Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உயிர்த்தெழுந்த குழந்தை
 
பக்தி கதைகள்
உயிர்த்தெழுந்த குழந்தை


உயிர் பெற்ற கைகள் - உயிர்த்தெழுந்த குழந்தை
ஸந்த் சோபான தேவர் எழுதிய ‘சரீர நிர்மள’ எனத் தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள்.  
‘ஏ மனிதா... உடல் சுத்தமாக இருந்தாலும் மனதில் உள்ள எண்ணங்கள் தீயவையாக உள்ளனவே. உண்மையான பக்தி இல்லாத நீ ஏன் பிதற்றுகிறாய்? அனைத்திலும் பிரம்மமாக நிறைந்திருக்கும் ஹரி உன் பலவீனத்தை அறியாதவனா? நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களிலும் அவன் சமமாகப் பரவியுள்ளான். குருவின் உபதேசமே பரிசுத்தமானது. அவரது எண்ணங்களே பண்பட்டவை.

பண்டரிபுரத்தை நோக்கி செல்லும் வாரக்ரீ யாத்திரை பற்றி பத்மநாபன் விளக்கத் தொடங்க, பத்மாசினியும் குழந்தைகளும் ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினர்.
    ‘ஆலந்தியில் இருந்து பண்டரிபுரத்துக்கு யாத்திரை செல்வதையே வாரக்ரீ என்கிறோம்.
ஆலந்தியில் உள்ள சித்தேஸ்வரர் கோயிலின் கலசம் எப்போது அசையும் என பக்தர்கள்  காத்திருப்பார்கள். கலசத்தின் அசைவு என்பது ஞானேஸ்வரின் யாத்திரைத் தொடக்கத்துக்கான உத்தரவாகும். கலசம் அசைந்ததும் விட்டல விட்டல என்னும் நாமம் விண்ணை எட்ட, யாத்திரை தொடங்கும்.
    வரிசைக்கிரமமாக திண்டிகள் எனப்படும் குழுக்கள் அணி வகுத்துச் செல்லும். இவற்றில் டிரக் போன்ற வாகனங்களில் சமையல் பாத்திரங்கள் இடம் பெறும். பாதியில் நடக்க முடியாத பக்தர்கள் இந்த வாகனங்களில் ஏறிக் கொள்வர். இந்த ஊர்வலத்தில் ரதத்தில் ஞானேஸ்வரரின் பாதுகைகள் எடுத்து வரப்படும். அந்த ரதம் பண்டரிபுரத்தை அடைந்ததும் விட்டலன் கோயிலைச் சுற்றி வரும். யாத்திரையில் விட்டலனின் குறித்த அபங்கங்களைப் பாடியபடி வருவார்கள். இதை அடுத்து கோராகும்பரின் சரிதத்தைச் சொல்ல ஆரம்பித்தார் பத்மநாபன்.
..................
தன் மூத்த மகள் கணவருடன் இல்லற வாழ்வு நடத்தவில்லை என்பதை அறியாதிருந்தார் அப்பாவி மாமனார். மூத்த மகளைப் போலவே இளைய மகளையும் நடத்த வேண்டும் என மருமகன் கோராகும்பரிடம் சத்தியம் வாங்கினார் - அதுவும்  விட்டலன் மீது!
     அதனால் தன் இரண்டாவது மனைவியிடமும் இல்லறத்தை தவிர்க்கத் தொடங்கினர் கோராகும்பர். ஒரு கட்டத்தில் தன்னைத் தொடாத கணவனை எண்ணி இளைய மனைவி கண்ணீர் சிந்த, அவளது சகோதரியான மூத்த மனைவி விஷயத்தைக் கேட்டறிந்தாள். உடனே கணவரிடம் நீதி கேட்டாள். ‘விட்டலன் மீது ஆணையாக என்னைத் தொடாதீர்கள்’ என முன்பு நான் கூறியதாகச் சொல்லி என்னை விலக்கி வைத்தீர்கள். ஆனால் என் தங்கையை ஏன் தவிர்க்கிறீர்கள்? இது தர்மமா?’ என கோபத்துடன் கேட்டாள். கோராகும்பரோ ‘இதற்கு நான் காரணமல்ல. என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்ட உன் தந்தையே காரணம்’  என்றார். அதன் பின்னணியை விளக்கினார் கோராகும்பர். பத்மாவதி அதிர்ச்சியடைந்தாள்.
    நடந்த அத்தனையையும் தங்கையிடம் கூற  அவளும் திகைத்தாள். என்ன செய்வதென தெரியாமல் மூவரும் நாட்களை நகர்த்தி வந்தனர். ஒருநாள் இரவு துாங்கும் போது இளைய மனைவியின் கை தவறுதலாக கோராகும்பரின் கைகள் மீது பட்டது. சட்டென விழித்த கோராகும்பர், ‘பகவான் மீது செய்த ஆணையை மீறி விட்டோமே... என்ன செய்வேன்?’ எனக் கதறியபடியே தன் கைகளை வெட்டிக் கொண்டார். அவரது மனைவியர் கதிகலங்கி நின்றனர். பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசித்தால் நிம்மதி கிடைக்கும் என தீர்மானித்த கோராகும்பர் உடனடியாக கிளம்பினார். மனைவிகள் இருவரும் மனம் நொந்தனர்.  அந்த விட்டலனே தங்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என அவர்களும் கணவருடன் புறப்பட்டனர்.
     விட்டலன் சன்னதியில் பக்தர்கள் கண்களை மூடியபடி பாடிக் கொண்டிருந்தனர்.  கோராகும்பரால் பரவசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களை மூடியபடி பாடத் தொடங்கினார். அவர் உடல் நடுங்க கால்கள் நடனமாடின. ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் கோராகும்பரின் கைகள் மேலே உயர்ந்தன! விட்டலன் அருளால் கைகள் சரியாகி விட்டதை உணர்ந்தார். கோராகும்பரின் முதல் மனைவி பத்மாவதி. ‘இவ்வளவு பெரிய அதிசயத்தை என் கணவருக்கு நடத்திக் கொடுத்தாயே விட்டலா... உன் புகழ் பாடி என் கணவர் ஆடியதால்தானே என் குழந்தை உயிரிழந்தான். அவனையும் உயிர்ப்பித்துக் கொடு?’ எனக் கதறினாள்.
     அப்போதே ‘அம்மா’ என மழலைக் குரல் கேட்டது. பத்மாவதியை நோக்கி தவழ்ந்து வந்து கொண்டிருந்தான்.  பத்மாவதியும், கோராகும்பரும் மகனைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
‘‘கோராகும்பா, உன் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டவே இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தன. என்றாலும் உன் மனைவியருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. என் மீது செய்த சத்தியங்களை நானே விலக்குகிறேன். இல்லறத்தில் ஈடுபடு’’ என அசரீரி ஒலித்தது. பின் அவர்கள் மூவரும் குழந்தையுடன் ஊருக்குத் திரும்பினர். நல்ல குடும்பத் தலைவனாக கடமைகளைச் செய்தபடியே பக்தியுடன் வாழ்ந்தார் கோராகும்பர்.  அவர் இயற்றிப் பாடிய அபங்கங்களும் விட்டல பக்தர்களால் இன்றும் பண்டரிபுரத்தில் பாடப்படுகின்றன.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar