Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேண்டாமே சந்தேகம்!
 
பக்தி கதைகள்
வேண்டாமே சந்தேகம்!

சந்தேக பக்தி நன்மை தராது என்பதற்காக சொல்லப்படும் கதை இது.ஒரு சமயம் மக்கள் பாவங்களில் மூழ்கி மிகவும் சிரமப்பட்டார்கள். கருணையுள்ள சிவபெருமான், அவர்களை பாவங்களில் இருந்து மீட்க ஸ்ரீருத்ர மந்திரத்தை அருளினார். மக்கள் அந்தமந்திரத்தை ஓதியதால்,பாவங்களில் இருந்து மீண்டனர். அவர்களுக்கு இறப்பே வரவில்லை.இதனால் நரகம் காலியானது. எமதர்ம ராஜா, பிரம்மாவிடம் ஓடினார்.“பிரபு! இப்போதெல்லாம் நான் யார் அருகே போனாலும், அவர்கள் ருத்ர மந்திரம் சொல்லியவர் களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களது உயிர்களைக் கவர முடியவில்லை. ஆள் இல்லாத ஊருக்கு ராஜாவாக இருந்து என்ன பயன்? எனவே, என் பதவியிலிருந்து விலகுகிறேன்,” என்றார்.பிரம்மா அவரைத் தேற்றி, “நான் அச்ரத்தா, துர்மேதா என்ற துõதுவர்களைத் படைத்துதருகிறேன். ‘அச்ரத்தா’ என்றால் ‘நம்பிக்கையின்மை’. ‘துர்மேதா’ என்றால் ‘மோசமான எண்ணங்கள்’. இவற்றைமந்திரம் சொல்பவர்கள் மீது ஏவி விடு. பிறகு விளைவைப் பார்,” என்றார்.
இந்த துõதுவர்கள், மந்திரம் சொன்னவர்களிடையே போன போது, அவர்களுக்கு ‘நாம் சொல்லும் இந்த மந்திரத்தால் தான், நமக்கு நற்பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! அல்லது நம் சக்தியால் கிடைத்துக் கொண்டிருக்கிறதா!’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்துடன், அவர்கள் மந்திரம் ஓத எமனின் வேலை எளிதாகி விட்டது.கடவுளை வணங்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் வணங்க வேண்டும். புரிகிறதா!h


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar