Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோவர்த்தனாம்பிகை
  ஊர்: பெருமாநல்லூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் 11 நாள் பிரம்மோற்ஸவம், ஆனித்திருமஞ்சனம், சனிப்பெயர்ச்சி,நவராத்திரி, சிவராத்திரி, திருக்கார்த்திகை.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்- 641 666, திருப்பூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 421 235 0544, 235 1396. 
    
 பொது தகவல்:
     
 

நுழைவு வாயில் மண்டபத்தின் மையத்தில் எருது வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அம்மையப்பர், பன்னிரு கைகளில் ஆயுதங்களுடன் தெற்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் , கீழ் வலக்கையில் எழுத்தாணிக்கொம்புடன் மேற்கு நோக்கியபடி விநாயகர், பின்புறம் சனீஸ்வரர் ஆகியோர் தனித்தனிச் சன்னதிகளிலும், சுற்றுப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்து அருள்புரிகின்றனர்.


 
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் உச்சிப்பகுதியில் சிங்கமுக உருவம் கொண்ட திருவாசியின் மீது நின்ற கோலத்தில் தலையில் கடிண்ட மகுடத்துடன், மேற்கு நோக்கியபடி கைகளில் தாமரை, குவளைகள் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள். அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் பெரும்பழனம்' என்றும் பெரும்பழனாபுரி' என்றும் வழங்கப் பட்டது.

காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டது. சோழமண்டலத்தைச் சேர்ந்த பொன்னம்பலக்கூத்தன் என்பவர் இத்தலத்தையும், இங்குள்ள விநாயகர் கோயிலையும் புதுப்பிக்க தானம் செய்துள்ளார். அவரது பெயரால் இவ்வூர் கூத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் சிறந்த பக்தரான சுந்தரரும், அவரது நண்பர் சேரமானும் இணைந்து வந்து இவ்விடத்தில் சுவாமியை பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர். ராஜராஜ உத்தம சோழன், உத்தமசோழவீரநாராயணன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டதால் இங்குள்ள இறைவன் உத்தமலிங்கேஸ்வரர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
அழகிய சிற்பங்களைத் தாங்கிய தூண்களில் சிவராத்திரி கொண்டாடும் காரணத்தை விளக்கும் காட்சி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், வீரபாகு, மனைவியுடன் நம்பிராஜர் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  ஒரு காலத்தில் மக்கள் தெய்வ பக்தியை அறவே மறந்து வெறுக்கத்தக்க பாவச்செயல்களில் ஈடுபட்டனர். நல்லோர் அழிந்து, தீயோர் பெருகினர். இதனால், கடுங்கோபங்கொண்ட சிவபெருமான் மனிதர்களின் மீது மண்மாரியை பொழிவித்தார். பூமியே அழியும் நிலைக்கு வந்தது. அப்போது சிவபக்தர்கள் சிலர், மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு நற்புத்தி கொடுத்து பாவ விமோசனம் தந்து அழிவிலிருந்து காத்தருளும்படி பார்வதி தேவியிடம் வேண்டினர்.

கருணை கொண்ட அம்பாள், மக்களுக்காக சிவனிடம் வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுதலுக்கு சிவன் சம்மதிக்கவில்லை. இதனால் அம்பாள் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்து பெரும்பழனம் என்ற வில்வமர காட்டில், சிவனை நோக்கி மேற்கு திசையைப் பார்த்தபடி கடுந்தவம் இருந்தாள். அவளது தவத்திற்கு மதிப்பளித்த சிவபெருமான் இவ்விடத்தில் அம்பாளுக்கு காட்சி தந்தார். அம்பாள் அங்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயருடன் அமர்ந்தாள். சிவன் உத்தமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவானார். பிற்காலத்தில் சோழமன்னர்கள் இங்கு கோயில் எழுப்பினர்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar