Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சாந்தநாதர்
  அம்மன்/தாயார்: வேதநாயகி
  தீர்த்தம்: பல்லவன் குளம்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
  ஊர்: புதுக்கோட்டை
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:00 – மதியம் 12:00 மணி, மாலை 4:30– இரவு 8:30 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில் புதுக்கோட்டை 622001  
   
போன்:
   
  +91 4322 221492, 99420 75863 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சரபேஸ்வரர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  முன்வினை பாவம், கிரக தோஷம் ,  திருமணத்தடை நீங்க, கடன் பிரச்னை தீர பிரார்த்தனை செய்யப்படுகிறது.

 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும், அம்மனுக்கும் அபிேஷகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து  12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும்.

 
     
  தல வரலாறு:
     
 
பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.

காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர  காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும்.  தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar