Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மின்னிய மணல்; மனம் மாறிய பாகவதர்
 
பக்தி கதைகள்
மின்னிய மணல்; மனம் மாறிய பாகவதர்

ஸந்த் துக்காராம் எழுதிய ‘நாம சங்கீர்த்தன சாதன’ எனத் தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள்.  
கடவுளின் திருநாமங்களைச் சொல்வதன் மூலம் நம் பாவங்கள் ஓடி விடும். துறவியாக மாறி யாரும் காட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே நாம சங்கீர்த்தனம் செய்யலாம். பக்தி, பொறுமையுடன் திருநாமங்களான ராமா, கிருஷ்ணா, ஹரி,  விட்டலா, கேசவா என்று ஜபியுங்கள். முக்தி அடைய இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை விட்டலன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். இதை பின்பற்றுபவர்கள் இப்பிறவியிலேயே நற்கதியடைவர்.  

‘பள்ளி ஆண்டு விழாவில் நடந்த ‘பிரகலாதன்’ நாடகத்தில் இரண்டு குழந்தைகளும் பிரகலாதன், இரணியன் வேடத்தில் நடிச்சாங்க. இரணியனாக நடிச்ச மயில்வாகனன் கம்பீரமாக ‘நான்தான் கடவுள். என்னைத்தான் வணங்க வேண்டும்’ என வசனம் பேசினான் தெரியுமா?’ என்றார் பெருமிதமாக அப்பா பத்மநாபன்.
இதைக் கேட்டதும், ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் ‘நானே கடவுள்’ என்று தானே அர்த்தம். இரணியன் கூட ‘நான்தான் கடவுள்’ என்றான்.’ என்று சொல்லி தயக்கமுடன் அம்மா பத்மாசினி நிறுத்திக் கொண்டாள். அவள் கேட்க வந்தது ‘நானே கடவுள் என்பது சரி என்றால் இரணியன் கூறியதில் என்ன தவறு’.  இதை பத்மநாபன் உணர்ந்து கொண்டார்.
‘காஞ்சி மஹாபெரியவர் கூறிய விளக்கத்தைச் சொல்கிறேன். நான்தான் கடவுள் என்று இரணியன் கூறியபோது அதன் பொருள் ‘நான் மட்டுமே கடவுள்’ என்பதாகும். ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு அல்ல, இரண்டும் ஒன்றே என்று கூறும் அத்வைதம் இது இல்லை.
கடவுளைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு எதுவுமில்லை என்ற காரணத்தால் நாமும் கடவுள்தான் என்கிறார் ஆதிசங்கரர். ஒரு சிறிய குவளையில் உள்ள நீரைப் போல நாம் இருக்கிறோம். கடவுள் பரந்து விரிந்த கடல். அந்தக் கடலில் இருந்துதான் குவளையில் உள்ள நீரும் வந்தது. இதை உணர்ந்து அந்த குவளை நீர் தன் அகங்காரத்தை களைய வேண்டும். கடலாகவே ஆகிவிட வேண்டும்.
மாறாக மனித உயிர் கடவுள் அல்ல என்றால் கடவுளைத் தவிர வேறு பொருள்களும் உலகில் உண்டு என்றாகி விடும். அதாவது பல பொருள்களில் கடவுளும் ஒன்று என்று ஆகிவிடும். அவருக்குக் தொடர்பில்லாமல் அந்த பல பொருள்களும் உருவாகின என்றாகி விடும். அப்படி இருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியாது. எல்லாமே அவர்தான் என்னும் போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா?ஞானிகளும் பக்தர்களும் ‘ கடவுளே நான்’ எனும் போது அவை அகங்கார வார்த்தைகள் அல்ல’  என்றார்.
ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை புரிய வைத்த காஞ்சி மஹாபெரியவருக்குத் தன் வணக்கங்களை தெரிவித்தாள் பத்மாசினி.
................
அன்று கமலாபாய்க்கு மனம் சரியில்லை. ஏதோ தவறு நடப்பது போல் தென்பட்டது. கணவனுக்குத் தெரியாமல் ரசவாதக் கல்லை ராதாபாய்க்கு கொடுத்தது தவறு எனத் தோன்றியது. மறுநாள் அதை வாங்குவதாக கூறினாலும் கல்லை வாங்கும் நோக்கில் ராதாபாயின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
    அங்கே ராதாபாய் அழுவதைப் பார்த்தாள். ‘என் கணவர் ரசவாதக் கல்லை நதியில் வீசுவார் என எனக்குத் தெரியாமல் போச்சே... இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் உன்னிடம் அந்த கல்லை வாங்கி இருக்கவே மாட்டேன்.  உன்னிடம் மன்னிப்பு கேட்கக் கூட வெட்கமாக இருக்கிறது’’ என்று கண்ணீர் விட்டாள் ராதாபாய்.
    தன் வீட்டுக்குத் திரும்பினாள் கமலாபாய். நடந்ததை எல்லாம் கேள்விப்பட்ட அவளது கணவர் மனைவியை திட்டினார். வெறி பிடித்தவர் போல் சந்திரபாகா நதியை நோக்கி ஓடினார்.
     அங்கே நின்றிருந்த ராதாபாயின் கணவர் நாமதேவரைப் பார்த்து ‘ கல்லை என்ன செய்தீர்கள்?’ என சத்தமிட்டார்.  ‘அற்பமான பொருள்களின் மீது ஆசையை உண்டாக்கும் அந்தக் கல் தேவையில்லை என்று அதை நதியில் வீசினேன்’ என்றார் நாமதேவர் அமைதியாக.
     பாகவதர் பைத்தியம் பிடித்தவர் போல் ‘அந்த கல் என்னுடையது. எனக்கு அது தேவை. அதை நீ எப்படி வீசி எறியலாம்? என் கல்லை தந்தே ஆக வேண்டும்’  என்று கத்தினார்.
    ‘என்னைப் பொறுத்தவரை ரசவாதக் கல்லும் இதோ இந்த மணலும் ஒன்றுதான். இந்தா எடுத்துக் கொள்’ என்றபடி அங்கிருந்த நதிக்கரை மணலில் ஒரு பிடி எடுத்து பாகவதரின் கையில் கொடுத்தார்.
    எரிச்சலுடன் அந்த மணலை கீழே வீசி எறியப் போன பாகவதர் திகைத்தார். அந்த மணல் முழுவதும் தங்கத் துகள்களாக மின்னின.
     வேகமாக நாமதேவரை நெருங்கினார். ‘என்ன கல்தான் வேண்டும் என கேட்கப் போகிறீர்களா? அல்லது என்னை அடிக்கப் போகிறீர்களா?’ எனக் கேட்டார் நாமதேவர். ‘எனக்கு நல்வழி காட்டினீர்கள்’  என காலில் விழுந்தார் பாகவதர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar