Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிருஷ்ணார்ப்பணம்
 
பக்தி கதைகள்
கிருஷ்ணார்ப்பணம்

முன்னொரு காலத்தில் ஸ்ரீரங்கம் பெருமாளை தினமும் இருவேளையும் தவறாமல் தரிசிப்பது அங்குள்ள அடியார்கள்  கூட்டத்தின் வழக்கம். அதில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஆர்வமிருந்தும் உடல் தளர்ச்சி காரணமாக மற்றவரை போல வேகமாக வழிபாட்டில் ஈடுபட முடியவில்லை. அதனால் கருடாழ்வார் சன்னதி அருகே அமர்ந்து விடுவார். பெருமாளை தரிசித்து வரும் கூட்டத்தாருடன் சேர்ந்து வீடு திரும்புவார். இச்செயலை கண்டவர்கள் பலர் விமர்சனம் செய்தனர். அதைக் கேட்டும் கேளாமலுமாய் இருந்த அவருக்கு பெருமாளை தினமும் தரிசிக்க வேண்டும் என்ற வைராக்கிய பக்தி மட்டும் உள்ளத்தில் பிரகாசித்தது.  
இதனால் கருடாழ்வார் சன்னதி முன் அமர்ந்து அவர் கொண்டு வந்த பாகவத்தை படித்துவிட்டு கூட்டத்தாருடன் வீடு திரும்புவார். இதனால் அவர் பெருமாளை சேவிப்பது அபூர்வமாகி விட்டது.

 பலரும் அவர் செய்கையை  நின்று பார்ப்பார்கள். பாகவதத்தில் சில வரிகளை விட்டு விட்டு படிப்பதை பார்த்து வயது முதிர்ச்சி காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறார் என பலரும் நினைத்துக் கொண்டனர். படிக்க ஆரம்பிக்கும் போது அமர்ந்து இருக்கும் இடத்தை சுற்றி நன்றாக துடைப்பார். இவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது என அங்குள்ளோர் பட்டமே கட்டிவிட்டனர். பலநாட்களாக அவரை யாரும் கண்டு கொள்ள வில்லை. அவரும் பாகவதம் படிப்பதை நிறுத்தவும் இல்லை.

 ஒரு நாள் வெளியூர் பண்டிதர் பெருமாளை தரிசிக்க வருகிறார் அவருக்கு கருடாழ்வார் சன்னதியில் கும்ப மரியாதை செய்ய வேண்டும் என்ற பேச்சு வந்தது. திருஷ்டி பரிகாரமாக அரைகுறையாக பாகவதம் படிக்கும் பண்டிதரை கோபுர வாசல் மணல் திடலில் அன்றொரு நாள் மட்டும் இருக்க செய்வோம் என சொன்னார்கள். வயதான பண்டிதரும் கிருஷ்ணார்ப்பணம் என சொல்லி பாகவதம் படிக்கும் இடத்தினை மாற்றிக் கொண்டார்.
மரியாதை பெற்ற வெளியூர் பண்டிதர் கருடாழ்வார் சன்னதி வந்தவுடன் அமைதியாக நின்றார். பெரியோர்களே இங்கு யாரோ ஒருவர் திரிகரண சுத்தியுடன் பாகவதம் படிக்கும் சப்தம் கேட்கிறது அவர் எங்கே என கேட்க, எல்லோருக்கும் ஆச்சரியம்.  பெரியவர் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். எல்லோரையும் சற்று தொலைவில் நிற்கச் சொல்லி விட்டு அவரை பணிவுடன் வணங்கினார் வெளியூர் பண்டிதர்.
பெரியவரோ! சிறிது நேரத்தில் மணல் திட்டிலிருந்து, ஜாக்கிரதையுடன் பயபக்தியாக சிறிது மணல்துளிகளை எடுத்து அவருக்கு கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார்.

 இதைப் பார்த்த அங்கிருந்தவர்களுக்கு ஏதுவும் புரியவில்லை. ‘‘பரம பக்தரான இந்த பெரியவர் பாகவதம் படிக்கும் போதுதெல்லாம் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. தாங்கள் எனக்கு வழங்கிய வரவேற்பில் மேள தாள இசையோடு பெருமாள் ஆடும் சதங்கை ஒலியும் என் காதில் கேட்டது.
ஆராய்ந்து பார்த்தால் இவர் படிக்கும் பாகவததிற்கு ஏற்ப பெருமாளே நேரில் வந்து ஆட்டம் ஆடி தரிசனம் தந்துள்ளார்
மேலும் இவர் செயலை எல்லோரும் பைத்தியக்காரத்தனம் என்கிறோம். நாம் தான் உண்மையான பைத்தியகாரர்கள்’’ என சொன்னார். மேலும் பெருமாள் நடமாடுவதற்காகவே கருட மண்டபத்தையும் இங்குள்ள மணல் திட்டையும் துாய்மை படுத்தி சமன் செய்தார் என்றார் பண்டிதர். நீங்கள் எல்லோரும் பெருமாளை தினமும் சென்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். ஆனால் இவரின் பாகவத பக்திக்காக பெருமாளே வந்து தினமும் தரிசனம் தரும் பெரும்பேறு பெற்றவர் என்றார் புதிய பண்டிதர்.  எல்லோரும் பெருமாளை சேவிக்க பெரியவர் பின்னே வரிசையாக சென்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar