பார்த்து,‘‘ என் இச்சைக்கு இணங்குவதாக சொல் இவர்களை விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் கொன்று புசித்து விடுவேன். எனக்கும் நரமாமிசம் என்றால் மிக பிடிக்கும்’’ என சிரித்தான்.
இப்படி பேச வெட்கமாக இல்லையா... உனக்கு அழிவுக்காலம் நெருங்கி விட்டது. உன்னை என் கணவர்களில் ஒருவரான பீமசேனரே வதம் செய்வார்’’ என்றவள் அப்போதே பீமனை மனதிற்குள் தியானித்தாள்.  
சமநிலத்து வனம் நோக்கி நடந்தபடி இருந்த பீமன் மனதுக்குள்ளும் சட்டென ஒரு சலனம். திரவுபதி அழைப்பது போல ஒரு உள்ளுணர்வு. அடுத்த நொடியே திரும்பி நடக்கத் தொடங்கினான். அவ்வேளை வானில் பறந்தபடி இருந்த பறவைகளிடம் கூட அதிக சலசலப்பு. பீமனுக்கும் எங்கோ பெரிய தவறு நடப்பதும் அதன் எதிரொலிதான் இந்த நிமித்தம் (சகுனம்) என்பது புரிந்தது. அப்போது ஒரு தேவபட்சி விண்ணில் பறந்தபடியே, ‘‘மகாபலசாலியே... தென்திசை நோக்கி செல். உன் சகோதரர்களும் உன் மனைவியும் ஆபத்தில் உள்ளனர்’’ எனக் கூறிச் சென்றது. பீமனும் தெற்கு நோக்கி ஓடத் தொடங்கினான். சிறிது நேரத்திலேயே ஜடாசுரனுடன் தன் மயங்கிக் கிடக்கும் சகோதரர்களையும், திரவுபதி அவனோடு வாதிட்டபடி இருப்பதையும் கண்டான்.
பீமன் வந்து விடவும் திரவுபதிக்கும் உயிர் வந்தது போல் இருந்தது. ஜடாசுரன் பீமனை எதிர்பார்க்கவில்லை. வந்து விட்ட நிலையில் அவனோடு மோதாமலும் இருக்க முடியவில்லை. இவ்வேளை தர்ம, நகுல, சகாதேவனும் மயக்கம் நீங்கி கண்விழித்தனர்.  பீமனும், ஜடாசுரனும் யானையும் யானையும் மோதிக் கொள்வது போல் மோதி யுத்தம் செய்யத் தொடங்கினர். முடிவில் பீமனே வென்றான். ஜடாசுரனை தலைக்கு மேல் துாக்கி வீசி எறிந்ததோடு அவன் கைகால்களையும் பிய்த்து திசைக்கு ஒன்றாக வீசினான்.  
நடந்து முடிந்த அந்த நிகழ்வு தர்மனை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது. ஐவரும் ஆசிரமத்துக்கு திரும்பினர். லோமச முனிவரும் திதி, தர்ப்பண காரியம் முடிந்து திரும்பி விட்டிருந்தார்.
பிராம்மண வேடத்தில் ஜடாசுரன் நடமாடி பின் அவன் கொல்லப்பட்டதை அறிந்து வருந்தினார்.
‘‘உங்கள் வனவாச காலம் என்பது புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இது போல யுத்த வதங்களும் செய்யும்படி ஆகி விடுகிறது. ஒரு தவறான அசுரனைக் கொன்றது பாவமாகாது. ஆனாலும் அது பவித்ரமும் ஆகாது. இத்தகைய சகல செயல்களுக்கும் பரிகாரம் கைலாச கிரியிலுள்ள தேவப்ரயாகை எனப்படும் மானசரோவரில் நீராடி அந்த ஈசனை கிரிவடிவில் கண்டு வணங்குவது தான்’’  என்று கூறி அவர்களுக்கு கைலாச கிரி நோக்கிச் செல்லும் எண்ணத்தை உருவாக்கினார் லோமசர்.
அதே வேளை, ‘‘கைலாச கிரியை பாதங்களால் நடந்தே அடைவதில் தான் திரேக ரூபமாய் நாம் செய்த பாவங்கள் நீங்கும். ஆனால் அது மிகக் கடினம். ஈசனின் ஆசிகள் இல்லாதவர்கள் வழியில் மிருகங்களால் கொல்லப்படுவார்கள். எனவே நீங்கள் மிக கவனத்தோடும், பக்தி உணர்வோடும் சென்றாலே கிரி உச்சியை அடைய முடியும்’’ என்றார்.
திரவுபதி அவர் கூறியதைக் கேட்டு அஞ்சவில்லை. ‘‘முனிபெருமானே! எது வந்தாலும் சரி... நாங்கள் அந்த மேலான கிரியை அடைவோம். மானசரோவரிலும் நீராடுவோம். எங்கள் வனவாச காலத்திற்கும் ஒரு பெரும் பொருளை உண்டாக்குவோம்.
உங்கள் ஆசிகள் எங்களுக்கு துணை நிற்கட்டும்’’ என கூறி லோமசரை வலம் வந்து வணங்கி விட்டு ஐவரும் புறப்பட்டனர்.
செல்லும் வழியில் தர்மன் அர்ஜுனனை எண்ணியபடியே பேசலானான்.
‘‘அன்புச் சகோதரர்களே! தர்மபத்தினியே! நம் அர்ஜுனன் நம்மை விட்டுப் பிரியும் போது ஐந்து வருட வடிவில் தான் திரும்பி விடுவதாக கூறிச் சென்றிருந்தான். அந்த நாளானது இன்னும் 17 தினங்களில் வர உள்ளது. அதன்பின் அர்ஜுனனும் நாம் இருக்கும் கைலாச கிரிக்கே விண்ணில் இருந்து நேராக வந்து விடக்கூடும். நாம் அனைவரும் ஒன்றாகும் இடமாக கைலாச கிரி அமையக் கூடும்’’ என்றான்.
லோமசர் கூறியது போலவே கைலாசத்துக்கான வழித்தடத்தில் நிறைய இடையூறுகள். சில இடங்களில் பனிச்சரிவு... சில இடங்களில் மிருகங்களால் இடையூறு! அதுபோக உண்ண உணவு கிடைக்காதபடி எங்கும் பனி... சகலத்தையும் சகித்தபடி நடந்தவர்களை ‘விருஷபர்வா’ என்ற முனிவரின் ஆசிரமம் ஒன்று வரவேற்றது.
விருஷபர்வாவும் அவர்களை வரவேற்று உணவளித்து உபசரித்தார். பின் அவர்கள் கைலாய கிரி நோக்கிச் செல்வது பற்றி அறிந்து மகிழ்ந்தார். இருப்பினும் அவர் முகத்தில் உடனே ஒரு வாட்டமும் ஏற்பட்டது. தர்மன் அதற்கான காரணத்தைக் கேட்டான்.
‘‘பாண்டவர்களே! இங்கிருந்து கைலாச கிரியை அடைவது சுலபமல்ல. இடையில் மால்யவான் என்னும் மலை உள்ளது. அதை கடக்கையில் புதைந்து போய்விடும் ஆபத்து மிக உண்டு. அப்படியும் கடந்து விட்டால் கின்னரர், கிம்புருடர்களின் மலையான ‘கந்தமாதன பர்வதம்’ என்ற மலை வரும். இது ஒரு மாயமலை... இந்த மலையில் திரும்பிய பக்கமெல்லாம் பழவகைகள் கண்ணில் படும்! அதே போல சகல விருட்சங்களும் கண்ணில் படும். இவைகளோடு உலகின் சகல பறவை இனங்களையும் இங்கு காணலாம். சகல மலர்களையும் கூட இங்கே காணலாம். மொத்தத்தில் கனி, மலர், விருட்சம், பறவைகள் இவைகளோடு வண்டினங்களும் பூரணமாக இங்குள்ளன. மேலாக நான்கு கொம்புகள் கொண்ட யானைக் கூட்டம் இந்த பர்வதத்தின் சிறப்பு.
இந்த பர்வதத்துக்குள் ஒருவர் நுழைந்து விட்டால் அவர்கள் தாங்கள் யார் என்பதையே மறந்து போவார்கள். மலையின் எழிலில் மயங்கி, கிடைக்கும் கனிகளை எல்லாம் உண்டு, அழகிய காட்சிகளில் மயங்கி எப்போதும் ஒருவரை போதையில் திரிந்து கொண்டிருப்பர். இந்த பர்வதத்துக்குள் இயற்கையின் வசம் சிக்காமல், மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இதை கடந்தால் ‘ஆர்ஷ்டிேஷணர்’ என்ற முனிவரின் ஆசிரமத்தை அடையலாம். ஆர்ஷ்டிேஷணரை அடைவது என்பது ‘அரை கைலாயத்தை’ அடைவது போன்றது. அதன்பின் அவர் உதவியில்லாமல் கைலாய கிரியை அடைய முடியாது. சுருக்கமாகக் கூறினால் இதுவரை நீங்கள் கடந்து வந்தது பெரிதேயில்லை. இந்த கந்தமாதன பர்வதத்தை கடந்து ஆர்ஷ்டிேஷணரை காண்பதே பெரிது’’ என்று முடித்தார் விருஷபர்வா!
பீமனோ தர்மனோ அதைக் கேட்டு கலங்கவில்லை. ‘‘மகரிஷி... தாங்கள் சொல்லச் சொல்ல எங்கள் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்த பூமண்டலம் தான் எத்தனை விந்தையானது... ஒருபுறம் பாலை. இன்னொரு புறம் பனிப்பொழில்! நடுவில் சகலவகை தாவரங்களுக்குமான கந்தமான பர்வதம்! அந்த பர்வதத்தை நாங்கள் நிச்சயம் மயக்கமின்றி கடப்போம். தாங்கள் கூறியபடி ஆர்ஷ்டிேஷணரையும் சந்திப்போம்’’ என்றான்.
விருஷபர்வா அதைக் கேட்டு மகிழ்ந்தவராக ஆர்ஷ்டிவேஷணரால் கூட காணப்பட முடியாத குபேரனின் வாசப்பகுதியும் அங்கேதான் உள்ளது. அதை இப்போது அவன் சகோதரன் ‘மணிமாண்’ என்பவன் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்’’என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar