Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு அழகான ரகசியம்
 
பக்தி கதைகள்
ஒரு அழகான ரகசியம்


“அப்பாவுக்கு வயசாகி விட்டது. மனசுல மரணபயம் இருக்கு. பேசிப் பாரேன்” என்று நண்பன் சொன்னதால் அவனது 90 வயது தந்தையைப் பார்க்க வந்திருந்தேன்.
“என் மகனை மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணச் சொல்லுங்க”  என்றார் முதியவர்.
“எதுக்கு”
“மரணமே வராது”
“அப்படின்னா... அந்த ஹோமம் செஞ்ச யாருமே செத்திருக்க கூடாதே”
முதியவர் விழித்தார்.
“அந்த மந்திரத்தோட தாத்பரியம் என்ன தெரியுமா? வெள்ளரிப்பழம் எப்படி கொடியிலருந்து லேசா விடுபடுதோ அந்த மாதிரி விடுதலைய எனக்கு கொடுன்னு அர்த்தம்.”
“வெள்ளரிப்பழமா...”
“ஆமா வெள்ளரி கொடி பூப்பூத்து காய்க்கும். அது பழமானவுடன் கனம் தாங்காம கொடி தரையில இறங்கிரும். கொடிக்கும் பழத்துக்கும் மெல்லிய நார்தான் உறவா இருக்கும். ஒரு கட்டத்துல அந்த நார் அறுந்து பழம் தனியாகி விடும். என் குடும்பத்த விட்டுட்டுப் போறேனே, என் சொத்தையெல்லாம் விட்டுட்டுப் போறேனேன்னு மனம் கஷ்டப்படாமப் போகணும். பிரசவத்துல தொப்புள்கொடிய அறுப்பாங்க. மரணத்துல உறவுக்கொடி தானாகவே அறுந்து விழணும். அப்போதான் மரண பயம் இல்லாம இருக்கும். அதுதான் மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் சாரம்”
சில விநாடிகள் ஒன்றும் பேசாமல் இருந்தார் முதியவர்.
“இப்போ மீனாட்சி அம்மன் என் முன்னால வந்தா அவகிட்ட சாகாவரம் கேப்பேன்”
“நிச்சயமா கொடுக்கமாட்டா”
“அந்தளவுக்குக் கூட கருணையில்லாதவளா அவ?”
“கருணை ஜாஸ்தியா இருக்கறதாலதான் அந்த வரத்தைக் கொடுக்கமாட்டான்னு சொல்றேன். சாகாமல் இருப்பது வரமல்ல, சாபம். சாகலேன்னா இன்னும் நீண்ட முதுமைதான் கிடைக்கும். முதுமையோட தனிமை, வெறுமை, துன்பம், நோய் வந்து சேரும்”
“இருந்தாலும்...’’
“இந்த வாழ்க்கைங்கறது எட்டாம் வகுப்பு படிக்கற மாதிரி. அதை நல்லபடியா படிச்சி முடிச்சிட்டீங்க. அடுத்து ஒன்பது, பத்துன்னு முன்னேறிப் போக வேண்டாமா? எட்டாவதுல என் சீட்டு வசதியா இருக்குன்னு இங்கே உட்கார்ந்திருக்க முடியுமா என்ன? சாகா வரங்கறது காலகாலத்துக்கும் எட்டாம் வகுப்புலயே உட்காருற மாதிரி”
“இந்த சித்ரகுப்தனை நெனச்சா சமயத்துல பயமா இருக்கு. அவன் எல்லாத்தையும் கணக்கு வச்சிருப்பானாமே”
“எமனோட இன்னொரு பேர் தான் சித்ரகுப்தன்”
“இது என்ன புதுக்கரடி”
“இது பழைய கரடி”
“சித்ரன்னா அழகானன்னு அர்த்தம். குப்தன்னா ரகசியம்னு அர்த்தம். மரணம் ஒரு அழகான ரகசியங்கறதுனாலதான் யமனுக்கு சித்ரகுப்தன்னு பேரு. யம வந்தனம் என்னும் ஸ்லோகம்  ‘சித்ரகுப்தாய வை நமஹ’ என்றே முடிகிறது. அழகான ரகசியத்துக்குச் சொந்தக்காரர்ன்னு அர்த்தம்”
“நான் எப்பவும் கடவுள் பேரை சொல்லிக்கிட்டிருக்கேன். ஒருவேளை துாக்கத்துலயோ மயக்கத்துலயோ என் உயிர் பிரிந்து என்னால கடவுள் பேரை அந்த நேரத்துல சொல்ல முடியலேன்னா...’’
“கடவுளே உங்க பேரைச் சொல்வாரு. உங்கள நெனப்பாரு”
“திரும்பவும் புதுக்கரடிய விடறீங்களே”
“இல்ல. வராக புராணத்தில், “கடைசி காலத்துல என்னை நினைக்க முடியாத பக்தர்களை நானே நினைப்பேன். அவங்களுக்கு நல்ல கதியைக் கொடுப்பேன். ‘அஹம் ஸ்ம்ராமி மத் பக்தாணாம் நயாமி பரமாம் கதிம்’ (bold) என்கிறார் கடவுள்”
“இந்தச் சமயத்துல நான் என்ன சொல்லணும்? கடவுள்கிட்ட என்னன்னு பிரார்த்தனை பண்ணிக்கணும்?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”
முதியவர் முகத்தில் தெரிந்த நிம்மதி ஒரு வார்த்தையில்லாத கவிதை.
.................
 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar