Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஞான தண்டாயுதபாணி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஞான தண்டாயுதபாணி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஞான தண்டாயுதபாணி
  ஊர்: பாப்பன் குளம்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சஷ்டியும் கிருத்திகையும் மாத விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றது.கந்தர் சஷ்டி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பங்குனி உத்திரம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் மற்றுமொரு சிறப்பு ஞான தண்டாயுதபாணி சுவாமியைத் தவிர வேறு எந்த பரிவார தெய்வங்களும் இல்லை. கோஷ்டத்தில் எந்த தெய்வங்களும் இல்லை. ஒரு ஸ்தலத்தில் மூல மூர்த்தியாக மட்டும் ஒரே தெய்வம் இருந்தால் ஆற்றல் அனைத்தும் அவருக்கே என சான்றோர்களின் வாக்கு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை -சஷ்டி காலை 6.00 முதல் இரவு 9.00 வரை தொடர்ந்து திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஞான தண்டாயுதபாணி திருக்கோயில். பாப்பன்குளம் திருப்பூர்  
   
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் பழநியைப் போன்றே மேற்குமுகமாக  அமைந்துள்ளது கிழக்கு நோக்கிய வாயிலும் உள்ளது. கிழக்கு பக்கமாக இருக்கும் மதிற் சுவற்றின் மீது வள்ளி திருமண சுதைச் சிற்பங்கள் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் கன்னிமூலையில் ஞான விநாயகர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.

மேற்கு நுழைவு வாயிலை அடுத்து தீபஸ்தம்பமும், நேர்த்தியாக விமானத்தடன் கூடிய மயில் மண்டபமும் எழிலுடன் திகழ்கின்றது. அடுத்துள்ளது எட்டுத் துண்களுடன் கூடிய விலாசமான மகா மண்டபம் அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் பழநி முருகனை ஒத்த உருவத்துடன், புன்னகை ததும்பும் முகத்துடன் அழகே உருவான கோலத்தில் தண்டத்தை ஏந்தி அருளாட்சி புரியும் முருகனை அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடைநீங்க 12 செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை செய்து பாயசத்தை நைவேத்தியமாகப் படைத்து அரளி பூவால் அர்ச்சனை செய்து வழிபட தடைநீங்கி திருமணம் நடைபெறுகிறதாம். ஞான தண்டாயுதபாணி சுவாமி ஞானத்தை வழங்கும் வள்ளலாகத் திகழ்கின்றார். பள்ளி செல்லும் குழந்தைகள் குறிப்பாக தேர்வு எழுதச் செல்லும் முன் இவரை வணங்கி ஆசிபெற்று செல்கின்றனர் முருகன் வரபிரசாதியாக திகழ்கின்றார். மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அதை நிறைவேற்றி வைப்பதில் ஞான தண்டாயுதபாணிக்கு நிகர் வேறு எந்த தெய்வமும் இல்லை எனும் அளவிற்கு பக்தர்கள் நம்பிக்கை வைத்து தவறாது கோயிலுக்கு வந்து தொழுது செல்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  12 செவ்வாய் கிழமைகளில் புத்ர காமேஷ்டி யாகம் செய்து தொழுதுவர குழந்தை பாக்கியம் கிட்டுகிறதாம். 
    
 தலபெருமை:
     
  பழநி மலையின் அருகே 28 கி.மீ. தொலைவில் அமைந்த ஊர் ஆதியில் பெரும்அளவில் பிராமணர்கள் வசித்து வந்ததால் இவ்வூருக்கு பாப்பான் குளம் எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.  இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை நன்கு உணரமுடிகின்றது. சிவாகம முறைப்படி பூஜைகள் நடந்து வருகின்றன.  தைப்பூச நன்நாளில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவர். அன்று ஞான தண்டாயுதபாணிக்கு 100 லிட்டர் பால் கொண்டு பாலாபிஷேகம் நடப்பது விசேசம். கந்தர் சஷ்டி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பங்குனி உத்திரம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை வள்ளி  தெய்வயானை சமேதரராய் திரு வீதி உலா வரும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும். மாலையில் நடைபெறும் திருகல்யாண உற்சவம் பக்தர்கள் பக்திபரவசத்துடன் கலந்து கொள்வதுடன் பெருமானுக்கு சீர் வரிசைகள் செலுத்துவது மனதைவிட்டகலாத நிகழ்வு.
 
     
  தல வரலாறு:
     
  பாப்பான்குளம் பழநியிலிருந்து கொழுமம் வழியாக உடுமலைப் பேட்டைக்குச் செல்லும் பாதையில் உள்ளது. பாப்பான் குளத்தில் வசிக்கும் முருகபக்தர்கள் அடிக்கொரு முறையும், கிருத்திகை, சஷ்டி, மற்றும் முருகனுக்குகந்த விழாக் காலங்களிலும் பழநிக்குச் சென்று வருவது வழக்கம். அப்போது எல்லாம் பஸ் வசதி கிடையாது. மாட்டு வண்டி சைக்கிள் போன்ற வாகனங்களில்தான்  சென்று வருவர். செல்லும் போதெல்லாம் பழநி கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாது சுவாமிகள் திருமடத்திற்குச் சென்று உணவருந்தி விட்டு வருவர். சாது சாமிகள் அம்பிகை உபாசகர் திருமடத்தில் பைரவர் திருசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒரு தொழிலதிபரின் மனைவி உடல் நலம் குன்றி இருந்த நிலையில் சுவாமியின் ஆலோசனைப்படி 8 அடி உயரம் உள்ள  விஜயபைரவர் சிலையை நிறுவி பூஜித்ததன் பலனாக மனைவி பூர்ண சுகம் பெற்றார். மேலும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த பலரும் இங்கு வந்து முறைப்படி பூஜித்து பலன் பெற்றுள்ளனர். சாது சுவாமிகள் இன்று இல்லை என்றாலும் திருமடம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடதக்க அம்சம். பாப்பான் குளத்திலிருந்து அடிக்கொரு முறை பக்தர்கள் வந்ததால் சுவாமிகளிடம் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

காலப்போக்கில் பாப்பான் குள பக்தர்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக பழநி கோவிலுக்கு சென்று தரிசிக்க முடியவில்லை. தற்போதுள்ள அதிநவீன இழுவைரயில், கம்பிவட ஊர்தி போன்ற வசதிகள், மலைமேல் செல்வதற்கு அந்தக் காலத்தில் இல்லை. உடல் உறுதி உள்ளவர்கள் மட்டும் தான் சுமார் 690 படிகள் ஏறி மலையை அடைய முடியும். ஓரளவு பலம் உள்ளவர்கள் யானைப் பாதை வழியாகச் செல்லலாம்.

வயது முதிர்ச்சியால் பழநி மலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் ஒரு குழுவாக சாது சுவாமிகளைச் சந்தித்து தங்கள் இயலாமையை தெரிவித்தனர். ஆற்றாமையால் நேர்ந்த மனக்குமரலையும் பதிவு செய்தனர். இதனைக் கேட்ட சுவாமிகள் சற்றே யோசித்து மலர்ந்த முகத்துடன், நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் பழநி முருகனைப் போன்றே ஒரு சிலை தயாரித்து உங்கள் ஊரிலேயே ஒரு கோயிலைக் கட்டித்தருகிறேன். நீங்கள் அங்கேயே பழநிமுருகனை தரிசித்துக் கொள்ளலாம். கோயில் கட்டுவதற்கு ஒரு இடத்தைத் தேர்வு செய்து கொடுங்கள் என்றார். அனைவரும் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்.

பக்தர்கள் ஊர் திரும்பியவுடன் முதல் வேலையாக  கோயில் கட்ட ஏற்ற நிலத்தைத் தேர்வு செய்தனர். விபரத்தை சாது சுவாமிகளுக்குத் தெரிவித்தனர். ஒரு நல்ல நாளில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டிட வேலைகளைத் துவங்கினர். அதே நேரம் சாது சுவாமிகள் ஞான தண்டாயுபாணி சிலையைச் செய்ய ஏற்பாடு செய்தார்.

கட்டிட வேலைகள் பூர்த்தியான பின் ஒரு நல்ல நாளில் ஞான தண்டாயுதபாணி சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்து சான்றோர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ந்து பூஜைகளும், முருகனுக்குகந்த விழாக்களும் நடைபெற்று வருகின்றன.

இவ்வூர் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஊரிலேயே பழநி முருகனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தனர். மிகச் சிறிய கோயிலாக  ஆரம்பத்தில் கட்டப்பெற்ற கோயில் பிற்காலத்தில் பக்தர்களின் பங்களிப்பில் அற்புத கோயிலாக ஊருவெடுத்தது.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மற்றுமொரு சிறப்பு ஞான தண்டாயுதபாணி சுவாமியைத் தவிர வேறு எந்த பரிவார தெய்வங்களும் இல்லை. கோஷ்டத்தில் எந்த தெய்வங்களும் இல்லை. ஒரு ஸ்தலத்தில் மூல மூர்த்தியாக மட்டும் ஒரே தெய்வம் இருந்தால் ஆற்றல் அனைத்தும் அவருக்கே என சான்றோர்களின் வாக்கு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar