Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரத்யங்கிராதேவி (அபராஜிதா)
  ஊர்: மொரட்டாண்டி
  மாவட்டம்: புதுச்சேரி
  மாநிலம்: புதுச்சேரி
 
 திருவிழா:
     
  நவராத்திரியில் பத்து நாள் உற்சவம், அமாவாசை, பவுர்ணமி , கோகுலாஷ்டமி அன்று காளி பிறந்ததால் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, பவுர்ணமி தோறும் நவ ஆபரண பூஜை, தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் இரவு பூஜை இங்கு சிறப்பு.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி - 605 111, புதுச்சேரி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-413-320 4288 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்தில் பிரளய விநாயகர், பாதாள பிரத்யங்கிரா தேவி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்கிரீவர், சண்டிகேஸ்வரர், அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், வாஸ்து பகவான், தன்வந்திரி, பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டீ, உக்ர நரசிம்மர், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், காலபைரவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதி உண்டு.  
     
 
பிரார்த்தனை
    
  மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம். அத்துடன் வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம். 
    
 தலபெருமை:
     
  அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள். இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள்  சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன்  கூடிய கோயில் அமைந்துள்ளது.

இங்குள்ள பிரளய விநாயகருக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது. அத்துடன் 1008 தேன் கலச அபிஷேகம், ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது. விநாயகரின் கருவறை விமானம், "கஜபிருஷ்ட விமானம் ஆகும். அதே போல் பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் "மகா மேரு' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் தொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த தலம் இது.

பூஜைகள் :
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள்,  லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள்,வேதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  ராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.

இந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இத்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar