Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உண்ணாவிரதமும் மருந்தே
 
பக்தி கதைகள்
உண்ணாவிரதமும் மருந்தே

 
எப்படி சாப்பிட வேண்டும் என சொல்லிக் கொடுத்த நம் சனாதன தர்மம், சாப்பிடாமல் இருப்பது எப்படி என்றும் வழிகாட்டுகிறது. ஆம்... உபவாசம் இருப்பது. உபவாசம் என்றால் கடவுளுக்கு அருகில் இருப்பது என்பது பொருள். ‘உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘பசித்திரு! தனித்திரு! விழித்திரு’ என்பார் வள்ளலார்.
தொடர்ந்து செயல்பட்டு வரும் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வளிக்கும் செயலே விரதம். நாம் அனைவரும் டூவீலர், போர் வீலர்கள் வைத்துள்ளோம். அவற்றை அவ்வப்போது மெக்கானிக்கிடம் கொடுத்து ஓவர் ஆயில் செய்கிறோம். அது போல உடலும் பிறந்தது முதல் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்கிறது. இதன் அருமை உணராமல் தொடர்ந்து பயன்படுத்துவதோடு அதைச் சீரழிக்கும் செய்ல்களையும் நம்மை அறியாமல் செய்கிறோம்.

உடல், மனநலத்தை நம் பாரம்பரிய குருகுலக் கல்வி வழங்கியது. அதில் அதிகாலை எழுந்து உடற்பயிற்சிக்கான ஆசனம், மூச்சப்பயிற்சி, மன ஒருமைப்பாட்டிற்கான தியானம் ஆகியவற்றை சிறுவயதிலேயே கற்றுத் தந்து வாழ வழிகாட்டினர். இந்த முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே சிதைத்தனர். வயிற்றுக்குச் சோறு தேடும் கல்வியைத் திணித்ததோடு உடல்நலம், மனநலத்தை புறக்கணிக்கும் மெக்காலே கல்விமுறையால் இத்தனை மருந்துகளும், மருத்துவமனைகளும் நம் நாட்டில் உண்டாயின. அது ஒருபுறம் இருக்கட்டும்.
உள்ளுறுப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்று, மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகுப்பதே விரதம். சனாதனம் என்பது வாழ்வியல் நெறிமுறை என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆம். வழிபாட்டுடன் கலந்து விரதத்தைத் தந்தார்கள்.  
சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை, சோமவாரம், வியாழக்கிழமை, ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி என அடிக்கடி விரதங்களைக் கடைப்பிடித்தவர்கள் நம் முன்னோர்கள். இதனால் மாதத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டனர்.  
சென்ற தலைமுறை வரை ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. பகுத்தறிவு என்னும் பெயரால் சிதைக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. 15 நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி வரும். அதாவது பவுர்ணமி அல்லது அமாவாசையில் இருந்து பதினோராம் நாள். அன்று முழுவதும் உண்ணாமல் இருந்து மறுநாள் அதிகாலையில் குளித்து வழிபாடு செய்து உண்ணும் வழக்கம் இருந்தது. அந்த உணவிலும் கூட அவர்களின் அறிவியல் சிந்தனை வியக்கத்தக்கது. ஆம். ஒருநாள் முழுக்க விரதம் இருந்ததால் வயிற்றுப்புண் உண்டாகாமல் இருக்க மறுநாள் உணவில் தயிர், நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய்களைச் சேர்த்தனர். அகத்திக்கீரையும், சுண்டைக்காயும் புண்ணை ஆற்றும்.  தயிரும், நெல்லிக்காயும் வைட்டமின் சி சத்தால் மீண்டும் உற்சாகத்தைத் துாண்டும். உடல் மட்டுமல்ல; வழிபாட்டால் நம் மனமும் புதுப்பிக்கப்படுகிறது.  

ஏகாதசி விரத மகிமையில் அம்பரீஷ மன்னரின் வரலாறு சிறப்பானது. அம்பரீஷர் ஏகாதசி விரதத்தை தவறாமல் மேற்கொள்பவர். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று சாப்பிடத் தயாரானார். அந்நேரத்தில் துர்வாச மகரிஷி அரண்மனைக்கு வந்தார். ‘நானும் உன்னுடன் விரதம் முடிக்க விரும்புகிறேன்; கொஞ்ச நேரம் காத்திரு’ எனச் சொல்லி நீராடச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதனால் நியமப்படி விரத்தை முடிக்க துளசி தீர்த்தம் மட்டும் குடித்தார் மன்னர். அப்போது அங்கு வந்த மகரிஷி கோபமுடன், ‘ எனக்காக காத்திருக்காமல் விரதத்தை முடித்த உன்னை அழிக்கப் போகிறேன்’ என்று சொல்லி பூதம் ஒன்றை ஏவினார். அம்பரீஷனோ திருமாலைச் சரணடைந்தார். அவரது சக்கராயுதம் பூதத்தை கொன்றோடு துர்வாசரையும் விரட்டியது. பயந்து போன மகரிஷி திருமாலைச் சரணடைந்த போது, விரத நியமத்தைச் சரிவர பின்பற்றும் அம்பரீஷனைச் சரணடைந்திடு’’ என அசரீரி ஒலித்தது
அதன்படியே துர்வாசரும் உயிர் தப்பினார் என்பது வரலாறு. உடலுக்கு மட்டுமல்ல. மனம், உயிரையும் காக்கும் சக்தி கொண்டது விரதம் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.   
விரதங்களை இளைய தலைமுறையினரிடம் மீண்டும் விதைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar