Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நிதானம் தர்மமானது
 
பக்தி கதைகள்
நிதானம் தர்மமானது

சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமமுனிவரின் வழியில் வந்தவர்தான் கவுதமர். இவருடைய மகன் சிரகாரி மந்த புத்தி உடையவர். எந்தவொரு வேலையையும் நிதானமாக செய்பவர்.   
 மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு மகனை அழைத்து ‘‘தாயின் தலையை கொய்து வா’’ என சொன்னார் கவுதமர். என்னதான் இருந்தாலும் பெற்ற தாயை கொல்ல யாருக்காவது மனம் வருமா... குழப்பத்தில் இருந்தார். நேரமும் ஓடியது. இதற்கு இடையில்
கவுதமரோ, ‘எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமோ, நான் ஏன் இப்படி கட்டளையிட்டோம்’ என வருந்தினார். வானத்தில் இருந்த தர்மதேவதை கவுதமரிடம் வந்தது.  
‘‘முனிவரே... தங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை. பெண்களிடம் இப்படியா நடப்பது. தாயிற்கு அடுத்தபடியாக மனைவிதான் இருக்கிறாள். என்னதான் பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்ப்பதுதான் முறை’’ என்றது.  மனம் மாறியவர் மகனிடம் சென்று, தாயை கொன்று விட்டாயா.. என பதட்டத்துடன் கேட்டார். அவனோ தான் குழப்பத்துடன் இருப்பதாகச் சொன்னான். முனிவரோ ‘‘உன் நிதான குணம் தான், தாயின் உயிரை காப்பாற்றியது’’ என்றார். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar