Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அங்காளம்மன்
  ஊர்: புதுச்சேரி
  மாவட்டம்: புதுச்சேரி
  மாநிலம்: புதுச்சேரி
 
 திருவிழா:
     
  ஆடி அமாவாசை, ஆடிவெள்ளிக்கிழமைகளில் வழிபாடு  
     
 தல சிறப்பு:
     
  வழக்கமாக அம்மன் கோவில்களில் அம்மன் முன்பாக சிம்மம்தான் காணப்படும். ஆனால் இங்கே சிவனுக்குரிய நந்தி காணப்படுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் சின்ன சுப்பராயப் பிள்ளை தெரு, புதுச்சேரி.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர், விநாயகர், ஐயப்பன், காமாட்சி அம்மன், குண்டலினி மகரிஷி, துர்கை, பாவாடைராயன், செல்லி அம்மன், காளிகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  வம்பு வழக்குகள் போன்ற சிக்கல்களைச் சீக்கிரமாய் தீர்த்து வைத்து, பக்தர்களுக்கு பிரச்சனையற்ற வாழ்வை அளிப்பவள் அங்காளம்மன். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி நேர்த்திகடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இக்கோயிலின் கோபுரங்கள் மிக அழகானவை. பல வண்ணங்களில் பல தெய்வங்களின் திருவுருவங்களை நிர்மாணிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாகத் திகழ்கன்றன. கோயிலின் உள்ளே நுழைந்ததுமே, மூலஸ்தானத்தில் அங்காளம்மன் வீற்றிருக்கிறாள். பிராகாரத்தை வலம் வரும்பொழுது, லட்சுமி, நாராயணர் தரிசனம் தருகிறார்கள். இவர்களுக்கு அடுத்து வீரத்துடன் ஒரு கையை ஓங்கி உயரத் தூக்கி இருக்கும் வீர ஆஞ்சனேயர்; இரு கைகள் கூப்பி மானசீகமாக ஸ்ரீராமரை வணங்கும் பக்த அஞ்சனேயர் உள்ளனர். கோவிலுக்கான நிர்மாணப் பணியின்போது கிணற்றில் தூர் வாரினர். அப்பொழுது சுயம்புவாகக் கிடைத்தவர்கள் இவர்கள். ஒரு அடி உயரம்கூட இல்லாத இவர்களது திருவுருவங்கள் பேரழகு! இதை அடுத்து வினைகள் தீர்க்கும் விநாயகரின் திருவுருவம் உள்ளது. அடுத்து நமக்கு தரிசனம் தருபவர் ஐயப்ப சுவாமி! ஐம்புலன்களை அடக்கி ஆண்டு விரதம் பூண்டால் ஐஸ்வரியங்களை அள்ளித் தரும் ஐயப்பனை வணங்கியபின் அடுத்து காட்சி கொடுப்பவள் காமாட்சி அம்மன்! ஞாயிற்றுக்கிழமைகளில் காமாட்சி அம்மன் சன்னதியில், திருமணமாகாத ஆணோ-பெண்ணோ மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணமாலையை சூட்டி மகிழ்வாள் காமாட்சி அம்மன். இவளை வேண்டிக்கொண்டு திருமணமாலை பெற்று பெருவாழ்வு வாழும் பக்தர்கள் பலர்! குண்டலினி மகரிஷி இத்தலத்திற்கு வருகை தந்து மேலும் பெருமையை அளித்தவர். அந்த மகரிஷியின் திருவுருவமும் இங்கே நிறுவப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

மற்றொரு சன்னதியில் துர்க்கை அம்மன் வீற்றிருக்கிறாள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்குச் செய்யப்படும் ராகு கால பூஜை மிக விசேஷமானது. இங்கே பாவாடைராயன் எனும் காவல் கண்டவர்களின் கண் கண்ட தெய்வம் அம்மை நோய் நம் உடலிலும் முகத்திலும் போடும் கொப்புளங்களை முத்துப் போடுதல் என்பார்கள். பக்தர்களுக்கு முத்து போட்டுவிட்டால், இந்த செல்லி அம்மனிடம் சென்று வேண்டிக்கொள்ள வேண்டும். செல்லி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. நம்மீது போடப்பட்டுள்ள முத்துக்களை (அம்மை) செல்லி அம்மன் தன் கையில் வாங்கி ஒரு பையில் போட்டுக் கொள்கிறாள் என்பது ஐதீகம். இந்தப் பைக்கு முத்துப்பை என்று பெயர். சன்னிதிக்கு மேற்புறம், அம்மன் கையில் முத்துப்பை உள்ள திருக்கோலத்தைக் காணலாம். அம்மை நோயை மூன்று வார காலத்திற்குள் முற்றிலுமாக குணமாக்குவாள் இந்த செல்லி அம்மன்.

செல்லி அம்மனுக்கு அடுத்த சன்னிதியில் குடிகொண்டிருப்பவள் காளிகாம்பாள்! இந்த அம்மனின் உருவம் சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. வாழ்க்கையில் சாய்ந்து, சரிந்து போகக்கூடிய நிலையில் கஷ்டப் படுபவர்களைத் தாங்கிப் பிடித்து நிறுத்துவதற்காக இவள் சாய்ந்திருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்னேற்றப் பாதைக்கு நம்மை முன்வந்து அழைத்துச் செல்லும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

 
     
  தல வரலாறு:
     
  அங்காளம்மன் பல ஊர்களில், பல கோயில்களில் குடிகொண்டும் வரம் கொடுத்து வருகிறாள். தன் கோயிலைத் தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மாபெரும் சக்தியும் பேரருளும் பெற்றவளுமான அங்காளம்மன் வீற்றிருக்கும் ஓர் அற்புதக் கோயில் புதுச்சேரியில் அமைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வழக்கமாக அம்மன் கோவில்களில் அம்மன் முன்பாக சிம்மம்தான் காணப்படும். ஆனால் இங்கே சிவனுக்குரிய நந்தி காணப்படுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar