Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பண்டரியில் கண்ட வைகுண்டம்
 
பக்தி கதைகள்
பண்டரியில் கண்ட வைகுண்டம்

ஸந்த் நரஹரி எழுதிய ‘தேவா துஜா’ எனத் தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள்.  
நீ தெய்வம். நானோ பொற்கொல்லன். எனினும் எனது தொழில் உன் நாமத்தை ஜெபிப்பதுவே. என் உடல் ஊதும் உலை. அந்தராத்மா தங்கம். மூன்று குணங்களும் உலை. அதன் உள்ளே பிரம்ம ரசத்தை ஊற்றினேன். பரமாத்மாவுடன் ஐக்கியம் ஆவதற்காக பிராணாயாமம் என்ற காற்றை ஊதினேன். இரவும் பகலும் தியானம் செய்வதன் ​மூலம் அந்தத் தங்கத்தை அடித்து நீட்டினேன்.   விவேகம் என்ற சுத்தியல் கொண்டு காம, குரோதங்களை பொடியாக்கினேன். மனம், புத்தி ஆகிய கத்தரிக்கோல்கள் ​மூலம் அனாவசியங்களை வெட்டி எறிந்தேன். ஞானம் என்னும் தராசை கையில் எடுத்துக் கொண்டு ராம என்ற இரண்டு அட்சரங்களை அதில் நிலை நிறுத்தினேன். தோளில் தராசு வைக்கும் பையை மாட்டிக் கொண்டு அக்கரைக்குச் சென்றேன். நான் இரவும் பகலும் ஹரிநாம பஜனை செய்யும் ஹரிதாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

‘கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நீங்கள் வசுதேவ குடும்பகம் பற்றி சொன்னீங்க நினைவிருக்கா?’  என்று கேட்டாள் பத்மாசனி.
    ‘நினைவில்லாமல் என்ன? விட்டலனுக்குப் பல தரப்பில் பலவிதமான பக்தர்களும் நண்பர்களும் இருந்ததைப் பற்றி குறிப்பிடும்போது அது பற்றி நாம் பேசினோம்’ என்றார் பத்மநாபன்.
    ‘இது பற்றி யோசித்தபோது எனக்கு சில விஷயங்கள் தோன்றின. நமது மதம் அனைவரையும் சமமாக பாவிப்பது பற்றி குறிப்பிடுகிறது. சொல்லப் போனால் உலகமே ஒரு குடும்பம் எனும் தத்துவத்தில் சக மனிதர்களை மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் கூட மதிக்கிறோம் கொண்டாடுகிறோம். சிங்கம், புலி, எருது, அன்னம், ஆந்தை, மயில் என்று பலவித விலங்குகளை கடவுளின் வாகனங்களாக மதித்து வழிபடுகிறோம் அரசமரம், வேப்ப மரம், துளசி என்று பலவித தாவரங்களை பிரார்த்திக்கிறோம். தலவிருட்சங்கள் என்ற பெயரில் தாவரங்களை வழிபடுகிறோம்.   
    அவ்வளவு ஏன், உயிரற்ற பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்பாடுகள் கூட நம் சனாதன தர்மத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இசை, நடனக் கலைஞர்கள் மேடை ஏறும்போது மேடையைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வது, புத்தகத்தின் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் பதற்றத்துடன் அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வது ஆகியவை வசுதேவ குடும்பகம் என்பதை மேலும் வலுப்பெறச் செய்கிறது.
    பத்மாசினியின் சிந்தனைகள் பத்மநாபனுக்கு ஓரளவு வியப்பையும் பெருமளவு ஆனந்தத்தையும் அளித்தன.  அந்த மகிழ்ச்சியோடு அவர் பானுதாசரின் சரிதத்தைத் தொடர்ந்தார்.

கடையில் விற்பதோடு தள்ளுவண்டியில் துணிகளை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் விற்பதும் அக்காலத்தில் வணிகர்களின் வழக்கம்.  ஒருமுறை பானுதாசர் அப்படி ஒரு தள்ளுவண்டியில் துணிகளை நிரப்பிக் கொண்டு கிளம்பும் போது ஊரிலுள்ள வணிகர்கள் பலர் அன்று துணிகளை விற்கச் செல்லாததை கவனித்தார்.  
    விசாரித்தபோது ஒரு தகவல் தெரிய வந்தது. ஊர் எல்லையில் ஒரு மகான் ஹரி கதாகாலட்சேபம் செய்ய இருக்கிறார் என்றும் அங்குதான் அவர்களெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதும். தானும் அங்கு செல்ல வேண்டும் என பானுதாசரின் உள்ளம் பரபரத்தது. தள்ளுவண்டியில் இருந்த துணிகளை ஒழுங்காக கடைக்குள் அடுக்கி வைத்து விட்டுப் போக வேண்டும் என்பது கூட அவருக்குத் தோன்றவில்லை. அருகில் இருந்த சில வணிகர்களிடம் தன் துணிகளைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நடந்தார்.
    அந்த வணிகர்கள் ஏற்கனவே பானுதாசரின் மீது கோபம் கொண்டிருந்தனர். அவரைப் பழி தீர்க்க இதை ஒரு வாய்ப்பாகக் கருதினர். பானுதாசரின் துணிகளை எடுத்து சற்றுத் தள்ளி இருந்த ஒரு பள்ளத்தில் வீசி எறிந்தனர்.  போதாக்குறைக்கு அவரது குதிரை கட்டியிருந்த கயிறை அறுத்து அதையும் தப்பிக்க விட்டனர். பானுதாசர் இது குறித்து விசாரித்தால் யாரோ திருடன் இதையெல்லாம் செய்து விட்டான் என்று கூறிவிடலாம் எனத் தீர்மானித்தனர்.
    இது பற்றி எதுவும் அறியாத பானுதாசர் காலட்சேபத்துக்குச் சென்று திருமாலின் பெருமைகளைக் கேட்டபடி கண்ணீர் சிந்தினார். பின் அங்கிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து விட்டலனைத் துதிக்கத் தொடங்கினார்.
    இதற்குள் பிற வணிகர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்பி இருந்தனர். அன்று அந்த ஊருக்கு சில தீவட்டிக் கொள்ளையர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த வணிகர்களின் வீட்டிலிருந்த செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தடுக்க முயன்றவர்களை அடித்து உதைத்தனர். பானுதாசருக்கு தாங்கள் செய்த துரோகத்தின் காரணமாகத் தான் தங்களுக்கு இந்த கதி நேர்ந்தது என்பதை அந்த வணிகர்கள் உணர்ந்தனர்.
    அதே சமயம் விடியற்காலையில பானுதாசர் ஊருக்குத் திரும்பும்போது எதிரில் ஒரு இளைஞன் வந்தான். ‘பானுதாசரே, இது உங்கள் குதிரை’ என அவரிடம் ஒப்படைத்தான்.
    நடந்தது எதையும் அறியாமல் பானுதாசர் குதிரையுடன் ஊருக்குள் நுழைந்தார். பிற வணிகர்கள் அவரைச் சுற்றி கூடினார்கள்.  தாங்கள் கட்டவிழ்த்து விட்ட குதிரை பானுதாசரிடமே இருந்தது கண்டு மேலும் வியப்படைந்தனர். அவர்கள் பானுதாசரின் கால்களில் விழுந்து தாங்கள் செய்த துரோகத்தைக் கூறி  மன்னிக்குமாறு வேண்டினர். பானுதாசரின் மனம் இதையெல்லாம் தாண்டி பேரின்ப நிலையை அடைந்து விட்டிருந்தது. பள்ளத்தில் வீசி எறியப்பட்டிருந்த அவரது துணிமணிகளையெல்லாம் அந்த வணிகர்களுக்கு அவர் தானமாக அளித்தார்.
    ராமதேவர் என்ற பெயர் கொண்ட மன்னர் வித்யாரண்ய நகரம் என்பது உள்ளிட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். பவானி அம்மனின் பரம பக்தரான அவர் பல தர்மங்களை செய்து வந்தார்.
    ஒருநாள் பண்டித​ர் ஒருவர் மன்னரிடம் வந்தார். ‘மன்னா... நீங்கள் இன்னும் பண்டரிபுர விட்டலனை தரிசனம் செய்யவில்லையே’ என்றார்.
    ‘அதில் என்ன அப்படி சிறப்பு?’  என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் மன்னர்.
    ‘வைகுண்டத்தை நீங்கள் அங்கே காணலாம்’ என்றார் அந்தப் பண்டிதர்.
    ஆர்வம் மிகுதியாக உடனே பண்டரிபுரம் சென்றார் ராமதேவர்.  
பண்டரிபுரத்தில் காலடி வைத்த உடனேயே மன்னரின் மனதில் நிம்மதி வந்தது. பக்திப் பரவசம் உண்டானது.  ‘விட்டலா நீ என்னுடன் வித்யாரண்ய நகரத்துக்கு வந்து விடவேண்டும்’ என மனமுருகி வேண்டினார்.
    பல புண்ணியங்கள் செய்த ஒரு மன்னரின் வேண்டுகோளை நிராகரிக்க விட்டலன் தயங்கினான். ‘நான் வரத் தயார். ஆனால் நீ எதாவது பெரும் தவறை செய்துவிட்டால் நான் மீண்டும் இங்கேயே வந்து விடுவேன்’ என்று கூறினான். ஏற்றுக்கொண்டு மன்னரோடு விட்டலனும் பயணத்தைத் தொடங்​கினான்.
    மறுநாள் காலையில் சன்னதியைத் திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே மூலவரைக் காணோம். விட்டலனைக் காணாத பானுதாசர் மூர்ச்சை அடைந்தார். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar